அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்!
றை முஸ்லிம் ஜமாத் மன்றத்தால் திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்றால்,
“அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா.. என்ற துவா கண்டிப்பாக ஓதப்பட வேண்டும், இல்லை என்றால்
திருமணம் நடத்தி வைக்கப்பட மாட்டாது. அதையும் மீறி மர்கஸ் நிர்வாகத்தினரை கொண்டு நபி வழி திருமணம் நடத்திவைக்கப்பட்டால், அந்த திருமண வீட்டாருக்கு பல விதமான தொல்லைகளும், மன உளைச்சளும்
கொடுக்கப் பட்டுவருகின்றன.
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அந்த “அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா.. என்ற துவாவில் என்னதான் உள்ளது
ஆதம்(அலை) அவர்கள் தொட்டு, நமது நாயகம்(ஸல்) அவர்கள் வரை உள்ள நபிமார்களும் அவர்களின் மனைவியும் போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். (பல நபிமார்களின் பெயர்களை விட்டு விட்டார்கள், நேரம் போதாது என்று) இதில் என்ன தவறு? என்று எண்ண தோன்றலாம்.
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறி அதில் எப்படி பட்ட தவறு உள்ளது என்பதை விளக்க விரும்புகின்றோம்.
நூஹ்(அலை) அவர்களும் அவர்களின் மனைவியும் போல் வாழ்க என்று மணமக்களை வாழ்த்தும் ஒரு வரி உள்ளது,
அந்த நூஹ்(அலை) அவர்களின் மனைவி யார்? என்பதை அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.
“நிராகரிப்பவர்களுக்கு நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனவியையும், அல்லாஹ் உதாரணமாக்கிவைக்கிறான். அவ்விருவரும் நம் அடியார்களில் உள்ள இருநல்லடியார்களின் கீழ்(மனைவிகளாக) இருந்தனர். எனினும், அவ்விருவரும் (தன் கணவர்களான) அவ்விருவருக்கும் மோசம் செய்தனர். எனவே, (தூதர்களான) அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை.(அவர்கள் மோசம் செய்ததன் காரணமாக, அவர்களிடம்) “(நரக) நெருப்பில் நுழைபவர்களுடன் நீங்கள் நுழையுங்கள்” என்று கூறப்பட்டது
அல்குர் ஆன் 66:10 (ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
நூஹ்(அலை) அவர்களின் மனைவியை இறைவன் நரகத்தில் தூக்கி போட்டுவிட்டதாக கூறுகின்றான்.
“அந்த இருவரும் போல் வாழுங்கள்” என்று மணமக்களை வாழ்த்துகிறார்களே,
இது தேவையா…?
- தங்கள் வீட்டு திருமண அழைப்பிதழ் அடிக்கும்போது அதிகமானோர், தெரிந்தோ தெரியாமலோ கீழ் கண்ட துவாவினை தவறாமல் இடம் பெறச்செய்வதை காண்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது, "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்", என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599 ஆனால், அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் துவாவைதான் திருமணத்தின் இறுதில் ஓதுவோம், இல்லாவிட்டால் திருமணத்தை நடத்தமாட்டோம் என்று தீர்ப்பு வழங்குபவர்களும், அதற்காக வாதிட்டு வெற்றி பெறுபவர்களும் … அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா என்ற துவாவை தங்கள் இல்ல திருமண அழைப்பிதழில் போடுவதில்லை.
- அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அ அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வ ஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வ சுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா, வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் *பொருள்:* அல்லாஹ்வே ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே நூஹ் (அலை) மற்றும் ஃபாரிஸா (அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே இப்ராஹீம்(அலை) மற்றும் சாரா(அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே மூஸா (அலை) மற்றும் ஸஃபூரா(அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே அய்யூப்(அலை) மற்றும் ரஹிமா(அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே யூசுஃப்(அலை) மற்றும் ஸுலைஹா(அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே முஹம்மது(அலை) மற்றும் மூத்தவரான ஹதீஜா(ரலி) மேலும் பரிசுத்தவரான ஆயிஷா(ரலி) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக. அல்லாஹ்வே அலி(ரலி) மற்றும் ஃபாத்திமா(ரலி) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்தியது போன்று (மணமக்களாகிய) இவ்விருவருக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவாயாக.