Thursday, April 26, 2012

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!


கோடையை குளிர்ச்சியாக்கும்
ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!
கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’ வாசகியும் சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!அத்திப்பழ மில்க் ஷேக் தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்-- (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு கப். செய்முறை: அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.
தர்ப்பூசணி ரசாயணம் தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது - பொடிப் பொடியாக நறுக்கவும்) - 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய் - ஒன்று, வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம். செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)ஆப்பிள் ஜூஸ் தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப். செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.
இளநீர் டிலைட் தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் - அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் - ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் - தலா 2 டீஸ்பூன். செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.
மேங்கோ லஸ்ஸி தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் - தலா அரை கப், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.தண்டை தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் - 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை டீஸ்பூன். அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் - 4 (அல்லது) 5.  செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)
மாங்காய் பன்னா தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) - ஒன்று, சர்க்கரை, தண்ணீர் - தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் - ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி - சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் - சிறிதளவு. அலங்கரிக்க: புதினா இலை - சிறிதளவு. செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும். (இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் - மாங்காய்)தர்ப்பூசணி சிப்தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் - ஒரு கப், தயிர் - அரை கப், புதினா விழுது - அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் - அரை கப், மிளகுப் பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தேன் - ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி - ஒரு டீஸ்பூன். செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.வெள்ளரி ஷேக் தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் - தலா ஒரு கப், தேன் - 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது - தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - அரை கப். செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம். மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!ரெட் வொண்டர் தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) - பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) - ஒன்று, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன். அலங்கரிக்க: புதினா இலைகள். செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும். (கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)ரோஜா சர்பத்தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் - அரை கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு - அரை கப். செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.பரங்கிக்காய் டிலைட் தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) - அரை கப், முந்திரி விழுது - இரண்டு டீஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை. செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ் தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) - அரை கப், பொடித்த லவங்கப் பட்டை - அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் - தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) - சிறிதளவு, ஓட்ஸ் - 3 டீஸ்பூன்,  செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.மசாலா மோர்
தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, கொத்துமல்லி - அலங்கரிக்க. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.முலாம் பழ ஜூஸ் தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தக்காளி ஜூஸ் தேவையான பொருட்கள்: தக்காளி - 3, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், தேன் - 3 டீஸ்பூன். அலங்கரிக்க: புதினா இலை - 5. செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
மின்ட் ஐஸ் டீ
தேவையான பொருட்கள்: புதினா இலை - கால் கப், கொதிக்கும் நீர் - ஒரு கப், க்ரீன் டீ - - 1 பாக்கெட், தேன் - ஒரு டீஸ்பூன். அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை. செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.
சாக்லேட் ஸ்மூத்தி! தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) - - ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - - அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு. செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். மின்ட் ஜூஸ் தேவையான பொருட்கள்: புதினா இலை - 10, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள். செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.பீ நட் பட்டர் மில்க் ஷேக்தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ - நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் - டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) - ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு ஸ்க்யூப். செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.பானகம் தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) - அரை கப், தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) - 3 டீஸ்பூன். செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.
லஸ்ஸி தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் -- சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் -- ஒரு டீஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.மலாய் குல்ஃபிதேவையான பொருட்கள்: கெட்டியான பால் - ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் - தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு. செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.  குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.
கஸ்டர்ட் தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் - துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், பால் - -150 மி.லி, சர்க்கரை- - 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் - -2 டீஸ்பூன் செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!எலுமிச்சை ஸ்குவாஷ் தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் - தலா 1 கப், சர்க்கரை - 2 கப், சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்.  செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும். குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம். மேங்கோ ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் - 5, சர்ககரை - அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் - 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் - சிறிதளவு, தண்ணீர் - மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு. செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.திராட்சை ஸ்குவாஷ்செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு - 2 கப், சர்க்கரை - 4 கப், க்ரேப் எசன்ஸ் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், ஃபுட் கலர் - கால் டீஸ்பூன். செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.  தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.ஆரஞ்சு ஸ்குவாஷ் தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு - 2 கப், சர்க்கரை - 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன். செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.தக்காளி ஸ்குவாஷ் தேவையான பொருட்கள்: தக்காளி - ஒரு கிலோ, சர்க்கரை - அரை கப், உப்பு - 1 டீஸ்பூன். செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.

Wednesday, April 25, 2012

கோடை வெப்பத்தை விரட்டும் முலாம் பழச்சாறு!


கோடை வெப்பத்தை விரட்டும் முலாம் பழச்சாறு!

 
திராட்சைச் சாறு, கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை ரசம் அருமருந்து.
முலாம்பழத்தைச் சாறெடுத்து அருந்த உடல் உடனே குளிர்ச்சியாகும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். உண்மையில் முலாம்பழத்தில் தர்ப்பூசணியைவிட தண்­ணீர்(ஈரப்பதம்) அதிகம். எனவே முலாம்பழச்சாற்றை ஒருதடவை தினமும் அருந்தினால், கோடைவெப்பத்தை எளிதில் விரட்டிச் சமாளிக்கலாம்.
மாம்பழச்சாறு கோடை மயக்கத்தை நீக்கும். ஜூஸ் அல்லது ஸ்குவாஷ் தயாரிக்க, நார் அதிகமுள்ள இனிப்பு மிகுந்த மாம்பழத்தை உபயோகப்படுத்தலாம். இதில் ஜூஸ் அதிகம் இருக்கும். நாரை வடிகட்டிய பிறகு ஸ்குவாஷ் செய்யவும்.
நான்கு ஆப்பிள் பழங்களைத் தோல் சீவி அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு மத்தினால் நசுக்கி விழுதாக்கிக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்­ணீர், 50கிராம் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் ஆகியவற்றைப்போட்டு நன்கு கலக்கி மெல்லிய துணியால் வடிகட்டிப் பருகலாம். வெயிலுக்கு உகந்தது.
இரண்டு முன்று பழச்சாறுகள் கலந்து ஜூஸ் செய்யும்போது, இரண்டு ஸ்பூன் இஞ்சிசாறு விட்டுப் பருகுங்கள். சுவை சூப்பராக இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து, குளுகோஸ் மற்றும் தேன் கலந்து குடிக்க, சுவையும் கூடும். உடம்பிற்கும் நல்லது.
இளசான நுங்குகளை, தோல் நீக்கி கையிலேயே துண்டுகளாக்கி, (மிக்ஸியில் அடித்தால் பசைபோல் இருக்கும்) பால் சேர்த்து ஏலக்காய், சர்க்கரை கலந்து பிரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்து பருகலாம்.
இளநீரில் உப்பு எலுமிச்சை சாறைக் கலந்து புதினாவை நறுக்கி அதில் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் குடித்துப் பாருங்கள். குற்றால அருவியில் குளித்ததுபோல் இருக்கும்.
நீர்மோர் தயாரிக்கும்போது நீர்மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்குப் பதிலாக சிறிதளவு மிளகு ரசப் பொடியைச் சேர்த்துப் பாருங்கள். அதன் சுவையே தனி.
'ஐஸ்'க்காகத் தண்­ணீரை ப்ரீசரில் வைக்கும்போது சிட்டிகை உப்புத்தூள் கலந்து வைத்தால் ஜூஸில் கலக்கும்பொழுது அதன் இனிப்புச் சுவை கூடுதலாகத் தெரியும். தாகமும் அடங்கும்.
கோடையில் நீராகாரம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால், கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்­ணீர் ஊற்றும்போது, சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
புதினா, ரோஜா இதழ், செம்பருத்திப்பூ, சிறிதளவு பெப்பர்மின்ட் முதலியவற்றைப் பெரிய பாத்திரத்தில் போட்டு அது நிறைய குடிநீர் ஊற்றி கண்ணாடித் தட்டால் மூடி வெயிலில் காலை பத்து முதல் மதியம் மூன்று வரை வைக்கவும். பிறகு இதனை வடிகட்டி ஆற வைத்துக் குடித்தால் சூடு தணியும்.
கோடையைச் சமாளித்து உடல் நலம் காக்க எலுமிச்சை சாறு அடிக்கடி அருந்துவது நல்லது. எலுமிச்சம் பழச்சாறில் வைட்டமின் 'சி' நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு உடலுக்குள் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு தோலில் அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து பளபள மேனியுடன் இளமை தோன்றத்துடன் காணப்பட உதவுகிறது.
வெள்ளரிக்காய்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி அதில் கொத்துமல்லி, இஞ்சி, வெட்டிவேர் மணக்கப்போட்டு உச்சி நேர வெயிலில் இரண்டு டம்ளர் பருகிப் பாருங்கள். உடல் 'குளுகுளு'வென இருக்கும். கோடை வெப்பத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க வெள்ளரிக்காயிலுள்ள பொட்டாசிய உப்பு உதவுகிறது.
குடிநீர் பானையில் சுத்தம் செய்த ஆவாரம் பூக்களைப் போட்டு வைத்து இந்நீரைக் குடித்தால், நாவறட்சி, நீங்கும். கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
 நன்றி:கூடல்.காம்

தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்


'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!
 
உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?   உண்மையான  நண்பர்களுக்கு   பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே    நண்பர்களாக  உள்ளார்களா?  அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறீர்கள்  என்று அர்த்தம்.

நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும்,  கண்கள் ஒடுங்கியும்  காணப்பட்டான்.  அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே  தெரிந்தது.  "இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல்  கவனக்குறைவாக இருக்கிறான்,  ஏதோ வித்தியாசம் தெரியுது அவங்கிட்ட". என்று கவலைப்படுகிறார்கள் அப்துல்லாவின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
அப்துல்லாவின் அம்மா ஆரிஃபா  சொல்லும்போது,   "அப்துல்லா எப்பவுமே டிவியே பார்த்துக்கிட்டு  இருப்பான்.  ஸ்கூல்  தோழமார், கூட்டாளிங்களப்   பத்தி  பேச வேண்டிய சமயத்திலயும் ... டிவியில வர்ற   BEN-10 , POKMAN பத்தியே பேசுறான் .  பள்ளியிலும் கூட, இதே மாதிரி ரசனைகள்  கொண்ட வகுப்புத் தோழர்களோட  மட்டுமே பேசுறானாம்."

இதன் விளைவு அப்துல்லாவுக்கு  உண்மையான நண்பர்களே இல்லை என்று ஆயிற்று.
அவனுக்கு கற்பனை நண்பர்கள் மட்டுமே.  அந்தக் கற்பனைப் பாத்திரங்களுக்கு  அவன் அடிமையானது  மட்டுமில்லாமல் பிடிவாதமாகவும் இருந்தான்.

"குழந்தைப் பருவத்தில் தொலைக்காட்சி பார்ப்பது,  எதிர்காலத்தில் கவனமின்மையை ஏற்படுத்துகின்றது" என்கிறார் சியாட்டிலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பிராந்திய மருத்துவ மையத்தின் குழந்தைநல மருத்துவ ஆய்வாளர், மருத்துவர் டிமிட்ரி கிரிஸ்டாக்கிஸ் (Dimitri Christakis). அவரது ஆய்வின் படி :ஒரு வயதிலிருந்து மூன்று வயதுவரை உள்ள குழந்தைகள்  தினமும் ஒரு மணிநேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதின் மூலம்,  அவர்களது ஏழு வயதில், பத்து சதவிகிதம் கவனக்குறைவிற்கு ஆளாகின்றார்கள்.  தினமும் மூன்று மணி நேரம் தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகள்,  ஏழு வயதாகும்  போது, தொலைகாட்சி பார்க்காத குழந்தைகளைக் காட்டிலும், முப்பது சதவிகிதம் கவனக்குறைவாக இருக்கின்றார்கள். இவ்வாறு அதிகமாக தொலைகாட்சி பார்ப்பதால்,  பார்வை கோளாறுகள் ஏற்படுவது மட்டுமன்றி,  வேறுபல மனரீதியான குறைகளும்  அதாவது, கவனக்குறைவு, உண்மை வாழ்க்கைநிலையை ஏற்றுக்கொள்ளாத தன்மை இவற்றுடன்  நண்பர்களிடம், நிதர்சனத்திற்கு மாறான எதிர்பார்ப்புகள் ஆகியவையும் உருவாகின்றனவாம்.
 
 
நல்ல பழக்கத்தைப் பயிரிடுங்கள்

ஒரு குழந்தை தன் முதல் இரு ஆண்டுகளிலேயே,  மூளை வளர்ச்சி விகிதம் சிறப்படையப் பெறுகின்றது.    குழந்தைகளைப்  பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் விளையாட  வைத்தல்  மற்றும் பேசவைத்து வெளிக்கொண்டு வருவது மூலமே,  சமூகத்துடன் அவை ஒன்றுவதற்கு செய்ய முடியும்.  தொலைகாட்சியின் மிகப்  பெரிய தாக்கம்,   மூளையை உணர்ச்சி வசப்படுத்தி அதிகமான  தூண்டுதலுக்கு ஆளாக்குகின்றது.  குழந்தைகள்  எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சியைப்  பார்க்கின்றார்களோ, அவ்வளவு அதிகமாகமனக்கிளர்ச்சி, அமைதியின்மை  மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகிய பாதிப்புக்குள்ளாகின்றார்கள்  என்று கண்டறியப்பட்டுள்ளது.   காரணம் என்னவெனில், நமது இயற்கையான வாழ்வியல்  முறைக்கு மாறாக,  தொலைக்காட்சியில்   உள்ள நிகழ்வுகளும்,  நடவடிக்கைகளும், துரிதமான காட்சி மாற்றங்களும் தான்.   இப்படி திடிரென, இயற்கைக்கு மாற்றாக ஒரு குழந்தை உள்ளாக்கப்படும்போது,  அதனுள் நரம்பியல் தொடர்மாற்றங்கள் ஏற்படுகின்றது.  ஒரு குழந்தை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மெய்மறப்பதால்,  அதன் நரம்புகள்  வளர்ச்சி குன்றுகின்றனவாம்.
 
 
தொலைக்காட்சி ஒன்றும்  உங்கள் குடும்ப அங்கத்தினர் அல்ல!

அன்பார்ந்த பெற்றோர்களே!
 
சாப்பாட்டு நேரம்,  குடும்பத்தின் நேரமாக இருக்கவேண்டும், குறிப்பாக இரவு நேர சாப்பாட்டு நேரம்.   இந்த நேரத்தில் மட்டும் தான் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் ஒன்றாக அமர்ந்து   அன்றைய நிகழ்வுகளைப் பரிமாறிக்கொண்டு, மகிழ்வுடன்  சாப்பிட முடியும்.  இத்தகைய குடும்பப் பரிமாற்றங்கள், குழந்தையின் மன வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகின்றது.
 
 
வேலை நேரத்தில் வேலை, விளையாட்டு நேரத்தில் விளையாட்டு:

பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதின் மூலம், பிள்ளைகளுக்குப்  படிப்பில் இருக்கும் கவனத்தைச் சிதறச் செய்கின்றார்கள். பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சியை அணைப்பது பொறுப்பான பெற்றோர்களின்  கடமையாகும். இதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும்.
 
 
தொலைக்காட்சிபார்ப்பதைக்குறைத்துக்கொள்ளுங்கள்:

பள்ளிப்பாடங்கள், விளையாட்டுகள் மற்றும் வேலையின் பொறுப்புகள், ஆகியவற்றுக்கிடையே தொ கா நிகழ்ச்சிகள் -  இப்படி  உங்களுக்குக்  குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் சிரமமாக இருக்கலாம்.  அப்படியான சமயங்களில் தொலைக்காட்சியின் முக்கியமான நல்ல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து பிறகு பார்ப்பதின் மூலம், தொலைக்காட்சியின்  முன் நீங்கள் அமரும் நேரம் மிகவும் குறைகின்றது. இதனால் அதிகமான நேரம்   உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு  ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
 
 
மாற்றுவழிகளை கொடுங்கள்:

தொலைக்காட்சிக்குத்  தொடர்பில்லாத  புத்தகம் படித்தல், விளையாட்டு  பொருட்கள், புதிர்  விளையாட்டுக்கள்   போன்ற பல பொழுதுபோக்குகளில்  உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துவதன்  மூலம் அவர்களுடன் தரமான நேரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  வெளியே சென்று விளையாடுவது மற்றும் கைவின பொருட்கள் செய்யும் பொழுதுபோக்குகளையும்  கற்றுக் கொடுங்கள்.
 
 
முறைப்படுத்துங்கள்:

குடும்பத்துடன் காணக்கூடிய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை  நிரல்படுத்தி குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒட்டிவையுங்கள்.  அந்த நிகழ்ச்சிகள்  முடிந்ததும், தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.
 
 
உடன் இருந்து பாருங்கள்:

குழந்தைகளைத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதாக இருந்தால், அவர்களுடன் நீங்களும் இருந்து பார்க்கும் நிலையில்  அனுமதியுங்கள்.  தங்களின் வேலை காரணமாக முழுமையாக இருக்க முடியாவிட்டால், முதல் சில மணித்துளிகளாவது இருந்து நிகழ்ச்சியின்  நெறியினைக் கவனியுங்கள். இடையிடையேயும் கவனியுங்கள்.
 
 
ஒரு சிறப்புரிமை பெறவேண்டும் :

தொலைக்காட்சி பார்ப்பதற்கு முன்,  வீட்டுப்பாடங்கள்  மற்றும் பணிகளை முடித்தபிறகே பார்க்க முடியும் என்று நிபந்தனை விதித்து அதை முறைப்படுத்துங்கள்.
 
 
சேனலைப் பூட்டி வையுங்கள் :

பெரும்பாலான  குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான  சேனல்களைத் திருட்டுத்தனமாக பார்ப்பதற்காக ஒலி அளவை குறைத்து வைத்துக்கொண்டு பார்ப்பார்கள்.  இதனால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம்.  ஆகையால்  அத்தகைய  சேனல்களைப் பூட்டி வையுங்கள். குழந்தைகள்  அவர்களின் தனி திறனை உணரும்  விதமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்.  தொலைக்காட்சி மூலம் பெறப்படும் அறிவு முறையாக  நெறிபடுத்தபடாவிட்டால், அது தேக்கமடைந்துவிடும். தொலைக்காட்சியால்  நல்ல பயன்களும் உள்ளன. ஆனால் வயதிற்கு மீறிய வெளிப்பாடுகள், அவர்கள் மூளை  வளர்ச்சிக்குப் பாதகமாக அமைந்துவிடும்.
ஆகவே,

ஒரு பெற்றோராக நாம்  சிறந்த ஒரு அடிப்படையைக் கையாளவேண்டும் எனில் நம் குழந்தைக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக  தொலைக்காட்சியை அணைத்து விடுவதே நல்லது.
 
(The Hindu  இதழில்  GEORGE MATHEW & DR. SUJA K. குன்னத் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 'பார்வை'க்களித்த Shafee shaik  அவர்களுக்கும் நன்றி.)

Tuesday, April 24, 2012

ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? : மேல்முறையீடு செய்வது எப்படி?


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? : மேல்முறையீடு செய்வது எப்படி?
அரசின் பல்வேறு சலுகைகளை பெறவும்பொது வினியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்களை பெறவும்குடும்ப அட்டை மிகவும் அவசியம். தமிழக அரசுகுடும்ப அட்டை பெறுவதற்கு பல்வேறு தகுதிகளையும்,விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படிவிண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து,சென்னையில் மட்டும் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்,மற்ற மாவட்ட பகுதிகளில் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

60 
நாள் : விண்ணப்பங்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும். 60 நாட்களுக்கு மேல்காலதாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் துறை அதிகாரியை சந்தித்துகால தாமதத்துக்கான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டால்சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள்மேல்முறையீடு மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் துணை ஆணையர் (வடக்கு)துணை ஆணையர் தெற்கு ஆகியோரிடம் முறையிடலாம். பிற மாவட்ட பகுதிகளில்மாவட்ட வழங்கல் அலுவலரை அணுகலாம்.

புகார் எங்கே?: புகார் செய்ய விரும்பினால்சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தை 044- 28592255என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குடிநீர் பிரச்னையாபுகார் சொல்லுங்கள்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம்நாளை காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் மணி வரைகுடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. 

இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர்கழிவுநீர் பிரச்னைகள் மற்றும் குடிநீர்,கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 84 மனுக்கள் பெறப்பட்டு, 72மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு இனிமேல் அடு‌த்தநாளே ப‌தியலா‌ம்
சமைய‌ல் எ‌ரிவாயு வாங்கி 20 நா‌ட்க‌ள் கா‌த்‌திரு‌ந்துதா‌ன் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.ஆனா‌ல் இ‌னி சமைய‌ல்எ‌ரிவாயு வ‌ந்த மறுநாளே ப‌திவு செ‌ய்துகொ‌ள்ளலா‌ம் 
எ‌ன்று இண்டேன் ‌‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
இது கு‌றி‌த்து இண்டேன் மண்டல மேலாளர்முரளி கூறுக‌கை‌யி‌ல்,சமைய‌ல் எ‌ரிவாயுபதிவுசெய்ய தானியங்கி குரல் பதிவு முறைyil (IVRS)  குறுஞ்செய்தி வசதி 
அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் ஆங்கிலத்தில் IOC என்று டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு அந்தந்த பகுதி வினியோகஸ்தரின் போன் நம்பரை
 டைப்செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண்ணுடன்,தனது கைபேசியில் இருந்து 8124024365 என்றஎண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை
 தற்போது நடைமுறையில் உள்ளது.வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதிவு செ‌ய்து கொ‌ள்ளலாம். இதற்கு முன்னர் சமைய‌ல் 
எ‌ரிவாயு வந்த 21 நாட்களுக்கு  பிறகே வி‌நியோகஸ்தரின் க‌ணி‌‌னி‌யி‌ல் பதிய முடியும். ஆனால் IVRS முறையில் வாடிக்கையாளர்கள் சமைய‌ல்எ‌ரிவாயு வாங்கிய 
மறுநாளே அடுத்த சமைய‌ல் எ‌ரிவாயு‌க்குப் பதிவு செய்யலாம்.இப்புதிய முறையால் கே‌ஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுப்பதாகச் சொல்லப்படும் புகார்கள் 
இனிமேல் வராது.தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்து 30 முதல் 45நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை
 எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்று முர‌ளி தெரிவித்தார்.