Sunday, May 29, 2011

Way of Nabihal Nayagam


நபிவழி நடப்போம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” எனக் குறிப்பிட்டார்கள்.

நேசத்தின் வெளிப்பாடு:
நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ஆனால் அந்த நேசம் உண்மை பெற வேண்டும் என்றால் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே இதற்கு இருக்கும் ஒரே வழியாகும். சிலர் தாம் அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறினார்கள்.

அதற்குச் சோதனையாகப் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்;
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந் தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங் களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)
ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான். இந்த இரு பாக்கியங்களும் அவருக்குக் கிட்டும்.
இந்த வசனத்துக்கு அடுத்த வசனம் இப்படி அமைகின்றது;
“அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித் தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.” (3:32)
இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாத காஃபிர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றாவிட்டால் அல்லாஹ்வின் நேசம் கிட்டாத அதே நேரம் அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் எனக் குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கதாகும்.

எப்படிப் பின்பற்றுவது?
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவது என்பது கொள்கை சார்ந்த அமல்கள், அமல்கள் சார்ந்தது, அத்துடன் திக்ர்-அவ்றாது போன்ற வார்த்தைகள் என்பவற்றை உள்ளடக்குவதுடன், செயல்களில் நபி(ஸல்) அவர்கள் விட்டார்கள் என்பதற்காக அவற்றை விடுவதையும் உள்ளடக்கக் கூடியதாகும்.

உதாரணமாகக் கொள்கை விடயத்தை எடுத்துக் கொண்டால் நபி(ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை நம்பியிருந்தால் அதை நாம் நம்ப வேண்டும்; அவர் நம்பியது போன்றும் நம்ப வேண்டும். உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் சுவனம் உண்டு, நரகம் உண்டு என நம்பினார்கள். அதை அப்படியே நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை ஈமானில் முக்கிய அம்சம் எனவும் உணர்த்தியுள்ளார்கள். அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்தே நம்ப வேண்டும். உதாரணமாக ஒருவர் “நான் எல்லாவற்றையும் நம்புகின்றேன்! ஆனால் ஜின்கள் இருப்பதை என்னால் நம்ப முடியாது!” எனக் கூறினால், அவர் கொள்கை விஷயத்தில் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக மாட்டார். அல்லது ஒருவர் தஜ்ஜாலின் வருகையையோ அல்லது ஈஸா(அலை) அவர்கள் இறுதிக் காலத்தில் இறங்குவதையோ மறுக்கின்றார். ஆனால் முறையாகத் தொழுகின்றார் என்றாலும் அவர் கொள்கை விஷயத்தில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியவராக மாட்டார்.
இவ்வாறே, ஒருவர் நபி(ஸல்) அவர்கள் செய்த ஒரு அமலை அவர்கள் செய்த அதே போன்று செய்யாத வரையில்ஃஅவர்கள் செய்த அதே நோக்கத்தில் செய்யாத வரையில் அது நபிவழி நடப்பதாக இருக்காது.
தொழும் ஒருவர் அதை ஒரு உடற்பயிற்சியாக நினைத்துச் செய்தால், நோன்பிருக்கும் ஒருவர் வணக்கமாக இல்லாமல் உடல் மெலிவதற்காக என்ற எண்ணத்தில் செய்தால், அப்போதும் அவர் நபிவழி நடந்ததாக மாட்டாது. நாம் செய்யும் செயலும் நபியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்; நபி(ஸல்) அவர்கள் செய்த அமைப்பில்தான் அதை நாம் செய்யவும் வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் என்ன நிய்யத்தில் செய்தார்களோ, அதே நிய்யத்துடன்தான் செய்யவும் வேண்டும்.

நபிவழி நடத்தல் – சில அடிப்படைகள்:
“நபி வழி நடப்போம்!” எனக் கூறிக் கொண்டே சில வேளை நாம் நபி வழிக்கு முரணாக நடந்து விடலாம். அல்லது நபி வழியை விட நமது அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விடலாம். இதைத் தவிர்ப்பதற்காக நபியை நேசித்தல், நபியைப் பின்பற்றல் அல்லது நபியை ஈமான் கொள்ளல் எனும் போது நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய சில விடயங்களைத் தொட்டுக் காட்டுவது பொருத்தமென நினைக்கின்றேன்.

இஸ்லாத்தின் அடிப்படைகள் வஹீ மூலம் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. அவை பகுத்தறிவின் மூலம் கட்டி எழுப்பப்படவில்லை. எனவே ஆதாரம் உறுதியானால் எமது அறிவுக்குக் காரண-காரியம் ஒவ்வாவிட்டாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது குறித்து இமாம் சுஹ்ரி(றஹி) அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;
“அல்லாஹ்விடம் இருந்து தூதுத்துவம் வந்துள்ளது. அதை எடுத்துரைப்பது அல்லாஹ்வின் தூதரின் கடமை! அதை ஏற்றுக்கொள்வது எமது கடமையாகும்!” (புகாரி)
இது குறித்த இமாம் அபுல் இஸ்(றஹி) அவர்கள் அகீததுத் தஹாவிய்யாவுக்கு விளக்கம் கூறும் போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்;
“நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒன்று எனது அறிவுக்குப் பொருந்தாவிட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்! அறிவுக்குப் பொருந்தினால் மட்டுந்தான் ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் கூறுவாரெனில் அவர் நபியைப் பின்பற்றவில்லை; தனது அறிவையும், மனோ இச்சையையுமே அவர் பின்பற்றுகின்றார்!” எனவே நபி(ஸல்) அவர்கள் கூறியது அறிவுக்குப் பொருந்தினாலும், பொருந்தாதது போன்று தோன்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் செய்யாத, பித்அத்தை ஒருவர் உருவாக்கவோ, செயற்படுத்தவோ முடியாது. அது நபி வழி நடப்பதாகவும் இருக்காது. ஒரு ஸுன்னா ஷரீஆவுக்கு ஒத்துவர வேண்டும் என்றால் பின்வரும் ஆறு விடயங்களுக்கும் அது இசைவாக இருக்க வேண்டும்.

(1) காரணம்:
ஒரு அமலைச் செய்வதற்கான காரணம், அந்த அமல் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும், சரியாகவும் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அச்செயல் ஸுன்னத்தாக மாட்டாது.

உதாரணம், றஜப் மாதத்தின் 27 ஆம் இரவில் சிலர் விழித்திருந்து தஹஜ்ஜத் தொழுகின்றனர். தஹஜ்ஜத் தொழுகை சிறந்த ஒரு வணக்கம் என்பதில் சந்தேகமேயில்லை. இருப்பினும் இந்தத் தஹஜ்ஜத் ஏன் தொழப்படுகின்றது எனக் கேட்டால் அது மிஹ்ராஜுடைய இரவு எனக் காரணம் கூறப்படுகின்றது. இந்தக் காரணத்துக்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை. எனவே தவறான காரணத்துக்காக செய்யப்படும் இந்த நல்ல செயலும் “பித்அத்” என்ற வட்டத்துக்குள் வந்து விடுகின்றது.

(2) இனம்-வகை:
என்ன செய்கின்றோமோ அந்த இனத்துக்கும், வகைக்கும் ஆதாரம் வேண்டும். ஒருவர் மான் அல்லது மரை வளர்க்கின்றார். இவை உண்ணத் தக்க பிராணிகள் என்றாலும் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு மானையோ, மறையையோ அறுக்க முடியாது. உழ்ஹிய்யாக் கொடுப்பவர் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே அறுக்க வேண்டும். இவ்வாறே அகீகாக் கொடுக்கும் ஒருவர் ஒட்டகத்தையோ, மாட்டையோ அறுக்க முடியாது. அதற்கு ஆட்டைத்தான் அறுக்க வேண்டும். மாட்டை அறுத்து உணவு கொடுத்து விட்டு நான் அகீகா எனும் நபி வழியைப் பேணி விட்டேன் எனத் திருப்திப்படவும் முடியாது.


(3) அளவு:
ஒரு செயலுக்கான அளவு எவ்வளவு என்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். லுஹருடைய ஸுன்னத்துத் தொழும் ஒருவர் இரண்டு றக்அத்துகளோ, நான்கு றக்அத்துகளோ தொழலாம். ஒருவர் மூன்று றக்அத்துகளைத் தொழுதால் அல்லது ஆறு றக்அத்துகள் தொழுதால் அது நபி வழியாகாது. குறித்த அளவுக்கும் ஆதாரம் வேண்டும். 10 ஆடுகளை அறுத்து ஒரு குழந்தைக்காக ஒருவர் அகீகாக் கொடுத்தால் அது நபி வழியைப் பின்பற்றியதாக இருக்காது.

தவாஃப் செய்பவர் ஏழு சுற்றுகள் சுற்ற வேண்டும். இவ்வாறே ஸபா-மர்வாவுக்கு இடையில் ஸஈ எனும் தொங்கோட்டம் போவதும், வருவதுமாக ஏழு தடவைகள் ஸஈ செய்ய வேண்டும் என்றெல்லாம் அளவு குறித்து வந்தால் அந்த அளவையும் சேர்த்துப் பின்பற்ற வேண்டும். தவாஃப் செய்வது சிறந்தது தானே என்று கஃபாவைப் பத்து முறைகள் சுற்றிச் செய்து அதை ஒரு தவாஃபாக ஆக்க முடியாது.
கியாமுல்லைல் தொழுகையின் றக்அத்துகள் இத்தனைதான் என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்து இருக்கும் போது அந்த அளவை விட நாமாகச் சில றக்அத்துகளை அதிகரித்து விட்டு அதைக் “கியாமுல் லைல்” ஆக்க முடியாது.

(4) செய்முறை ஒழுங்கு:
ஒரு செயலைச் செய்யும் முறையும் நபி வழியையும், ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். உதாரணமாக வுழூச் செய்யும் ஒருவர் காலைக் கழுவுகிறார்; தலையை மஸ்ஹ் செய்கிறார்; முகத்தையும், கைகளையும் கழுவுகின்றார். வுழூவுடைய எல்லா உறுப்புகளும் கழுவியாகி விட்டது. இப்போது இவர் வுழுச் செய்து விட்டார் என்று கூற முடியுமா என்றால் முடியாது. அனைத்து உறுப்புகளும் கழுவப்பட்டு இருந்தாலும் வுழூவை எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை ஒழுங்கு பேணப்படவில்லை என்பதால் அது வுழுவாக அமையாது. சாதாரணமாக உடலைக் கழுவியதாகவே அமையும்.


(5) காலம்-நேரம்:
ஒரு அமலை உரிய காலத்தில் செய்ய வேண்டும். உதாரணமாக றஜப் மாதத்தில் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் அது உழ்ஹிய்யாவாக முடியாது.

இதில் காலம் மட்டுமல்லாது நேரமும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஸகாதுல் பித்ரைப் பெருநாள் தொழுகை முடிந்து கொடுத்தால் அது ஸகாதுல் பித்ராவாக ஆகாது.
அவ்வாறே ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் கால்நடைகளை அறுத்தால் அது உழ்ஹிய்யாவாகவும் மாட்டாது. காலம், நேரம் இரண்டும் ஆதாரத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது நபி வழியாக மாட்டாது.

(6) இடம்:
செய்யும் இடம் ஆதாரத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் இரவு முஸ்தலிபாவில் தங்க வேண்டிய ஒருவர் மினாவிலோ, அறஃபாவிலோ தங்கினால் அது ஹஜ்ஜாகாது. அல்லது கல்லெறியும் இடத்தை விட்டு விட்டு வேறு இடத்தில் கல் எறிய முடியாது. அல்லது 10,11 இரவுகளில் மினாவில் தங்குவதற்குப் பகரமாக மக்காவில் தங்க முடியாது. பள்ளியில் இஃதிகாஃப் இருப்பதற்குப் பதிலாக வீட்டில் இஃதிகாஃப் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது நபி வழி நடந்ததாகவும் அமையாது.

எனவே, நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் நாம் அவர்களது வாழ்வைக் கற்று, அவரைச் சகல துறைகளிலும் முழுமையாகப் பின்பற்ற முனைவோமாக!

Ziyarath


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்......


(For Gmail recipients & others – having trouble to view this mail full in Tamil , please refer the attached PDF File)

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்கள் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஸுனன் திர்மிதியில் அறிவிக்கப்படும் ஹதீஸ்  
‘கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.
சிறுவிளக்கம்: இஸ்லாத்தின் ஆரம்ப காலக்கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர், ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத்தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.

ஜியாரத் செய்வதின் நோக்கம்:- கப்ருகளில் ஜியாரத் செய்யக்கூடிய ஆண்களின் நோக்கம் மறுமையைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும். ‘கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப்பற்றை நீக்கும், மறுமையை நினைவு படுத்தும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸயீதுல் குத்ரி, நூல்: அஹ்மத்.
கப்றில் உள்ளவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ:- ‘முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ.
‘முஃமினான முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்’
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத் இப்னுமாஜா.
ஜியாரத் செய்யும்போது கவனித்து கடைப்பிடிக்கப்பட வேண்டியவைகள்:- 
* கப்ரு தரைக்கு மேல் உயர்த்தப்பட்டதாக இருக்கக்கூடாது.
* பூசி, மெழுகிய கட்டிடமாக இருக்கக்கூடாது.கப்ரில் அழுது புலம்புவது கூடாது.
* கப்ரில் அடக்கமாகி இருப்பவரிடம் நமது தேவைகளைக் கூறி பிரார்த்திக்கக் கூடாது.
* கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம், நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆச் செய்ய வேண்டும்.
* இஸ்லாத்திற்கு மாற்றமான எந்தக் காரியங்களையும் செய்யக்கூடாது.
தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்யச் செல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி வழங்கிய போது, இறந்தவர்களை அடக்கம் செய்யப்படும் இடங்களுக்குச் சென்று அங்குதான் ஜியாரத் செய்ய அனுமதித்தார்களே தவிர கப்ருகளில் கட்டிடங்கள் கட்டி, பூசி, மெழுகி இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல சொல்லவில்லை. இதுபோன்ற இடங்களுக்குச் சென்று வருவது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறுபவர்களுக்குத் துணை போவது போலாகும் என்பதை பின்வருபவைகள் விளக்குகின்றன.

கப்ருகளை வணங்குவதும், அதனிடம் கையேந்தி நிற்பதும் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவரும் பழக்கமாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் கப்ருகளில் கட்டிடம் எழுப்பி, இன்று நம்மவர்கள் தர்ஹாக்களில் செய்வதைப்போல அதில் விளக்கு ஏற்றி, அதைப் பூசி, மெழுகி, பூஜை போன்ற சடங்குகள் செய்து அவர்களின் நினைவு நாட்களில் திருவிழாக்கள் (கந்தூரிகள்) நடத்தி வந்தனர்.கற்களையும், சிலைகளையும், கப்ருகளையும், இறந்தவர்களையும் வழிபடும் மக்களின் அறியாமை எனும் இருளை அகற்றி சத்தியத்தின் அறிவு எனும் ஒளியை பரப்ப வந்த நபி (ஸல்) அவர்கள், கப்ருகளின் மேல் கட்டிடங்கள் (தர்ஹா, மஸ்ஜிதுகள்) எழுப்பி, அதில் விளக்கு ஏற்றி, பூசி, மெழுகி, கந்தூரி நடத்துபவர்களைக் கடுமையாக சபித்ததோடல்லாமல் அவைகளை அலி (ரலி) அவர்கள் மூலமாக இடித்து தரைமட்டமாக்கினார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றைக் காண்போம்.

ஹதீஸ்:- ‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)
ஹதீஸ்:- ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.
ஹதீஸ்:- ‘கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவூத்.
ஹதீஸ்:- ‘கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும், அதன் மீது கட்டிடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திமிதி.

அவ்லியாக்களின் கப்ருகளில் கந்தூரி விழாக்கள் நடத்தக்கூடாது:-
ஹதீஸ்:- ‘எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.
ஹதீஸ்:- ‘யஹூதிகளும், நஸாராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ரை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
ஹதீஸ்:- உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்துகொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கி விடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன்’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல் பஜலி (ரலி) நூல்: முஸ்லிம்.
தர்ஹாக்களை கட்டுபவர்கள் வேண்டுமானால் ‘நாங்கள் அவ்லியாக்களை வணங்குவதற்காக கட்டவில்லை’என்று கூறலாம். ஆனால் குர்ஆனும், ஹதீஸும் கூறுகிறது.
நேர்ச்சை ஒரு வணக்கமே, அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.
* பிரார்த்தனை ஒரு சிறந்த வணக்கமாகும்.* முறையிடுதல் ஒரு வணக்கமாகும். 
* அறுத்துப் பலியிடுதல் ஒரு வணக்கமாகும்.
* பயபக்தியும் ஒரு வணக்கமாகும்.
* பேரச்சமும் ஒரு வணக்கமாகும்.

இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களான இவைகள் அனைத்தும் அந்த தர்ஹாக்களில் நடைபெறுவதால் அதுவும் வணங்குமிடமாகவே உள்ளது. எனவே, நிச்சயமாக இறைவனுக்கு இணை வைத்து வணங்கப்படும் இடமாகிய இந்த தர்ஹாக்களைக் கட்டியவர்கள் மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நிராகரித்தவர் ஆவார்.
தரைமட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ருகளை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- ‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.

எனவே சகோதர சகோதரிகளே, நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள கப்ருகளில் கட்டிடம் எழுப்பி அதில் செய்யப்படும் அனாச்சாரங்கள் எப்படியோ இஸ்லாத்தின் எதிரிகளால் நமது மார்க்கத்தில் புகுத்தப்பட்டு விட்டது. இஸ்லாத்தைப் பற்றி அடிப்படை அறிவு இல்லாத முஸ்லிம்கள் இதில் ஈடுபட்டு அல்லாஹ், ரஸூலின் (ஸல்) சாபத்திற்கு ஆளாகி, இறைவனிடமிருந்து என்றுமே மன்னிப்பே கிடைக்காத ‘இணைவைத்தல்’ எனும் கொடிய பாவத்தைச் செய்த குற்றவாளியாகின்றனர். அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற குற்றங்கள் புரிவதிலிருந்து காப்பாற்றி நம்மை மன்னிதருள வேண்டும். ஆமீன்



எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி அதில் நிலைத்திருக்க நாம் அனைவரும் அவனிடம் மட்டுமே துஆ செய்து கொள்வோம் 

வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் 
தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்


ü     படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே  வணங்குவோம்  !
ü     அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !
ü     அல்லாஹ்வின் கட்டளை - நமது  கடமை - நன்மையை ஏவி தீமையை தடுப்போம் !

Saturday, May 21, 2011

பித் அத்

பித்அத்தின் தீய விளைவுகள் – 1

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக் கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை. அது போல், பித்அத் பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது. எது எவ்வாறாயினும், பித்அத் புரிவோர் பல பாதிப்புகளை சம்பாதிக்கின்றனர் என்பது நபி(ஸல்) அவர்களின் கண்டிப்பான எச்சரிக்கையாகும். அப்பாதிப்புகளை முறையாக உணர்ந்தால்தான் பித்அத்எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை உணரலாம். எனவே பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து சுருக்கமாகப் புரிந்துகொள்ள முனைவோமாக!


(1) குப்ருக்கு இட்டுச் செல்லுதல்:
பித்அத், குப்ர் அல்ல என்றாலும் அது காலப் போக்கில் குப்ர் ஏற்பட வழி விடுகின்றது. நபியைப் புகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மவ்லூதுகளை உருவாக்கினார்கள்; புகழ்ந்தார்கள். ஷிர்க்கையும், குப்ரையும் ஏற்படுத்தும் அளவுக்கு புகழ் பாக்கள் வரம்பு மீறிச் சென்றன. இறந்து விட்ட நல்லடியார்களை கண்ணியப்படுத்துவதற்காக கப்ருகளைக் கட்டினர். அதுவே இறந்தவர்களிடம் பிரார்த்தனை புரிதல், அவர்களுக்காக அறுத்துப் பலியிடல், அவர்களுக்காக நேர்ச்சை வைத்தல் எனப் பல ஷிர்க்குகளை ஏற்படுத்தியது.

எனவே பித்அத் ஷிர்க்குக்கும், குப்ருக்குமான பாதையைத் திறந்து விடுகின்றது என்ற வகையில் பாரதூரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்பதை மறுக்க முடியாது.

“நீங்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்களின் வழிமுறைகளைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஒரு உடும்புப் பொந்தினுள் நுழைந்தாலும் நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்!” என நபி(ஸல்) கூறினார்கள். நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யூதர்களும், கிறிஸ்தவர்களுமா?” எனக் கேட்டனர். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “வேறு யார்?” எனக் கேட்டார்கள்.
(புகாரி 7320, முஸ்லிம் 2669)

அந்நியர்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த உம்மத் தடம் மாறிச் செல்லும் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டே எப்படி அவர்கள் நிராகரிப்பில் வீழ்ந்தார்களோ அதே நிலை இந்த உம்மத்திலும் தோன்றும்! (யெமனைச் சேர்ந்த) தவ்ஸ் குலத்துப் பெண்கள் சிலைகளைச் சுற்றி வராத வரையில் மறுமை நாள் ஏற்பட மாட்டாது!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 7116, 6699, முஸ்லிம் 2906, 7482)

முஸ்லிம் உம்மத்தில் சிலை வணக்கம் ஏற்படும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரேயடியாக ஏற்படும் தீடீர் மாற்றமாக இருக்காதது. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கத்தை விட்டும் தடம் புரண்டு சென்று ஈற்றில் இந்த நிலைக்கு தவ்ஸ் கோத்திரம் வந்து நிற்கும் என்பதைத்தான் இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.
எனவே பித்அத்கள்தான் இந்த உம்மத்தில் ஷிர்க்கும், குப்ரும் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன என்பது எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டிய அம்சமாகும்.

(2) அல்லாஹ்வின் மீதும், தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்:
பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் அதிகமதிகம் பொய்களை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாதவற்றைச் சொன்னதாகத் துணிந்து கூறுவார்கள்.

இந்த வகையில் பித்அத்துகள் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் இட்டுக்கட்டுதல் என்ற பெரும் குற்றத்துக்கு வழி வகுக்கின்றது.
“அல்லாஹ்வின் விடயத்தில் அறிவின்றித் தர்க்கம் புரிவோரும், மூர்க்கத்தனமான ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுவோரும் மனிதர்களில் உள்ளனர். நிச்சயமாக யார் (ஷைத்தானாகிய) அவனைப் பின்பற்றுகிறானோ அவனை அவன் வழிகெடுத்து, நரக வேதனையின்பால் வழி நடத்துவான் என அவன் மீது விதிக்கப்பட்டு விட்டது.” (22:3-4)
“அறிவின்றியும், நேர்வழி இல்லாமலும், ஒளி பொருந்திய வேதமில்லாமலும் அல்லாஹ்வின் விடயத்தில் தர்க்கம் புரிவோரும் மனிதர்களிலுள்ளனர். அவன் அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காகத் தனது கழுத்தைத் திருப்பிக் கொண்டவன். அவனுக்கு இவ்வுலகில் இழிவுதான். மேலும், நாம் அவனுக்கு மறுமை நாளில் சுட்டெரிக்கும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.” (22:8-9)
“..அல்லாஹ்வின் விடயத்தில் எவ்வித அறிவோ, வழிகாட்டலோ, ஒளி பொருந்திய வேதமோ இன்றி தர்க்கிப்போரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் இறக்கியவற்றையே பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “இல்லை! எமது மூதாதையர்கள் எதி லிருக்கக் கண்டோமோ அதையே நாம் பின்பற்றுவோம் என அவர்கள் கூறுகின்றனர். ஷைத்தான் அவர்களை நரக வேதனையின் பால் அழைத்தாலுமா? (பின் பற்றுவர்?)” (31:20-21)
மேற்படி வசனங்கள் அல்லாஹ்வின் விடயத்தில் தகுந்த ஆதாரம் இல்லாமல் பேசுவது எவ்வளவு பாரதூரமானது என்பதையும், அவர்களது பண்புகள் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பன பற்றியும் பேசுகின்றன.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்!” என இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
(புகாரி 168, முஸ்லிம் 2)

எனவே பித்அத் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல் எனும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் பெருங்குற்றத்துக்குக் காரணமாக அமைகின்றது என்ற வகையிலும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய அம்சமாகத் திகழ்கின்றது.

(3) ஸுன்னாவை வெறுக்கும் மனோநிலை ஏற்படல்:
பித்அத் செய்வோர் ஸுன்னாவை வெறுக்கின்றனர். ஹதீஸ்களைப் புறக்கணிக்கின்றனர். சில போது ஹதீஸ்களையும், ஸுன்னத்துகளையும் கேலி செய்தும், கிண்டல் செய்தும் பேசுகின்றனர். இது பித்அத்தால் ஏற்படும் பெரிய விபரீதங்களில் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதரையோ, அவரது போதனைகளையோ கிண்டல் செய்வதும், கேலி செய்வதும் குப்ரை ஏற்படுத்தும் குற்றங்களாகும்.
“(இது பற்றி) அவர்களிடம் நீர் கேட்டால், “நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங் களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று (நபியே!) நீர் கேட்பீராக!”
“போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம் பிக்கை கொண்ட பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தாலும் மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றம் புரிபவர்களாக இருந்த காரணத்தினால் நாம் தண்டிப்போம் (என்றும் கூறுவீராக!)” (9:65-66)
அல்லாஹ்வையும், அவனது ஆயத்துகளையும், அவனது தூதரையும் கேலி செய்தவர்களைப் பார்த்து நீங்கள் ஈமானுக்குப் பின்னர் நிராகரித்து விட்டீர்கள் என இந்த வசனம் கூறுவதால் அல்லாஹ்வின் தூதரையோ, அவரது போதனைகளையோ கேலி செய்வது குப்ரை ஏற்படுத்தும் குற்றச் செயல் என்பது உறுதியாகின்றது. பித்அத் செய்வோர் இந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.
அடுத்து ஸுன்னாவையும், ஸுன்னாவைப் போதிக்கும் அறிஞர்களையும் பகைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அவர்களை அவமதிக்கின்றனர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.
அறிஞர் இஸ்மாயில் இப்னு அப்துர் ரஹ்மான்(றஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது;

“பித்அத்காரர்களுக்கெனப் பல வெளிப்படை யான அடையாளங்கள் உள்ளன! அவர்களின் வெளிப்படையான அடையாளங்களில் பிரதானமானது நபி(ஸல்) அவர்களது செய்திகளைச் சுமந்திருப்போர் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதும், அவர்களை இழிவுபடுத்துவதுமாகும்!” எனக் குறிப்பிடுகின்றார்கள்.
(அகீதது அஹ்லுஸ் ஸுன்னா வ அஸ்ஹாபுல் ஹதீஸ் 299)

எனவே, பித்அத் செய்வோர் இந்தக் குற்றத்திலும் வீழ்கின்றார்கள். இதுவும் பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகளில் ஒன்றாகும்.

(4) அமல்கள் புறக்கணிக்கப்படுதல்:
பித்அத் செய்வோர் பணத்தையும், நேரத்தையும், காலத்தையும் செலவிட்டு இல்லாத வழிபாடுகளைச் செய்கின்றனர். அவை அத்தனையும் புறக்கணிக்கப்படும் என்பது நபியவர்களது எச்சரிக்கையாகும்.

அல்லாஹ்வினால் அவர்களுக்கு எந்த நற்கூலியும் வழங்கப்படாத அதே நேரத்தில் அவர்கள் தண்டனையையும் சந்திக்க நேரிடும்.
“எமது மார்க்கத்தில் இல்லாததை எவர் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்!” என்ற ஹதீஸ்களும், பித்அத் வழிகேடு என்று என்று கூறும் ஹதீஸ்களும் இதைத்தான் கூறுகின்றன. எனவே பித்அத் செய்வோர் தமது இம்மை-மறுமை இரண்டையும் தாமே அழித்துக்கொள்கின்றனர். ஷைத்தான் நன்மையைக் காட்டி இவர்களை நரகத்துக்கு அழைத்துச் சென்று விடுகின்றான்.

(5) மோசமான முடிவைச் சந்திக்க நேரும்:
தவறுகள் செய்வோர் அவற்றைத் தவறு என்று அறிந்தே செய்கின்றனர். திருடுதல், பொய் சொல்லுதல், விபசாரம் செய்தல் – இவையெல்லாம் ஹறாம் என்பது அனைவருக்கும் தெரியும். இவற்றைச் செய்வோர் தாம் செய்வது தவறு என்பதை உணர்ந்தே செய்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

பித்அத் புரிவோர் நல்லறம் புரிவதாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தவறுதான் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தவ்பாச் செய்யாமல் மரணித்து மோசமான இறுதி முடிவை அடைவர். இந்த வகையில் ஷைத்தானுக்குப் பெரும் பாவங்களை விட பித்அத் விருப்பத்துக்கு உரியதாகும்.
இது குறித்து இமாம் சுப்யான் அத்தவ்ரீ(றஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;

“பெரும் பாவங்களை விட பித்அத்துகள் ஷைத்தானுக்கு விருப்பத்துக்கு உரியதாகும். ஏனெனில் பெரும் பாவங்களிலிருந்து பாவ மன்னிப்புக் கோரப்படலாம். ஆயினும் பித்அத்துகளில் இருந்து பெரும்பாலும் பாவ மன்னிப்புக் கோரப்படுவதில்லை!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(ஷரஹுஸ் ஸுன்னா லில் பகவீ)

எனவே தீய இறுதி முடிவை ஏற்படுத்தக் கூடியது என்ற வகையில் பித்அத் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது.

(6) தலைகீழாக மாறி விடும் பித்அத்காரனின் அறிவு:
பித்அத் செய்வோர் நல்லதைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும் தலைகீழாக விளங்கிக்கொள்வர். மார்க்கத்தில் இல்லாததை மார்க்கக் கடமை போலக் கருதிச் சண்டையும் செய்வர். மார்க்கத்தில் உள்ளதைச் சில போது கண்டுகொள்ளாது விட்டு விடுவர்.

தொப்பி போடாமல் தொழுபவருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவர். பெண்கள் தலை மூடாதது குறித்துக் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த நிலை அவர்களிடத்தில் குழப்பமான ஒரு பார்வையை ஏற்படுத்தி விடும்.
இவர்களின் இந்தத் தவறான புரிதல் பற்றி ஹுதைபா(ரழி) பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“பித்அத் பரவும். அதிலொன்று விடுபடும் போது மக்கள் ஸுன்னா விடுபட்டது என்று கூறுவர்!”
இதே கருத்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். மார்க்கத்தின் ஒரு கடமை விடுபட்டாலும் கவலைப்படாத பித்அத்காரர் ஒருவர் கூட்டு துஆவோ, தல்கீனோ, பாத்திஹாவோ விடுபடும் போது அதற்கெதிராகப் போராடுபவராக மாறி விடுகின்றார். இந்த தலைகீழாக மாறி விளங்கும் போக்கு மடமைப் போக்கு என்பது பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகளில் ஒன்றாகும்.
ஒரு விடயத்தைத் தவறாக விளங்கிக்கொள்தல் தவறில் பாதியாகும். இந்தப் பாவத்தில் இருந்தும் பா(த்)திலில் இருந்தும் விடுபட பித்அத் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Tuesday, May 17, 2011

How to Face and win our Life



வெற்றி பெறுவதற்கு...



1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2.    ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3.   உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4.  வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. அதிகாலையில் எழுந்து விடுங்கள். ஒரு நாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7. முப்பதுகளைக் கடக்கும் முன்மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரைஉப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங் கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங் கள்.
10.   புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட் டும்.
11. வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12. சிறு குறிப்போகடிதமோகட்டுரையோிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்த வரை குறைவாகவே இருக் கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்துபொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளை யும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20. உங்கள் நேரத்திற்கும்மற்றவர்களின் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோநம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிராதீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம்கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்