Tuesday, June 28, 2011

'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!


'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!
உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?   உண்மையான  நண்பர்களுக்கு   பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே    நண்பர்களாக  உள்ளார்களா?  அந்தக கற்பனைப்பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறீர்கள்  என்று அர்த்தம்.

நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும்,  கண்கள் ஒடுங்கியும்  காணப்பட்டான்.  அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே  தெரிந்தது.  "இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல்  கவனக்குறைவாக இருக்கிறான்,  ஏதோ வித்தியாசம் தெரியுது அவங்கிட்ட". என்று கவலைப்படுகிறார்கள் அப்துல்லாவின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
அப்துல்லாவின் அம்மா ஆரிஃபா  சொல்லும்போது,   "அப்துல்லா எப்பவுமே டிவியே பார்த்துக்கிட்டு  இருப்பான்.  ஸ்கூல்  தோழமார், கூட்டாளிங்களப்   பத்தி  பேச வேண்டிய சமயத்திலயும் ... டிவியில வர்ற   BEN-10 , POKMAN பத்தியே பேசுறான் .  பள்ளியிலும் கூட, இதே மாதிரி ரசனைகள்  கொண்ட வகுப்புத் தோழர்களோட  மட்டுமே பேசுறானாம்."

இதன் விளைவு அப்துல்லாவுக்கு  உண்மையான நண்பர்களே இல்லை என்று ஆயிற்று.
 அவனுக்கு கற்பனை நண்பர்கள் மட்டுமே.  அந்தக் கற்பனைப் பாத்திரங்களுக்கு  அவன் அடிமையானது  மட்டுமில்லாமல் பிடிவாதமாகவும் இருந்தான்.

"குழந்தைப் பருவத்தில் தொலைக்காட்சி பார்ப்பது,  எதிர்காலத்தில் கவனமின்மையை ஏற்படுத்துகின்றது" என்கிறார் சியாட்டிலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பிராந்திய மருத்துவ மையத்தின் குழந்தைநல மருத்துவ ஆய்வாளர், மருத்துவர் டிமிட்ரி கிரிஸ்டாக்கிஸ் (Dimitri Christakis). அவரது ஆய்வின் படி : ஒரு வயதிலிருந்து மூன்று வயதுவரை உள்ள குழந்தைகள்  தினமும் ஒரு மணிநேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதின் மூலம்,  அவர்களது ஏழு வயதில், பத்து சதவிகிதம் கவனக்குறைவிற்கு ஆளாகின்றார்கள்.  தினமும் மூன்று மணி நேரம் தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகள்,  ஏழு வயதாகும்  போது, தொலைகாட்சி பார்க்காத குழந்தைகளைக் காட்டிலும், முப்பது சதவிகிதம் கவனக்குறைவாக இருக்கின்றார்கள். இவ்வாறு அதிகமாக தொலைகாட்சி பார்ப்பதால்,  பார்வை கோளாறுகள் ஏற்படுவது மட்டுமன்றி,  வேறுபல மனரீதியான குறைகளும்  அதாவது, கவனக்குறைவு, உண்மை வாழ்க்கைநிலையை ஏற்றுக்கொள்ளாத தன்மை இவற்றுடன்  நண்பர்களிடம், நிதர்சனத்திற்கு மாறான எதிர்பார்ப்புகள் ஆகியவையும் உருவாகின்றனவாம்.
நல்ல பழக்கத்தைப் பயிரிடுங்கள்

ஒரு குழந்தை தன் முதல் இரு ஆண்டுகளிலேயே,  மூளை வளர்ச்சி விகிதம் சிறப்படையப் பெறுகின்றது.    குழந்தைகளைப்  பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் விளையாட  வைத்தல்  மற்றும் பேசவைத்து வெளிக்கொண்டு வருவது மூலமே,  சமூகத்துடன் அவை ஒன்றுவதற்கு செய்ய முடியும்.  தொலைகாட்சியின் மிகப்  பெரிய தாக்கம்,   மூளையை உணர்ச்சி வசப்படுத்தி அதிகமான  தூண்டுதலுக்கு ஆளாக்குகின்றது.  குழந்தைகள்  எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சியைப்  பார்க்கின்றார்களோ, அவ்வளவு அதிகமாக மனக்கிளர்ச்சி, அமைதியின்மை  மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகிய பாதிப்புக்குள்ளாகின்றார்கள்  என்று கண்டறியப்பட்டுள்ளது.   காரணம் என்னவெனில், நமது இயற்கையான வாழ்வியல்  முறைக்கு மாறாக,  தொலைக்காட்சியில்   உள்ள நிகழ்வுகளும்,  நடவடிக்கைகளும், துரிதமான காட்சி மாற்றங்களும் தான்.   இப்படி திடிரென, இயற்கைக்கு மாற்றாக ஒரு குழந்தை உள்ளாக்கப்படும்போது,  அதனுள் நரம்பியல் தொடர்மாற்றங்கள் ஏற்படுகின்றது.  ஒரு குழந்தை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மெய்மறப்பதால்,  அதன் நரம்புகள்  வளர்ச்சி குன்றுகின்றனவாம்.
தொலைக்காட்சி ஒன்றும்  உங்கள் குடும்ப அங்கத்தினர் அல்ல!

அன்பார்ந்த பெற்றோர்களே!
சாப்பாட்டு நேரம்,  குடும்பத்தின் நேரமாக இருக்கவேண்டும், குறிப்பாக இரவு நேர சாப்பாட்டு நேரம்.   இந்த நேரத்தில் மட்டும் தான் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் ஒன்றாக அமர்ந்து   அன்றைய நிகழ்வுகளைப் பரிமாறிக்கொண்டு, மகிழ்வுடன்  சாப்பிட முடியும்.  இத்தகைய குடும்பப் பரிமாற்றங்கள், குழந்தையின் மன வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகின்றது.
வேலை நேரத்தில் வேலை, விளையாட்டு நேரத்தில் விளையாட்டு:

பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதின் மூலம், பிள்ளைகளுக்குப்  படிப்பில் இருக்கும் கவனத்தைச் சிதறச் செய்கின்றார்கள். பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சியை அணைப்பது பொறுப்பான பெற்றோர்களின்  கடமையாகும். இதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்:

பள்ளிப்பாடங்கள், விளையாட்டுகள் மற்றும் வேலையின் பொறுப்புகள், ஆகியவற்றுக்கிடையே தொ கா நிகழ்ச்சிகள் -  இப்படி  உங்களுக்குக்  குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் சிரமமாக இருக்கலாம்.  அப்படியான சமயங்களில் தொலைக்காட்சியின் முக்கியமான நல்ல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து பிறகு பார்ப்பதின் மூலம், தொலைக்காட்சியின்  முன் நீங்கள் அமரும் நேரம் மிகவும் குறைகின்றது. இதனால் அதிகமான நேரம்   உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு  ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
மாற்றுவழிகளை கொடுங்கள்:

தொலைக்காட்சிக்குத்  தொடர்பில்லாத  புத்தகம் படித்தல், விளையாட்டு  பொருட்கள், புதிர்  விளையாட்டுக்கள்   போன்ற பல பொழுதுபோக்குகளில்  உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துவதன்  மூலம் அவர்களுடன் தரமான நேரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  வெளியே சென்று விளையாடுவது மற்றும் கைவின பொருட்கள் செய்யும் பொழுதுபோக்குகளையும்  கற்றுக் கொடுங்கள்.
முறைப்படுத்துங்கள்:

குடும்பத்துடன் காணக்கூடிய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை  நிரல்படுத்தி குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒட்டிவையுங்கள்.  அந்த நிகழ்ச்சிகள்  முடிந்ததும், தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.
உடன் இருந்து பாருங்கள்:

குழந்தைகளைத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதாக இருந்தால், அவர்களுடன் நீங்களும் இருந்து பார்க்கும் நிலையில்  அனுமதியுங்கள்.  தங்களின் வேலை காரணமாக முழுமையாக இருக்க முடியாவிட்டால், முதல் சில மணித்துளிகளாவது இருந்து நிகழ்ச்சியின்  நெறியினைக் கவனியுங்கள். இடையிடையேயும் கவனியுங்கள்.
ஒரு சிறப்புரிமை பெறவேண்டும் :

தொலைக்காட்சி பார்ப்பதற்கு முன்,  வீட்டுப்பாடங்கள்  மற்றும் பணிகளை முடித்தபிறகே பார்க்க முடியும் என்று நிபந்தனை விதித்து அதை முறைப்படுத்துங்கள்.
சேனலைப் பூட்டி வையுங்கள் :

பெரும்பாலான  குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான  சேனல்களைத் திருட்டுத்தனமாக பார்ப்பதற்காக ஒலி அளவை குறைத்து வைத்துக்கொண்டு பார்ப்பார்கள்.  இதனால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம்.  ஆகையால்  அத்தகைய  சேனல்களைப் பூட்டி வையுங்கள். குழந்தைகள்  அவர்களின் தனி திறனை உணரும்  விதமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்.  தொலைக்காட்சி மூலம் பெறப்படும் அறிவு முறையாக  நெறிபடுத்தபடாவிட்டால், அது தேக்கமடைந்துவிடும். தொலைக்காட்சியால்  நல்ல பயன்களும் உள்ளன. ஆனால் வயதிற்கு மீறிய வெளிப்பாடுகள், அவர்கள் மூளை  வளர்ச்சிக்குப் பாதகமாக அமைந்துவிடும்.

ஆகவே,

ஒரு பெற்றோராக நாம்  சிறந்த ஒரு அடிப்படையைக் கையாளவேண்டும் எனில் நம் குழந்தைக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக  தொலைக்காட்சியை அணைத்து விடுவதே நல்லது.
(The Hindu  இதழில்  GEORGE MATHEW & DR. SUJA K. குன்னத் எழுதிய கட்டுரையைத் தழுவியது.
'பார்வை'க்களித்த Shafee shaik  அவர்களுக்கும் நன்றி.)

விண்ணுலக பயணம்



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1
இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
 
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.
 
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
 
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
 
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
 
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
 
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
 
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது.[நூல்;புஹாரி எண் 3207 ]
 
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். [முஸ்லிம்]

இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்;
  1. ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான்.
  2. அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
  3. ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
  4. அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
  5. ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன்.அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]
படிப்பினைகள்எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 304 ]
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861 

படிப்பினைகள்;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!

அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்)இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

வரலாற்றின் ஒளியில் ரஜப்



                                         வரலாற்றின் ஒளியில்  ரஜப்     

     இஸ்லாமிய மாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.    இம்மாதத்தில் நடைபெற்ற    பல்வேறு    சம்பவங்கள்இஸ்லாமிய     வரலாற்றில் பதிவு    செய்யப்பட்டுள்ளன.   போர் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு  மாதங்களில் ரஜப் மாதமும் அடங்கும்.நபி(ஸல்) அவர்களின்  மிçராஜ்  பயணம்  இம்மாதத்தில் நடந்தேறியது. அல்லாஹ் கூறுகிறான்:-
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير
(அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன்.அவன் தன்னுடைய  அடியாரை çபத்துல்லாஹ் விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில்அழைத்துச் சென்றான்.(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் பரகத்து செய்திருக்கின்றோம்.நம்முடைய அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக அவரை அழைத்துச் சென்றோம்.   நிச்சயமாக  அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும்பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.                                               (பனி இஸ்ராயீல் : 1.

   நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு  அளித்துவந்த  அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் மற்றும் அவர்களின் அருமை மனைவியான கதீஜா  (ரலி) ஆகியோரின் மறைவால்   நபி(ஸல்) அவர்கள் துயருற்றிருந்தார்கள்.    குறைஷிகளிடமிருந்து வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.    இந்த காலகட்டத்தில் தான் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் விண்ணுலகிற்கு அழைத்துச்சென்று தன்னுடைய அத்தாட்சிகளை காண்பித்தான். நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னர் தலைமைப்பொறுப்பு பனி இஸ்ராயீல் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. çபத்துல்லாஹ்விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு  அழைத்து சென்ற நிகழ்ச்சியானது தலைமைப்பொறுப்பு    நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு அவர்களின் உம்மத்திற்கு கிடைக்கப்போகிறது என்பதை யூதர்களுக்கு உணர்த்தியது.  இஸ்ரா- வ- மிçராஜ்  சம்பவத்திற்கு பின்னர்  நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணியிலே முன்னேற்றம் ஏற்பட்டது. அவ்ஸ்கஸ்ரஜ் மக்களிடமிருந்து  நபி(ஸல்) அவர்களுக்கு அதன் துவக்கம் ஏற்பட்டது. அவர்களின் உதவியோடு மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள்.

   இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற போர்களிலே தபூக் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில்   தபூக் போர்  நடைபெற்ற காலகட்டம் மிகக் கடுமையான கோடை காலமாக இருந்தது. முஸ்லிம்கள் மிகுந்த சிரமத்திலும்,பஞ்சத்திலும்வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும் அது பேரீத்தம் பழங்களின் அறுவடைக் காலமாகவும் இருந்தது.    அதேபோன்று   மதீனாவிலிருந்து  நீண்ட தூரம் பயணித்து  ஷாம் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது இஸ்லாமிய நிலப்பகுதிக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அரசிற்கு மாபெரும் பின்னடைவை தரும்  என்பதால் நபி(ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் இஸ்லாமிய வீரர்கள் தபூக் களத்தை நோக்கி அணிவகுத்தார்கள். ஆனால் ரோமர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அஞ்சி நடுங்கியவர்களாக இஸ்லாமிய இராணுவத்தை சந்திக்க துணிவின்றி சிதறி ஓடினார்கள்.ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்களெல்லாம் இனி முஸ்லிம்களுக்கு தான் அடிபணிந்து வாழவேண்டும் என்று உணர்ந்தனர். இவ்வாறாக இஸ்லாமிய எல்லைப்பகுதி  நாளுக்கு நாள் விரிவடைந்து ரோமப்பகுதிக்கு சென்றடைந்தது.

 ஐரோப்பிய  சிலுவைப்படையினரின்  ஆக்கிரமிப்பில் ஒரு நூற்றாண்டு காலம் இருந்த முஸ்லிம்களின் முதல்  கிப்லாவான அல்குத்ஸ் (ஜெருசலேம்)  இம்மாதத்தில் தான் மீட்கப்பட்டது.  ஹிஜ்ரி 583 ரஜப் மாதத்தில்  மாவீரர் சலாஹுதீன் அய்யூபி( ரஹ்)அவர்களின் தலைமையில் அடைந்த இம்மாபெரும் வெற்றியானது ஐரோப்பியர்களை   குலைநடுங்கவைத்தது. அதன் பிறகு அதனைஎதிரிகளால் நெருங்க இயலவில்லை.முதல் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் பாலஸ்தீனை உஸ்மானியா கிலாçபத்திலிருந்து பிரிட்டன் ஆக்கிரமித்தது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யூபிக்காக அல்குத்ஸ் ங்கிக்கொண்டிருக்கிறது.

   இம்மாதத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வாக   ஹிஜ்ரி 1342  ,ரஜப்  28 (மார்ச் 3, கி. பி.1924 )   ல் முஸ்தபா கமால் பாஷா என்ற    துரோகியின் மூலம்  கிலாçபத் வீழ்த்தப்பட்டது .முஸ்லிம்களின் ஒரே தலைமையாகிய விளங்கிய  கிலாçபத் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருந்தன. கிலாçபத் வீழ்த்தப்பட்டதோடு  முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே தலைமையும் பறிபோனதால் இஸ்லாத்தின் எதிரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவர்களின் வெறுப்புணர்வை அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படையாகவே உமிழ்ந்தனர்.இது குறித்து அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு கிலாçபத்தை வீழ்த்திய  பின்னர்  1924 ஜூன் 24  ல் லாஸன்  மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு முஸ்லிம்களின் மீதான  தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்தார்.
"முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோபண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது.ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம் ".
     
ஆங்கிலேயர்க்கு எதிராக அழைப்பு விடுத்தமைக்காகவும்அன்றைய உஸ்மானியா கிலாஃபத்திற்கு  ஆதரவாக  அழைப்பு விடுத்தமைக்காக வும் 1911  முதல்   1915    வரை தன்னுடைய வாழ்வை சிறையில் கழித்த மௌலானா முஹம்மது அலி ஜவஹர் தலைமையில்தான் 1919  ஆம் ஆண்டு கிலாஃபத் இயக்கம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. கிலாçபத்தை வீழ்த்த பிரிட்டன் துடிதுடித்துக் கொண்டிருந்தபோது அதை கட்டிக்காக்க இந்திய துணைக்கண்டத்து முஸ்லிம்கள் அரும்பாடுபட்டனர். கிலாçபத் இயக்கத்தில் உலமாக்களும் பங்கு பெற்றிருந்தனர். கிலாஃபத் வீழ்த்தப்பட்ட மறு தினம் மௌலானா முஹம்மது அலி ஜவஹர்பின்வருமாறுகூறினார்.
கிலாஃபத்  நிர்மூலமாக்கப்பட்டு விட்டதால் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் என்னென்ன  விளைவுகள்  ஏற்படும்  என்பது கணிக்கமுடியாத ஒன்றாகும். இதனால்  இஸ்லாத்திற்கும்அதன் நாகரிகத்திற்கும் மாபெரும் அழிவு ஏற்படும் என்று என்னால் உறுதியாக கூற இயலும். இஸ்லாமிய ஒற்றுமையின் அடையாளமான  மதிப்புமிக்க அமைப்பை தகர்ப்பது என்பது இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கும்.தனித்துவமிக்க இந்த கட்டமைப்பு தகர்க்கப்பட்டுவிட்டதால் பிரிவினைக்கும் மக்கள் புரட்சிக்கும் வழிவகுத்து விடும் என்று நான் அஞ்சுகிறேன்.    மார்ச் ,  1924  டைம்ஸ் )

முஸ்லிம்களின் கட்டமைப்பை சிதைத்ததோடு இஸ்லாத்தின் எதிரிகள் அடங்கவில்லை.  இஸ்லாமிய நிலப்பகுதியை பலநாடுகளாக கூறுபோட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைத்தார்கள்.அவர்களின் விருப்பம்போல் செயல்படும் கைப்பாவைகளை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தினார்கள் அவர்களின் ஏஜண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கு மாற்றமான முதலாளித்துவ சித்தாந்தம் முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது. முஸ்லிம்களின் உயிர் ,உடைமைகண்ணியம் ஆகியவற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்தவர்களை ஒடுக்கினார்கள். இந்த உம்மத் மறுமலர்ச்சிக்காக தன்னை தயார் படுத்திவருகிறது என்பதை முஸ்லிம் உலகில் இப்போது நடைபெற்று வரும் போராட்டங்கள்  உலகிற்கு உணர்த்தி வருகிறது.  இந்த எழுச்சி மிகு போராட்டங்கள் கிலாஃபத் தின் மீள் வருகைக்கான பாதையை  எளிதாக்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.

நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கிலாஃபத்  வரும் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்.   
                 ثم تكون خلافة على منهاج ا لنبوة
........நுபுவ்வத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலாஃபத்  ஏற்படும்.     
  (முஸ்னத் அஹ்மத்)

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்


சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.

சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.


மேலும் அறிய


ரஜப் மாதத்தில் பித்அத்' எனும் நூதனமான அனுஷ்டானங்கள்


ரஜப் மாதத்தில் பித்அத்' எனும் நூதனமான அனுஷ்டானங்கள் 

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும்து, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து,தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ் திருக்குர்ஆனின் 9ஆவது அத்தியாயமாகிய 'தவ்பா'வின் 36ஆது வசனத்தில் கூறுகின்றான்:
"திண்ணமாக அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்குப்) பன்னிரண்டுதாம்(இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்வின் (பதிவுப்புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்டுஉள்ளதுஅவற்றுள் நான்கு(மாதங்கள்) புனிதமானவையாகும்இதுவே நேரான மார்க்கமாகும்ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் ..."

அல்லாஹ் இந்த நான்கு புனித மாதங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதில் பாவங்களும் தீமைகளும் ஏற்படாவண்ணம் தவிர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளான்.

"நம்பிக்கையாளர்களேஅல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களையும் சிறப்பான மாதங்களையும் ...(அவமதிப்பதை) ீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள் ..." (5:2).

அதாவது, பாவமான காரியங்களைத் தவிர்ப்பதையும் அல்லாஹ் சிறப்பித்தவற்றுக்கு மாசு கற்பிப்பதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் புனித மாதங்களைக் கண்ணியப் படுத்திடுமாறு அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளான்இந்தத் தடையும் கட்டளையும் பாவமான காரியங்களில் கவனமாக இருப்பது போல் தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயல்பாடுகளை விலக்குவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளதுஆனால் நம்மில் பலர் கண்ணியமான இந்த ரஜப் மாதத்தின் பெயரால் விசேஷமான நோன்புகள், 27ஆம் நாளன்று விசேஷமான தொழுகைகள், (கப்ருஸ்தான்)அடக்கஸ்தலத்தை தரிசித்து அங்கு விசேஷ துக்கள் ஓதுதல்இம்மாதத்தில் சிறப்புள்ளது என்று கருதி விசேஷமாக உம்ராக்கள் செய்தல் போன்ற நபிவழி(ஸுன்னத்து)க்கு மாற்றமான பல்வேறு நூதன அனுஷ்டானங்களை நன்மை பெற்றுத் தரும் காரியமாக கருதிஇஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் இம்மாதத்தில் நிறைவேற்றுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்ற நபிவழியில் இல்லாதகுர்ஆனுக்கும் நபிவழி(ஸுன்னத்து)க்கும் மாற்றமான புதுமையான காரியங்களைச் செயல்படுத்துவது மிகவும் தீங்கான ஒன்றாகும்ஏனெனில் நபி(ஸல்அவர்கள் அல்லாஹ்வினால் மார்க்கம் முழுமை படுத்தப்பட்ட பின்னரே மரணித்தனர்.

"... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூணமாக்கி விட்டேன்மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்" (5:3).

அன்னை ஆயிஷா (ரழிஅவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்அவர்கள் கூறினார்கள்:

"எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது" (முஸ்லிம் 3242).

ரஜப் எனும் இம்மாதத்தில் பல 'பித்அத்எனும் நூதனமான அனுஷ்டானங்கள் (மற்றும் நம்பிக்கைகள்)நன்மை தரும் எனும் பெயரால் நடைமுறையில் உள்ளன அவற்றில் சில.

1) ஸலாத்துல் ரகாஇப் எனும் நூதனத் தொழுகை

இது சிறப்பான நூற்றாண்டுகளான ஆரம்பகால நூற்றாண்டிற்குப் பிறகு குறிப்பாக ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதுசில பொய்யர்கள் இதை ரஜபுப் பிறை ஒன்றில் தொழ வேண்டும் என்று அறிமுகப்படுதினார்கள்.

ஹதீஸ்கலை வல்லுனர்கள் பெரும்பாலும் இதை பித்அத் என்று நிராகரித்துள்ளனர்இமாம் அபு ஹனீஃபா,ஷேக் இப்னு தைமிய்யாஇமாம் மாலிக்இமாம் ஷாஃபீஇமாம் அஃத்ஃதவ்ரீ போன்ற பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

2) இம்மாதத்தின் முக்கியமான சம்பவங்களாகக் கூறப்படுபவை

இம்மாதப் பிறை ஒன்றில்தான் நபி முஹம்மத்(ஸல்அவர்கள் பிறந்தார்கள்; 27 அல்லது 25ஆம் நாளன்று அவர்களுக்குத் தூதுத்துவம் வழங்கப்பட்டது போன்ற அனைத்துமே தவறானஆதாரமற்ற கூற்றுகளாகும்.

3) ப்-ஏ-மிஃராஜ்

நபி(ஸல்அவர்களின் மிராஃஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை ஷப்-ஏ-மிஃராஜ் எனும் பெயரில் கொண்டாடுவதுரஜப் மாததின் 27ஆம் நாளில் மிஃராஜ் நடைபெற்றதாக உள்ள ஒரு பலவீனமான செய்தியின் அடிப்படையில்முஹம்மத் நபி(ஸல்அவர்களின் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்நமக்குத் தரும் படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் மிஃராஜ் இம்மாதத்தில் நடந்ததாகக் கருதி அதைச் சிறப்பாகக் கொண்டாடுதல்.

இந்நாளைச் சிறப்பிக்கும் முகமாக இந்நாளில் விசேஷ நோன்பு நோற்பதுஇரவு முழுவதும் விசேஷத்தொழுகைகள் தொழுவதுஅதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 100 முறை ஆயத்துல் குர்ஸி, 100 முறை குல் ஹுவல்லாஹு போன்ற சூராக்கள் ஓதி தொழ வேண்டும் போன்ற நபிவழி ஆதாரமற்ற அமல்களைப் பலர் செய்கின்றனர்இது மிகப் பெரும் வழிகேடு ஆகும்புதிய வகைத் தொழுகைகளைப் புகுத்துவதுநபி(ஸல்அவர்கள் நமக்கு நன்மையைப் பெறும் செயலைஅதாவது மார்க்கத்தை முழுமையாகக் காட்டித் தரவில்லை என்று கூறுவதற்குச் சமமாகும்.

இன்னும் சிலர் அவர்கள் மிஃராஜ் என்று நம்புகின்ற நாளை இஸ்லாமிய விழாக்களில் ஒன்றாகவே கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறதுஅதிலும் ஆண்-பெண்கள் கலந்து பெண்கள் ஹிஜாபின்றி வெளியில் செல்வதுஹராமான முறையில் பாடல்கள் பாடுவதுகலந்துரையாடுவது போன்ற இதர தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறதுஇது இஸ்லாம் அனுமதித்துள்ள இரு பெருநாட்களிலும் அனுமதிக்க படாத ஒன்று எனும்போது இதுபோன்ற பித்அத்தான விழாக்களின் நிலை என்ன என்பதை விளக்கத் தேவை இல்லைஇவை அனைத்தும் ரஜப் மாதத்தின் 27ஆம் நாளில் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

மிஃராஜ் எனும் பயணம் இன்ன நாளில்தான் நடந்தது என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை. எனில், இவ்வாறு மனம்போனபடிக் கொண்டாட நமக்கு எவ்வித அனுமதியுமில்லைஏனெனில் நபி(ஸல்)அவர்களோ அவர்களுடைய அருமைத் தோழர்களான ஸஹாபாக்களோ இவ்வாறு நமக்குக் காட்டித்தந்ததாகவோ செய்ததாகவோ எந்த ஆதாரமுமில்லை.

4) பல்வேறு ஆதாரமற்ற துஆக்களை ஓதுவது

ரஜப் மாதத்தில் ஓதவேண்டியவை என்ற பெயரில் பல்வேறு துஆக்களை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இவை அனைத்தும் நபி வழி ஆதாரமற்ற பித்அத்துகளாகும்.

5) கப்ருகளுக்கு செல்வது

இம்மாதத்தில் மட்டும் விசேஷமாகக் கப்ருக்களுக்குச் சென்று சில துஆக்கள் ஓதுவதும் பித்அத் ஆகும்.பொதுவாக எல்லா நாட்களிலும் கப்ருகளுக்கு(பொது மையவாடிக்கு)ச் சென்று அங்குள்ளவர்களுக்காகப் பிராத்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்றேமேலும் "கப்ருகளுக்குச் செல்வது மரணத்தின் சிந்தனையை ஏற்படுத்தும்; ஆகையால் கப்ருகளுக்கு செல்லுங்கள்" (திர்மிதீ 974) என்று நபி(ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள்ஆனால் அதை ரஜப் மாதத்தில் மட்டும் செய்வது நபி வழியல்ல.

6) கோன்டே கி நியாஜ்

இந்தப் பெயராலும்இன்னும் சில இடங்களில் பூரியான் பாத்திஹா எனும் பெயராலும் விசேஷ பாத்திஹாக்கள் ஓதி விருந்துகள் என்றும் புனிதமானதாகக் கருதி இனிப்புகளும் உணவும் பரிமாறுவதுஅது நன்மை என்று கருதுவதுஅதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விநியோகிப்பது ஆகிய அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டிய பித்அத்கள் ஆகும்.

7) ரஜப் மாத நோன்பு

இந்த மாதத்திற்கு என்று விசேஷ நோன்பு நோற்க குர்ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமுமில்லை.ஆகையால் வழமையாக நோன்பு நோற்பது என்பது வேறு; இம்மாதத்தின் சிறப்பு நோன்பு என்று கருதி இம்மாதத்தில் நோற்பது என்பது வேறு என்பதையும் உணர வேண்டும்.

8) விசேஷ உம்ராக்கள்

உம்ரா பயணம் மேற்கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றேஆயினும் அதை இம்மாத்தில் செய்வது அதிக நன்மையானது என்று கருதுவது அல்லது இம்மாதத்தில் அதிகமான எண்ணிக்கையில் உம்ரா மேற்கொள்வது ஆதாரமற்ற செயலாகும்.

மேற்கண்டதைப் போன்ற ஒவ்வொரு பித்அத்தான காரியமும் வழிகேடு ஆகும் என்பதை உணர்ந்து நபிவழிக்கு மாற்றமான நம்பிக்கைகளையும் அமல்களையும் செய்வதைக் கைவிட வேண்டும்.இல்லையெனில் "பித்அத்துகள் நரகில் சேர்க்கும்" (திர்மிதீ 1560) என்ற நபி (ஸல்அவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நாமாகவே நரகிற்குச் செல்ல முயல்வதைப் போன்றதாகும்.

ஆகையால் ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்துநபி வழியில் நடந்து,இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாகதற்கு அல்லாஹ் அருள் புரிவானாகஆமீன்.