Saturday, May 19, 2012

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?


 
உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம் காணலாம்.
 
என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள் அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும்தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும். இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்.
 
தகுதிகள்
 
ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச் செய்யும்.
 
ஒரு நல்ல பெற்றோர் எப்போதும் தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக் குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும். அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.
 
மேலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்துவதால் அவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய இயலாமல் போய்விடும். எனவே குழந்தைகளின் மனதை நன்கு அறிந்து அவர்கள் விருப்பத்தை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். சிலர் குழந்தைகளிடம் சரிசமமாக ‘இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு பிடிவாதமா?’ ‘உனக்கு என்ன தைரியம் எங்களைவிட நீ பெரிய மனுஷனா’ என்று வாதம் செய்வதுண்டு. இது மிகவும் நல்லதல்ல குழந்தைகளின் அறிவையும் முடக்கிவிடும். குழந்தைகள் தானே என்று குறைவாக எண்ணாமல் அவர்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட விடவேண்டும். அவர்களையும் மதித்து சிறுவயதில் அவர்களை மரியாதையோடு நடத்தினால் அதற்கான பெருமைகள் அனைத்தும் பெற்றோரையே சாரும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவது, நல்லது மற்றும் கெட்டது போன்றவற்றை விவாதிப்பது போன்ற காரியங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை விட்டு நெருக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும். மேலும்குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறாகப் பேசிக்கொள்வதும் கூடாது, இதுவும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது போன்றவைகளும் பெற்றோர்களின் முக்கியமான தகுதிகள் ஆகும்.
 
பெற்றோர்களின் முக்கியமானகடமைகள்

பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாவது, தாம் பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், அறிவு, கல்வி, ஆதரவு, அன்பு மற்றும் பாசம் போன்றவைகளை அளிப்பது மிக முக்கியமான கடமைகளாகும். எத்தனையோ பெற்றோர்கள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும், தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதுண்டு. இது பெற்றோர்களின் தியாகம் மட்டுமல்ல இதுவும் கடமைகளில் ஒன்று என்பது எனது கருத்து.
 
மேலும், ஒருவருக்கு இரண்டு குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாகுபாடு காட்டக்கூடாது. இது மனித இயல்பு நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது மட்டுமே ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும் அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக பாசம், அன்பு கொள்ளலாம் அவ்வாறு இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக நடத்தவேண்டும் அது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.
 
நாம் நம் குழந்தையை கண்டிப்பாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதால் மட்டுமே குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால் நாம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும் நண்பர்களையும் கண்கானித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக, தாயாக, தந்தையாக, அவர்களே சகோதர, சகோதரிகளாக, நண்பர்களாக, நல்ல ஆலோசகராக, ஆசிரியர்களாக, வழிகாட்டியாக, சில நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.
 
இஸ்லாமியப் பார்வையில் ஒரு நல்லபெற்றோர்

எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் எல்லாவற்றிற்கும் நேர் மாறானது. உண்மையும்கூட, உலகத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்காக உண்டாக்கியது. ஆனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களோ இறைவனால் மக்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது. மற்ற மதங்களைப்போல இஸ்லாமியர்கள் அவரவர் விருப்பத்திற்கு வாழமுடியாது. இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களின் வழியே நடக்க வேண்டியது கட்டாயமாகும்.
 
ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், இறை(தீன்) வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும்.

நாமும் நல்ல கணவன்-மனைவியாக நல்ல பெற்றோராக பிள்ளைகளிடம் இருப்பதுடன் இஸ்லாத்தின் மார்க்க வழிப்படி பிள்ளைகளை வளர்ப்பதுடன் அதுபோல வாழவும் செய்ய வேண்டும். மறுமை நாளில் பெற்றோரின்; கடமையாக இறைவன் எதை எதிர்ப்பார்க்கின்றானோ அதை சரிவர அறிந்து செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற போர்வையில் பிள்ளைகளை சமுதாயத்தின் வெளியே தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வைப்பதும் தவறு. இஸ்லாத்தின் முறைப்படி முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் படித்து வளர்த்து எல்லோரும் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், சமுதாயத்தில் நியாயமான, முறையான, உண்மையான முறையில் நல்ல அந்தஸ்தில் முஸ்லிம்களும் வளர்ந்து வர வேண்டும். முடங்கிக் கிடக்காமல் முஸ்லிம்கள் முன்னேறி வர வேண்டும்.
 
உலகத்தில் எல்லோரும் நல்ல பெற்றோரே! இருப்பினும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. நூறு சதவிகிதம் யாரையும் மதிப்பிட முடியாது எல்லா பெற்றோரும் ஒரு சில தவறு செய்வதுண்டு நூறு சதவிகிதம் சரியாக இருப்பது ஒரு சில பெற்றோர்களே! பாசம், நேசம், அன்பு, அக்கறை, எண்ணங்கள், விருப்பம், கனவு, திட்டம், ஆசைகள், இப்படி எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் பலவாறு வித்தியாசப்படும். அவ்வாறு அவரவர்கள் யுக்திப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதுண்டு இதில் முறையாக பின்பற்றி வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. தவறான வழிகாட்டல்களை கொடுக்கும் பெற்றோரை பின்பற்றி தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் வெற்றி பெறும் பிள்ளைளும் உண்டு. அது அவரவர் சூழ்நிலைக்கேற்ப உண்டாகும்.
 
ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெறறோரை நல்லவர்களாக்கலாம். பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெறறோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.
 
எனது பெற்றோர்கள் என்னை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி, எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்ததுடன், அவர்களும் நல்லமுறையில் நல்லவர்களாக, இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றி என்னையும் பின்பற்ற செய்தார்களே, அதேபோல் நானும் எனது பிள்ளைகளையும் நல்லமுறையில் இஸ்லாத்தின் சட்டதிட்டம் நெறிமுறைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழியிலும் தீன் வழியினை போதித்து பின்பற்ற செய்வதுடன் என் எண்ணம், கனவு, ஆசைகள் விருப்பப்படி சமுதாயத்தில் எனது பிள்ளைகளின் திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நியாயமான முறையான, உண்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல பொறுப்பில் அமர்த்தி, நல்ல பெற்றோருக்கான கடமையை எனது பெற்றோர்களைப் போல இன்ஷா அல்லாஹ் நான் சரியாக செய்வேன் என நம்புகிறேன்.
 
(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)

Wednesday, May 16, 2012

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்!


 உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்!

 
1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். 

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

 
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
 
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.
 

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.  ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

 
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

- வாசகர்: இளைய வைகை

நன்றி : இந்நேரம்.காம் 

இருண்ட வாழ்க்கை ….! வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?


சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு...

இந்தப் பதிவு யாருடைய மனதையும் புண் படுத்த அல்ல..!. இரத்தத்தை வேர்வையாக சிந்தி, தூக்கம் இழந்து, பசியை மறந்து, உணர்வைத் தொலைத்து, பாசத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்புச்சகோதரர்களின் தியாகத்தைப் புரியாமல் அவர்கள் கொடுத்து விடும் பணத்தை தான்றோடித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கும் என் அன்புச் சகோதரிகளுக்காக இந்தப் பதிவு.....
வெளிநாட்டின் அவல வாழ்க்கையை வேதனையுடன் பகிர்ந்து கொண்ட ஒரு சகோதரரின் பதிவையே உங்களுக்கும் பகிர்கிறேன்.

முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்), சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர் சோப், சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது. அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொல்லிப் பலவித வரதட்சணைகளை வாங்கிய பல மாப்பிள்ளைகள் பட்டினங்களில் இருந்தார்கள். சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்று, வியாபாரங்களைச்செய்து, பணம் சம்பாதித்தவர்களைக் கண்டவர்கள் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுந்துக் கொண்டதுதான் வளைகுடா நாடுகள்.

கால மாற்றங்கள் வந்ததால், வளைகுடா நாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வளைகுடாவுக்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள். வளைகுடா நாடு என்பதில் ஓரெழுத்தை மாற்றிச் சொன்னால், வலை குடா நாடு என்று பொருள் படும். 

ஆம்!. இது வெறும் வலயல்ல, சிலந்தி வலை. சிலந்திக்கு அதுதான் பலம் மற்றும் பலவீனம். ஊரில் இருப்பவர்கள், நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

வளைகுடா நாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம். நம்முடைய உடல் இங்கு இருக்கும்; ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும்.

தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வளைகுடாவில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாக சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார். அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள்.

விடுமுறை காலம் முடிந்து வளைகுடா நாடு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும்.

மன வேதனை மனக்கஷ்டம் ஏற்பட ஏற்பட சர்க்கரை வியாதியும் சேர்ந்தே வரும். உலகத்தில், வளைகுடா நாடானது சர்க்கரை வியாதிகள் பாதிப்பு உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்ற அறிக்கையினை துபையிலிருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையானது வெளியிட்டு இருந்தது.

வளைகுடாவில் உள்ள நமது சகோதரர்கள் பற்பல நோய்களுக்கு அடிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை முக்கியமாகக் காரணமாகக் கூறலாம். இங்கு எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இட்லி, வடை, தோசை, இடியாப்பம், புரோட்டா ஆகியவை இயற்கையான முறையில் நமக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் வளைகுடாவில் இவையெல்லாம் தற்போது ரெடிமெட் உணவாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டாகவும் மாறி விட்டது. இவற்றினைச் சாப்பிடும்போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் அதுவே பின்னர் நமக்கு நோய்கள் வரக் காரணமாக அமைந்து விடும்.

விடுமுறை நாட்களில், நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் தடாபுடலாக கோழி பிரியாணி வைப்பார்கள். எவ்வளவுதான் அவர்கள் மசாலாவைக் கணக்காகப் போட்டாலும் உணவு ருசியாக இருக்காது. "என்ன மாப்ளே, பிரியாணி நல்லவே இல்லை" என்று சாப்பிடும் நண்பர்கள் சொல்வார்கள். அதற்குக் காரணம், எப்போது அறுக்கப்பட்டது என்றே தெரியாத கோழியினை கடையில் வாங்கி பிரியாணி சமைப்பார்கள். தயாரிப்புத் தேதியும் முடியும் தேதியும் அழகாக அந்த கவரில் அச்சு அடித்து இருப்பார்கள். ஆனால் அதில் ருசி எங்குப் போனது என்பது யாருக்கும் தெரியாது.

பச்சைக் காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. பல காய்கறிகள் பல நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மைதான். அப்படியே இங்கு ஏதேனும் காய்கறிகள் விளைத்தாலும் அதற்கு அதிகமாக உரங்களை போட்டு பெருக்க அடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு இங்கு உள்ள கத்தரிக்காயினைப் பார்த்தாலோ மூட்டைகோஸைப் பார்த்தாலோ நம்ம ஊரில் உள்ளபலாப்பழம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அதிகப்படியான உரங்கள் போட்டதால் பெருத்து விடுகின்றன. நாம் சமையல் செய்யும் போது அதிகமாக உப்பு போட வேண்டியதில்லை (வளைகுடாவாழ் சகோதரர்கள் உப்பினை அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்பது தனி விஷயம்) எல்லாமே அதிலேயே இருக்கும். செயற்கை உரமிட்டுப் பருக்க வைத்தவற்றைச் சாப்பிடும்போது நம்முடைய உடல் நலம் என்ன ஆகும்? சில உடல் உபாதைகளைப் பெறத்தான் செய்யும்.

விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள். அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில். படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம்.

கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம். குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த. என்ன வாழ்க்கை இது…..?

வளைகுடா நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு, சம்பளத்தினைச் சரியாக கொடுப்பது இல்லை. ஆறு மாதமோ ஏழு மாதமோ சம்பளம் கொடுக்காமல் இழுத்து அடிப்பார்கள். தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதியினையும் செய்வதில்லை என்ற புகாரும் வருவதாக வளைகுடா பத்திரிகைகள் நமக்கு தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் பல அடிப்படை தொழிலாளர்களுக்கு ஊரில் பேசப்பட்ட சம்பளத்தொகையும் இங்கு வந்தபின் கொடுக்கப் படும் சம்பளத்தொகையும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கும். அந்தக் குறைந்த சம்பளமும் பல மாதங்கள் கிடைக்காத இக்கட்டான சூழலில், குடும்பப் பசியைத் தீர்ப்பதற்காக வளைகுடாவுக்கு வந்தவர்கள், தன் பசிக்கு உணவு தேடிக்கொள்ள வேறு நிறுவனத்திடம் அவர்கள் ஓடிப்போய் வேலை செய்கிறார்கள்.

அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் தொழிலாளர் அடையாள அட்டை என்று எதுவும் கையில் இருக்காது. ஆனால் தைரியமாக வேறு நிறுவனத்திடம் போய் வேலை செய்வார்கள். அங்கும் இதுபோல் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தகாத குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அண்மைக் காலமாக துபையிலும் மற்றும் உள்ள வளைகுடா நாடுகளிலும் பல குற்றங்களும் தகாத சம்பவங்களும் நிறைய நடக்க ஆரம்பித்து விட்டன.

இதனைக் கருத்தில் கொண்ட துபை அரசாங்கமானது, இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் யார் என்று ஆய்வு செய்து, அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்த நிறுவனத்திலிருந்து 'ஓடிப் போய்' வேலை செய்பவர்கள் என்று அறிக்கையினை வெளியிட்டது. ஆகையால், 'ஓடிப் போனவர்கள்' உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கையினை ஓடிப் போன தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்திற்கும் எதிராக எடுக்கப்படும் என்ற அரசு அறிக்கை வெளியானவுடன் ஒரு சில தொண்டு நிறுவனங்களும் துபையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்கள் தாய் நாடு திரும்பி செல்வதற்கு ஏதுவாகச் சில விமானங்களை வாடகைக்கு எடுத்து அந்தத் தொழிலாளர்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும்.

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில். பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக் கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்.

கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில். என்ன கொடுமை? உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலை பேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு. சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும்

என் அன்புச் சகோதரிகளே...!! தாய்மார்களே....!!!

இதைப் படித்து விட்டு நீங்கள் கண்ணீர் விடுவதை விட... உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால்...அந்தச் சகோதரர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்!.

Sunday, May 13, 2012

ஹஜ் மற்றும் உம்ரா செயல்வது எப்படி! மக்கா, மதீனாவிலுள்ள சரித்திரம் முக்கியம் வாய்ந்த இடங்கள்! படங்களுடன் விளக்கம்.

Windows 8 Shortcut Keys

விண்டோஸ் 8 முழுமையாக வர வில்லையே. மக்கள் இன்னும் பரவலாகப் பயன்படுத்தவில்லையே! அதற்குள் அதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளா! என வாசகர்கள்< வியப்பது தெரிகிறது. இந்த முறை மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கன்ஸ்யூமர் பிரிவியூவினை மிக எளிதாகத் தந்துள்ளதால், விண்டோஸ் 7 பயன்படுத்து பவர்கள் பலர் விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வரும் கடிதங்கள் வாசகர் களின் இந்த இனிய முயற்சிக்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளன. எனவே நாமும் வாசகர்கள் அனைவரையும் இந்த ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்திற்குத் தயார் செய்திடும் வகையில் சிஸ்டத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளை இங்கு தொகுத்து தந்துள்ளோம்.
விண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.

Windows Key + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
Windows Key + Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
Windows Key + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
Windows Key + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.
Windows Key + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
Windows Key + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும். 
Windows Key + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும். 
Windows Key + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும். 
Windows Key + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும். 
Windows Key + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற
Windows Key+ X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க
Windows Key +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட
Windows Key + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல
Windows Key +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல
Windows Key +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர 
Windows Key +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர 
Windows Key + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும். 
Windows Key + Enter : Narrator இயக்கப்படும்.
Windows Key + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும். 
Windows Key + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Windows Key + U :Ease of Access Center திறக்கப்படும். 
Windows Key + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
Windows Key + Pause/Break: System பேஜ் காட்டப்படும். 
Windows Key +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை,  Windows Key  + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
Windows Key + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
Windows Key + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும். 
Windows Key + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
Windows Key + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும். 
Windows Key + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Windows Key + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
Windows Key + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
Windows Key + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Windows Key + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும். 
Windows Key + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
Windows Key + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
Windows Key + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும். 
Windows Key + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும். 
Windows Key + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
Windows Key + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும். 
Windows Key + F1: Windows Help and Support இயக்கப்படும். 

Windows Key இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்
Page Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும். 
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும். 
Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.

Saturday, May 12, 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்


 அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!

நன்றி: உண்மை உலகம்
Engr.Sulthan

இழிவை நோக்கி இந்தியச் சமூகம்! - CMN SALEEM

இழிவை நோக்கி இந்தியச் சமூகம்! - CMN SALEEM

தனிமனித ஒழுக்கமே ஒரு உயர்ந்த நாகரீகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கான அடையாளம். ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறை எந்தச் சமூகத்தில் கண்ணும் கருத்துமாக கடைபிடிக்கப்படுகிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகில் உயர்ந்து நிற்கும். அதுவல்லாத நாடும் சமூகமும் அதல பாதாளத்தில் வீழும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

ஆனால், இந்த உண்மை நமது நீதிமன்றங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கசப்பாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ சமீபகாலமாக இந்திய அரசும் இந்திய நீதிமன்றங்களும் ஒழுக்கம் தொடர்பான முடிவுகளில் கீழ்த்தரமான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன.

2009-இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது 377பிரிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அன்றைக்கு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த தமிழ் கலாச்சாரம் குறித்து வாய்கிழியப் பேசும் “பச்சைத் தமிழர்” அன்புமணி ராமதாஸ் அவர்களும் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என்று “அறிவுப்பூர்வமாக” அறிவித்தார். சமீபத்தில் மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், எழுத்தாளர் விக்ரம்சேத் போன்ற இந்தியாவின் அறிவு ஜீவிகள் (?) ஆதரவும் கிடைத்துள்ளது. ஓரினச் சேர்க்கையை ஆதரித்ததால்தான் அமர்த்தியசென்னுக்கு நோபல் பரிசு கிடைத்தது போலும்! இந்திய கலாச்சாரம், பண்பாடு குறித்து தொண்டை கிழிய பேசும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இதுபற்றி கள்ள மவுனம் சாதிக்கிறது.

காதலர் தின கொண்டாட்டத்தை கடுமையாக எதிர்க்கும் இவர்கள் இந்தத் தீர்ப்பு குறித்து வாய் திறக்கவில்லை. சட்டப் பேரவையிலேயே தமது உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டதால் அம்பலப்பட்டு நிற்கிறது பா.ஜ.க. இந்துத்துவ கோட்பாட்டுக் கூறுகளில் ஓரினச்சேர்க்கையும் அடங்குவதால் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களால் கருத்துச் சொல்ல முடியவில்லை.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் இருக்கும் வேறுபாடு பாலியல் ஒழுங்குமுறைதான். வயது வந்த ஆண் பெண் இருவரும் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு குழந்தைகள் மூலம் குடும்பமாக தரம் உயர்ந்து அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினருக்காகவே தங்களை அர்ப்பணித்து வாழ்வது என்ற கோட்பாடே உலகின் உயரிய கோட்பாடு.

இந்தியச் சமூகத்தின் ஆணிவேராக இருந்ததும் இந்தக் குடும்பவியல் கோட்பாடுதான். ஆண்டாண்டு காலமாக இந்தியச் சமூகம் நிலைகுலையாமல் நிலைத்து நின்றதுக்கு காரணமும் குடும்பத்தை மைய்யமாக கொண்ட இந்த வாழ்வியல் சூழல்தான்.

தனிமனித சுதந்திரம் என்ற பெயரால் தறிகெட்ட வாழ்க்கை முறையை தங்குதடையின்றி உலக நாடுகள் மீது திணித்து வரும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஐ.நா. சபை மூலம் நிர்ப்பந்தம் செய்து ஓரினச்சேர்க்கை குற்றம் கிடையாது என்ற கருத்தை இந்திய நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மூலமாக சட்டமாக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் அதிமுக்கியான பணி இப்போது ஓரினச்சேர்க்கையை உலகில் நிலைப்படுத்துவதுதான்!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடும்ப வாழ்வு முறை என்ற கோட்பாடு சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. மொத்தச் சமூகமும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனால் உலகில் வேறு எந்தச் சமூகமும் நாடும் முறையான வாழ்வு வாழக்கூடாது என்ற “உயர்ந்த எண்ணமே” ஓரினச்சேர்க்கை போன்ற கேடுகெட்ட வழிமுறைகளை தனிமனித உரிமை என்ற பெயரால் உலகம் முழுவதும் நிலைநிறுத்தத் துடிக்கின்றனர்.

இந்தியாவில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை தங்கு தடையின்றி பரப்புவதற்காகவே “நாஸ் இந்தியா ஃபவுன்டேஷன்” என்ற அரசு சாரா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநர் அஞ்சலி கோபாலன் என்ற பெண் 1990 வரை அமெரிக்காவில் இந்த வேலையைச் செய்து வந்தார்.

1990க்குப் பிறகு இந்தய அரசின் பார்வை அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கை சார்ந்ததாக ‘புண்ணியவான்’ மன்மோகன் சிங் அவர்களால் மாற்றப்பட்டவுடன் இந்த அஞ்சலி கோபாலன் என்ற ‘சமூக சேவகி’ இந்தியாவிற்கு வந்து இந்த அமைப்பைத் தொடங்கி ‘வெற்றிகரமாக’ நடத்தி வருகிறார். இந்திய அரசின் உயர் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு அமெரிக்க நிறுவனங்களின் நிதியுதவியோடு ‘எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகின்றோம்…’ என்ற பெயரில் ஓரினச் சேர்ச்கையில் பாதுகாப்பாகச் செயல்படுவது எப்படி என்று மூன்று மாத ஆறுமாத வகுப்புகள் எடுத்து வருகிறது ‘நாஸ் இந்தியா ஃபவுன்டேஷன்’ என்ற இந்த நாசகார நிறுவனம். டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்காடிய ஓரினச் சேர்க்கை ஆதரவு அமைப்புகளில் இந்த நிறுவனம் தான் முன்னணி நிறுவனம்.

ஓரினச்சேர்க்கை மட்டுமா இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது? அரசின் அனுமதியோடு விபச்சார விடுதிகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலேயே “புரிந்துணர்வு அடிப்படையில் வாழ்வது” என்ற பச்சை விபச்சாரம் கல்லூரிகளிலும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் பெருகி வருகிறது. பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறையை பயன்படுத்துங்கள் என்ற விளம்பரம் விண்ணைப் பிளக்கிறது.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்கின்றனர் என்பதால் அரசு மிகவும் “கவலையடைந்து” தினமும் ஆயிரம் ஆணுறைகள் காலையில் இலவசமாக பெட்டிகளில் வைக்கப்படுகிறது. மாலையில் பெட்டி காலியாகி விடுகிறது. இந்த கேவலத்தை மெரீனாவில் கண்கூடாக பார்க்கலாம்.

குடும்பப் பெண்களைக் கூட கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் வகையில் எவ்வித தடையுமின்றி ஆபாசக் காட்சிகளை, பாடல்களை தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது. இதுபோதாதென்று மனிதனின் தலைமுறை பாரம்பரிய தொடர்புகளையும் அறுத்தெறிய வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய வழிமுறைகளில் இயற்கைக்கு மாறாக குழந்தை பெறுதல் என்ற அடிப்படையில் வாடகை தாய் கலாச்சாரம் பெருகி வருகிறது. உலகிலேயே வாடகை தாய் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் நாடு நமது நாடுதான். ஆந்திரா முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டி வாடகைத் தாய்கள் தங்களது கர்ப்பப் பைகளை வறுமையின் காரணமாக விற்கின்றனர்.

கணவனின் உயிரணுவையும் மனைவியின் கருமுட்டையையும் செறிவூட்டி வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து குழந்தை பிறக்கச் செய்கின்றனர். கணவனின் உயிரணுவில் வலிமை இல்லாவிட்டால் உயிரணு வங்கிக்கு சென்று வேறு எவனோ விலைக்கு விற்ற உயிரணுவை வாங்கி மனைவியின் கருமுட்டையுடன் சேர்த்து மனைவி கருத்தரிக்கிறாள். இல்லையென்றால் வாடகைத் தாய் கருத்தரிக்கிறாள்.

இதற்காகவே விந்தணு வங்கிகள் சென்னையில் முளைத்து வருகின்றன. சென்ற மாதம் திருமணமான பெண் ஒருவர் இந்த விந்து வங்கிக்குச் சென்று ஐ.ஐ.டி. மாணவனுடைய விந்தணு வேண்டும்; அதற்காக இருபதாயிரம் ரூபாய் தருகிறேன் என்று கேட்டதாக ஒரு மகளிர் மாத இதழில் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருந்தது. ஐ.ஐ.டி. மாணவன் என்றால் அவன் அறிவாளியாக இருப்பான் அவருடைய விந்தணுவினால் உருவாகும் குழந்தையும் அறிவாளியாக இருக்கும் என்ற கடைந்தெடுத்த கயவாளித்தனமான சிந்தனை அந்த மெத்தப் படித்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் இந்திய சமூகம் எங்கே செல்கிறது?

இன்னும் சோதிடம் ஜாதகம், நல்ல நாள்-கெட்ட நாள் என்ற மூடநம்பிக்கைகள் உச்சந்தலைக்கேறி தாய்க்கு பிரசவ வலி எடுக்கும் முன்பே நல்லநாள் என்று சோதிடன் குறித்த தேதியில் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக தாய்லாந்து நாட்டிற்கு பறந்து சென்று குறிப்பிட்ட தேதியில் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கின்றனர்.

இந்தியச் சமூகத்திற்கான முறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் வழிகாட்டுதல் இல்லாததே இந்த கேவலங்களுக்குக் காரணம். இந்தியச் சமூகக் கட்டமைப்பே குடும்பங்களின் வெற்றியில்தான¢ இருக்கிறது. அதைச் சீரகுலைக்க வேண்டும் என்பதே முதலாளித்துவ சக்திகளின் சதி. இந்தச் சதியை நிறைவேற்றிட இந்திய அரசும் அதன் கொள்கைகளும் வழிகளை எளிதாக்கி வருகின்றன. விபச்சாரத்திற்கு முறைப்படியான சான்றிதழ் வழங்கும் இந்திய அரசு திருமணத்திற்கான வயது பெண்ணுக்கு 21 என்றும் ஆணுக்கு 24 என்றும் சரியான நேரத்தில் முறைப்படியான திருமணங்களை வலிந்து தள்ளிப்போட வைக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கடந்த 63 ஆண்டுகளாக குறிப்பிட்டு வரும் “இந்து”ச் சமூகத்தில் நிலவும் சாதிய கொடுமைகள் சமூகக் கொடுமைகள் பெண்ணடிமைத்தனம் திருமணங்களில் பாகப்பிரிவினைகளில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு சட்டம் இயற்றுகிறோம் திட்டம் தீட்டுகிறோம் என்ற பெயரில் “இந்து” சமூகத்தை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்படும் பொதுவான சட்டங்களும் திட்டங்களும¢ கொள்கை முடிவுகளும் இந்து அல்லாத பிற சமூகங்களையும் பாதிக்கிறது.

குறிப்பாக மனித இனத்திற்கான வாழ்வியல் கோட்பாடாக, முழுமைப்படுத்தப்பட்ட சட்டங்களாக, மாறுதல் தேவையற்ற கொள்கை முடிவுகளாக கடந்த 1433 ஆண்டுகாலமாக அணுஅளவும் மாற்றம் இல்லாமல் அகிலம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இந்திய முஸ்லிம்களும் இந்திய அரசின் முறையற்ற இத்தகைய சமூகவியல் சட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

திருமணம் என்ற வழிமுறையையும் கணவன் மனைவி என்ற பந்தத்தையும் குடும்பம், இரத்த உறவுகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற வாழ்வின் எதார்த்தங்களையும் பிறருக்காக வாழ்வது என்ற இயற்கையான ஈகை குணங்களையும் குழிதோண்டிப் புதைத்து இப்படி ஒரு பாசப் பிணைப்பே உலக மக்களிடம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இயற்கைக்கு மாற்றாக மனித சமூகத்தையும் உலகையும் வழிநடத்தப் பார்க்கின்றனர், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள “விஞ்ஞானிகள்” சிலர்.

இயற்கைக்கு மாற்றமாக எது நடந்தாலும் அதன் விளைவுகள் மிகவும் கோரமாக அமையும் என்பதற்கு உலக வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. இறைவனுடைய பிடி இறுகப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Thursday, May 10, 2012

கற்பில் கவனம் தேவை


கற்பில் கவனம் தேவை
(தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி)
 
அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில் கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும்.
 
ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.
 
சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் ‘செல்போன்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. ‘இன்டர்நெட்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத் தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
 
ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம் கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கமான வாழ்வு!” என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும். குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு ‘கற்பு’ என்று பெயர்.
 
‘கற்பு’ எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல் பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. ‘கற்பு’ எனும் மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை. இருபாலரின் பொதுவுடைமையாகும்.
 
எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை நோக்கி, “(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!” (குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள ஆண்களை நோக்கிக் கூறுவீராக!” என்றும் குறிப்பிட்டுள்ளான்.
 
மேலும், “தம் மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும் (குர்ஆன் 33:35) அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.’ (குர்ஆன் 24:31) என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச் சொல்லவில்லை.
 
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு விட்டால் மட்டும் ‘பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என உலகம் பேசுகிறதே தவிர அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள இணங்கும்போது ‘அவள் கற்பழிக்கப்பட்டாள்’ என் யாரும் குறிப்பிடுவதில்லை.
 
கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின் இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன? மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, ‘ஆண் கற்பழிக்கப்பட்டான்’ என்றும் சொல்வதில்லையே !
 
கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக் கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன் மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது.
 
இவ்வாறு கற்பை இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர். திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர் ‘காதல்’ எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
 
வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், வாழ்வில் ஓரளவுக்குக் கிடைக்கும் வசதிகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் பெண்களில் சிலர் தம் கற்பைத் தாமே அழித்து விடுகின்றனர். இத்தகைய நோக்கில் கற்பை இழப்பது பெண்களுக்கிடையேதான் காணப்படுகிறது.
 
ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகின்றனர். இம்முறையிலுள்ள கற்பழிப்பு செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.
 
இத்தகைய நான்கு விதமான கற்பழிப்புகளில் நான்காவதாகக் கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.
 
‘விபச்சாரம்’ எனப்படும் இத்தகைய கற்பழிப்பினைக் குறித்து இறைவன் “விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்” நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது” என்று திருமறை மூலம் எச்சரிக்கிறான (குர்ஆன் 17:32)
 
இறைவன் மனிதர்களை நோக்கி “விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில் ’விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்’ என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘நெருப்பைத் தொடாதே!’ என்பதை விட ‘நெருப்பின் பக்கமே நெருங்காதே!’ என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா?
 
வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் ‘விபச்சாரம்’ எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்’ என்று மட்டும் இஸ்லாம் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான ‘ஆசைப்பார்வை’ எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘விபச்சாரம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக விலக்கப்பட்டிருக்கிறது.
 
ஒருவன் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக ஷைத்தானும் இருக்கிறான் எனும் நபிமொழி (உமர் (ரளி), திர்மிதீ) மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.
 
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில் வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், நபியவர்கள் அவரை ‘உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர் விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!’ என்று பதிலளித்தார்கள்.
 
அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின் நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.’ விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்’ எனும் திருவசனத்தை (குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ, முஸ்லிம்)
 
அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும் கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால் தகர்த்தப்படுகிறது.
 
கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில் ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர் சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5) உணர்த்துகிறது.
 
ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும் இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக் கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப் பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்” எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி, புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில் பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது.
 
எனவே இம்மையின் அற்ப ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட முனைவோம்.
 
நன்றி : சிந்தனை சரம் – நவம்பர் 2005