Monday, November 19, 2012

யார் மணப்பெண்?

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! 

யார் மணப்பெண் ?

மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. 

தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான். 

அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது. 

ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுவதோடு, திருமணத்தைப் புறக்கணித்து துறவி வேடமிடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஒரு முஸ்லிம் இறைவனை வழிபடுவதைக் காரணம் காட்டிக் கூட திருமணத்தைப் புறக்கணிக்க இயலாது. 
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்-க்கொண்டனர். அவர்கüல் ஒருவர், "(இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : அனஸ்  பின் மாலிக் (ரலி), 
புகாரி 5063

ஒரு நபித்தோழர் முழுக்க முழுக்க இறைவனை வணங்கி வழிபடுவதற்காக திருமணம் செய்யவே மாட்டேன் என்கிறார். இதைக் கண்ட நபியவர்கள் ஆஹா... பேஷ்... பேஷ் என்று பாராட்டாமல் இதை கண்டிக்கின்றார்கள். தான் திருமணம் செய்துள்ளதாகவும் தனது வழிமுறையை புறக்கணிப்பவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்து திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றார்கள்.

இறை வணக்கத்தில் ஈடுபடுவதை காரணம் காட்டிக்கூட திருமணத்தை புறக்கணிக்க இயலாது எனும் போது வேறெந்த காரணத்திற்காகவும் திருமணத்தை புறக்கணிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை அறியலாம்.

திருமணம் ஓர் கேடயம்

குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் திருமணத்தை செய்து விட வேண்டும், அதுவே அவர்களை மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் தடுக்கும் கேடயமாக திகழும் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நானும் அல்கமா மற்றும் அஸ்வத்  ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கüடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். 
அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் "இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத், 
நூல் : புகாரி 5066

திருமணம் என்பது தீமைகளிலிருந்து காக்கும் ஓர் பாதுகாப்பு கருவி என நபியவர்கள் கூறியுள்ளதை காணலாம்.

திருமணம் ஓர் மன அமைதி

பல்வேறு காரணங்களால் நிம்மதியை இழந்து, மனஅமைதியை தொலைத்து தவிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, இழந்த மன அமைதியை திரும்ப பெறுவதற்காக திருமணமே மிகச் சிறந்த வழி என இறைவன் கூறுகிறான். 
 "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 7:189 

ஒருவரின் கட்டுப்பாடான, நிம்மதியான வாழ்க்கைக்கு திருமணம் வழிவகுக்கும் என இறைவனும் இறைத்ததூதரும் உத்தரவாதம் அளித்துள்ளதை இதிலிருந்து அறிகிறோம். 

திருமணத்தின் மூலம் என்ன பயன் ஏற்படும் என்று இறைவனும் இறைத்தூதரும் உத்தரவாதம் அளித்துள்ளார்களோ அது நடைமுறையில் இல்லை என பலர் புலம்புவதை காணமுடிகிறது. 
உண்மை தான். இன்றைக்கு பலர் என்றைக்கு நான் திருமணம் செய்த அன்றே எனது நிம்மதி பறிபோய் விட்டது என புலம்பித் தவிக்கிறார்கள். 
இவர்களுக்கு இறைவன் வாக்களித்த நிம்மதி திருமணத்தின் மூலம் ஏற்படவில்லையே?

இன்னும் பலர் திருமணம் செய்த பிறகும் அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இல்லையே? ஏன்? 
எவரைத் திருமணம் செய்தாலும் இறைவன் வாக்களித்தது கிடைத்து விடாது. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என இறைவன் அறிவுறுத்தியுள்ளானோ அப்பெண்ணை மணந்தால் தான் இறைவன் வாக்களித்த மன அமைதியை, கட்டுப்பாட்டைப் பெற முடியும். அது சரி. 

யாரந்த மணப் பெண்?

மார்க்கப்பற்றும் மறுமை வெற்றியும்
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
புகாரி 5090

மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்ய வேண்டும் என நபிகளார் கூறுவதோடு அவள் மூலம் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் இந்த செய்தியில் தெரிவிக்கின்றார்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, கருத்து வேறுபாடுகளுக்கு மணப்பெண்ணை தேர்வு செய்வதில் உள்ள குளறுபடியே அடிப்படை காரணமாக திகழ்கின்றது. மேற்கண்ட புலம்பலுக்கும் தவிப்புக்குமான காரணம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்யாததே என்பதை திட்டவட்டமாக கூறலாம்.

நல்ல பெண்ணே சிறந்த செல்வம்

இஸ்லாம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மணந்து கொள்ள சொல்வதின் காரணம் ஒழுக்கமுள்ள பெண்ணுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கி அவளை கண்ணியம் செய்கிறது. உலகில் குவிந்து கிடக்கும் செல்வங்களில் நல்ல பெண்ணே சிறந்த செல்வம் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), 
முஸ்லிம் (2911)

ஒரு மனிதன் உலகில் திரட்டும் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷம், பொற்புதையல் நல்ல பெண்ணே.

ஒரு மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? அவள் நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள். அவளை அவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமலிருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவர்களை) பாதுகாத்துக் கொள்வாள் என்று நபியவர்கள் உமரிடம் கூறினார்கள். 
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல் : அபூதாவூத் (1417)

நல்லொழுக்கமுள்ள பெண்ணிற்கு இவ்வுளவு உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்குவதாலே மணப்பெண்ணை தேர்வு செய்வதில் ஒழுக்கத்திற்கும், மார்க்கத்திற்கும் முதலிடம் ஒதுக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடுகிறது. 

ஒருவர் மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதினால் அவரது வாழ்வில் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கிறார். அவரது நிம்மதியான வாழ்விற்கு பல வகையில் ஒழுக்கமுள்ள பெண் அடித்தளமாக திகழ்கிறாள்.

குடும்ப நலனில் அக்கறை

நல்லொழுக்கமுள்ள பெண் தனது கணவனின் வீட்டாருக்கு, தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, பணிகளை அறிந்து, அது தொடர்பாக மார்க்கம் கூறும் பின்வரும் போதனையை எப்போதும் நினைவில் நிறுத்துக் கொள்கிறாள். 

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாüயாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர்  (ரலி), புகாரி 2554

என் கணவனின் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைப்பற்றி இறைவன் விசாரிப்பான் என்ற கடமையுணர்வு மார்க்கப்பற்றுள்ள பெண்ணிடத்திலேயே இருக்கும். ஆதலால் அவள் தனது கடமைகளை செம்மையாக நிறைவேற்றுவாள். 

குடும்பத்தில் செய்ய வேண்டிய இதர வேலைகளை மாமியார் (பிறர்) சொல்லி செய்யப்படும் நிலை இருக்காது. தானே மனமுவந்து குடும்ப வேலைகளை இழுத்து போட்டு செய்வதால் குடும்ப உறுப்பினர்களின் அன்புக்கு பாத்தியப்பட்டவளாக மாறிவிடுவாள். 
எனவே கணவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லும் நிகழ்வுகளுக்கு இடமில்லாது போவதால் கணவனின் உளரீதியான பல பிரச்சனைகளுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும். இந்த ரீதியில் கணவனுக்கு பெருமளவு நிம்மதி ஏற்படும் என்பது உறுதி. 

ஒழுக்க ரீதியாக... 

நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்வதால் நமது குடும்பமும் ஒழுக்கமுள்ளவர்களாக, ஓரளவு மார்க்கப்பற்றுள்ளவர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும். 

ஜாபிர் (ரலி அவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது தங்கள் சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களை பராமரிக்கும் பண்புள்ள, ஒழுக்கமுள்ள பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸிலிருந்து அறிகிறோம்.
 (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) "நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?'' என்று கேட்டிருந்தார்கள்.அதற்கு நான்,"வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்'' என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், "கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே'' என்று  கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச்  சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்...அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்'' என்று பதிலüத்தேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), 
நூல் : புகாரி (2967)

மார்க்கப்பற்றுள்ளவளை மனைவியாக தேர்வு செய்வதாலே நமது குடும்பம் சொர்க்கப்பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என்பதை நினைவில் கொள்க.

குழந்தை வளர்ப்பில் அக்கறை

நல்லொழுக்கமுள்ள பெண் கணவனின் குடும்ப நலனில் பொறுப்போடு நடந்து கொள்வது போல் தங்களின் குழந்தை வளர்ப்பிலும் கடமையுணர்வோடு நடந்து கொள்வாள்.

.  பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர்  (ரலி), 
புகாரி (2554)

இன்று பலரும் தீயவர்களாக, இறைவனின் வெறுப்பிற்குரியவர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு முறையே.

குழந்தைகளை எப்போது கண்டிக்க வேண்டும்? எந்த இடத்தில் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இடம் பொருள் தெரியாமல் தங்கள் குழந்தைகள் தறுதலைகளாக மாறுவதற்கு ஒரு விதத்தில் பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றார்கள்.
தீமையான காரியங்களில் ஈடுபட பணம் கேட்டாமல் மறுப்பேதுமின்றி வழங்குவது, தீய நண்பர்களோடு சகவாசம், தொழுகையை புறக்கணித்து உறக்கம், தொலைக்காட்சியில் மூழ்கி விடுதல் போன்ற காரியங்களில் குழந்தைகள் ஈடுபடும் போது தக்க அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் வழங்க பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள். 

இது போன்ற குறைகள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதால் வேறோடு பிடுங்கி, களையெடுக்கப்படும். அவளது அன்பு கலந்த கண்டிப்பினால் நமது குழந்தைகள் நல்லவர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறுவார்கள்.

கணவனுக்கு நல்ல துணையாக

யாருக்கேனும் சிரம் பணிய வேண்டும் என ஒருவருக்கு நான் கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு சிரம்பணிய வேண்டும் என பெண்ணுக்கு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : திர்மிதி 1079

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
, நூல் : புகாரி (3237)

குறிப்பாக நல்லொழுக்கமுள்ள பெண் இது போன்ற கணவனுக்கு கட்டுப்படுவதின் அவசியத்தை உணர்ந்து, அவனுக்கு செய்ய வேண்டிய கடமையறிந்து செயல்படுபவளாக இருப்பாள்.

கணவன் கவலையில் வாடும்போது ஆறுதல் கூறுபவளாக, வறுமையில் உழலும் போது இருப்பதைக் கொண்டு போதுமாக்கி கொள்ளும் தாராள மனப்பான்மையுடையவளாக, கணவனின் நெளிவு சுளிவுகளை அறிந்து நடப்பவளாக இருப்பாள். இப்படி நல்லொழுக்கமுள்ள பெண்ணிண் மூலம் ஒரு ஆண் அடையும் நன்மைகள் பற்பல. 

ஒரு சில தம்பதிகள் சிறுசிறு விஷயங்களுக்காக எழுத சகிக்காத வார்த்தைகளால் சதா ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பார்கள். மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணமகளாக தேர்வு செய்வது இது போன்ற பலபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்கும். ஒருவரையொருவர் புரிந்து நடக்கும் சூழல் கனியும்.
இது போன்ற இன்னும் பல நன்மைகளை அனுபவித்தே உணரமுடியும். அவைகளை எழுத்தில் வடித்திட முடியாது. 

ஆகவே திருமணத்திற்கு பிறகு நமது வாழ்க்கை இனிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது அழகு, குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒழுக்கம் மார்க்கப்பற்று ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதுவே நிம்மதியான, கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அச்சாரமாய் அமையும் என்பதை இறுதியாக நினைவூட்டிக் கொள்கிறேன்.
(குறிப்பு ; மேற்கூறப்பட்ட விஷயங்கள் யாவும் பெண்கள் மணமகனை தேர்வு செய்வதற்கும் பொருந்தக்கூடியதே) 

அப்துல் கரீம், துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 

மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்? 
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.  
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை 
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும்.அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து,அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு,அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 

பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Sunday, November 18, 2012

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

கண்

இமை வீக்கம் அடங்க:- 

பசும் பாலைக் காய்ச்சி துணியில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறைவதுடன் வலியும் எரிச்சலும் அடங்கும். 

கண்பார்வை

பாதாம்பருப்பு சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். ஆண்மை பெருகும். 

கண் மங்கல் அகல:- 
பொன்னாங் கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் கண்கள் மீது வைத்துக் கட்டிப்படுக்க கண் மங்கல் அகலும். 

கண் அரிப்பு நிற்க:

கடுக்காய்ப் பிஞ்சை சந்தனக் கல்லில் உரைத்துவரும் விழுதை இரவு படுக்கப்போகும் முன்பு மை போல் இட்டுக் கொண்டால் நின்று விடும். 

கண் எரிச்சல்: 

நெல்லிக்காயை நன்கு காயவைத்து நைசாகப் பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். கண் எரிச்சல் கண் புளிச்சை போன்றவை ஏற்படாது. 

கண் இருட்டி மயக்கம்

வெயிலில் போய்விட்டு மிகவும் களைப்பாக வீட்டுக்கு வந்தவுடன் கண் இருட்டி மயக்கம் வருவதுபோல இருக்கும். உடனே அரை டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிய துண்டு வெல்லம் சாப்பிட்டால் எல்லாம் சரியாகும். 

கண்கள் பிரகாசமாக : இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
 —

Monday, November 12, 2012

வெந்தயத்தில் மருத்துவம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வெந்தயத்தில் மருத்துவம். 
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம்உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடுஅதில் உள்ள பல்வேறுமருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும்வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லிஅளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்.தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வரஉடல் சூடுமலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிரஉடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம்ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு,வாணலியில் போட்டு வறுத்துஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டுதேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகிவர வயிற்றுக் கோளாறுகள்அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால்சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவுகட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்கவயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும்சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்வெந்தயப் பொடியை சிறியவெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்வெந்தயப் பொடியையும்பெருங்காயப் பொடியையும் சேர்க்கசுவை கூடுவதுடன்உடல் உபாதைகளையும்போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால்சுவை கூடுவதுடன்உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால்நீரிழிவுவயிற்றுப்புண்வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள்குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுகோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்துசாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறதுபிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக்கொடுக்க பால் சுரக்கும்.

1. 
இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2. 
வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்குறையும்.

3. 
வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.

4. 
கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. 
வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6. 5 
கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. 
வெந்தயம்கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

8. 
வெந்தயம்கடுகுபெருங்காயம்கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி,பொருமல்ஈரல வீக்கம் குறையும்.

9. 
வெந்தயம்வாதுமைப் பருப்புகசகசாஉடைத்த கோதுமைநெய்பால்சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்வலுவாவும் இருக்கும்.இடுப்பு வலி தீரும்.

10. 
வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும்படைகளுக்கும் பூசலாம்.

11. 
வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.
வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவைபழுத்து உடையும்.
இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்துஅதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிதுசிறிதாக வீரியம் குறையும்.
தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.
முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.
வெந்தயக்கீரை.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும்மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கிஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி,காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும்.சீதபேதி குணமாகும்வயிற்றுப் போக்கை நிறுத்தும்மாதவிடாய் தொல்லை நீங்கவும்உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.உடலுக்கு நல்ல பலம் தரும்.
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கிகழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டிஎல்லாம் எந்த அளவு இருக்கிறதோஅந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச்சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்துஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டுஉபயோகப்படுத்தலாம்.
வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.வெந்தயக்கீரையில்  வைட்டமின் சத்தியும்சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்புகண்பார்வை குறைவாதம்,சொறி சிரங்குஇரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்க

பிரிஸ்பன்: வெந்தயம், ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய்,மிளகாய் பொடி, மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம். சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையானநோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாககூறப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில்உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25&52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவு,செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது.

வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள், ஹார்மோன்உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும்என்கிறது ஆய்வு.