Sunday, May 26, 2013

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்


ஒரு குழந்தை ஆணாகவோபெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியைஅலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை
  1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
  2. இந்திரியத் துளியை அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
  3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
  4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
  5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
  6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமாகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)
இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்
இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல்,சினைப்பாதையில் நகர்ந்து வர நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும் விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!
ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்
கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
  • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கைகால்கள்காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
  • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
  • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
  • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
  • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
  • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

  • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
  • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
  • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
  • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
  • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
  • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
  • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
  • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!
  • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
  • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
  • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறதுகுழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறதுசுவையை அறிகிறதுதாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
  • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
  • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதாஎன்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத்துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

Tuesday, May 21, 2013

வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்ப‍டி?


வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குவழங்கப்படுவதுகுறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒருநாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கானPCC-Police Clearance Certificate  பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள்மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்)ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.
Police Clearance Certificate 
க்குரிய படிவத்தை(form)  பின்வரும் சுட்டியில் இருந்துதரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf

3.5 x 3.5
செ.மீ அளவு புகைப்படம் ஒட்டிநிரப்பப்பட்ட அந்தபடிவத்துடன் அசல்பாஸ்போர்ட்டும் அதன் நகலும்இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Cardநகல்)சமர்ப்பிக்க வேண்டும்.
காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத்தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)
விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில்இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.http://passport.gov.in/pms/PPForm.pdf
காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படும்காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில்இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால்போதும்கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. http://passport.gov.in/cpv/FeeStructure.htm
காலையில் விண்ணப்பித்தால் மாலை மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.
PCC 
குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில்உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாதகாரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும்கொண்டுசென்றாலும் போதுமானது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.
Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport.gov.in/madurai.html
மதுரதேனிசிவகங்கைவிருதுநகர்ராமநாதபுரம்தூத்துக்குடிதிருநெல்வேலி,கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரைபாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.
 
திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.in. Website:http://passport.gov.in/trichy.html
திருச்சிகரூர்நாகப்பட்டினம்பெரம்பலூர்புதுக்கோட்டைதஞ்சா வூர்அரியலூர்மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட்அலுவலகத்தில் விண்ணப்பி க்கலாம்.
கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore – 641018
Phone: 0422-2304888,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry:0422-2309009, 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.html
கோயம்புத்தூர்ஈரோடுநாமக்கல்சேலம்திருப்பூர்நீலகிரி மாவட்டங் களைச்சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண் ணப்பிக்கலாம்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai – 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767
E-mail : rpo.chennai@mea.gov.in Website: http://passport.tn.nic.in/about_us.htm
சென்னைகடலூர்தர்மபுரிகாஞ்சிபுரம்காரைக்கால்கிருஷ்ணகிரி,பாண்டிச்சேரிதிருவள்ளூர்திருவண் ணாமலைவிழுப்புரம் மற்றும் வேலுர்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில்விண்ணப்பிக்கலாம்.

Sunday, May 19, 2013

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்க..


தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்க..


தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகிவிடுகிறது. 

இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோயும் ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கொரேனெரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சேருங்கள். 

பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டாவதாக இடம் பெறட்டும். சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்த தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். 

இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல் படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும். பலமான விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.


பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். இந்த வகையில் தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவதும் நல்லதாக அமைகிறது.
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்க..


தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகிவிடுகிறது. 

இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோயும் ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கொரேனெரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சேருங்கள். 

பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டாவதாக இடம் பெறட்டும். சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்த தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். 

இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல் படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும். பலமான விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.


பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். இந்த வகையில் தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவதும் நல்லதாக அமைகிறது.