Monday, December 24, 2012

இதுதாண்டா இஸ்லாம்.....

                                   இதுதாண்டா இஸ்லாம்.....



நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சமூகதீமைகளுள் முதன்மையானதாக அதிகரித்துவரும் வன்புணர்வு இடம் பெற்றிருப்பது கவலைக்குறிய விஷயம்.

நாட்டின் தலை நகரில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கவனித்து இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஒரு சில யோசனைகளை முன் வைக்கின்றனர்.

கொன்றால் கூட தப்பில்லை... பெண்கள் கவனத்திற்கு!

தன்னுடைய பெண்மையை காப்பாற்றிக்கொள்வதற்காக நடைபெறும் போராட்டத்தில் எதிராளியை கொலை செய்வது கூட குற்றமாகாது என்று சட்டம் சொல்கிறது. எனவே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பள்ளி, கல்லூரிகளில், உறவினர்களிடத்தில் இருந்து பெண்களுக்கு எந்தமாதிரியாக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதோடு, அவர்களுக்கு எந்தமாதிரியான சிக்கல்கள் வரும் என்றும், அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது அவசியம்.


எல்.கே.ஜியிலேயே சிக்கல் 

பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டிய பின்னர்தான் சிக்கல் என்றில்லை. பிஞ்சுகளைக்கூட கசக்கி முகரும் மனித மிருகங்கள் இங்கு உள்ளனர். எல்.கே.ஜி சிறுமிகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே அவர்களுக்கு குட் டச், பேட் டச் எவை என்பதைப் பற்றி கற்றுத்தரவேண்டும்.

பள்ளி யூனிபார்ம் கவனம் 

பெரும்பாலான பள்ளிகளில் குட்டைப் பாவாடைதான் அணிகின்றனர். இப்படிப்பட்ட சீருடைகள் பார்க்கவே விகாரமாக இருக்கும். அதை முடிந்த அளவு சுடிதாராக மாற்ற பள்ளி நிர்வாகிகளிடம் பேசுங்கள். சட்டை அல்லது சுடிதாரை அதிகமாக இறுக்கிப் பிடித்துத் தைக்காமல், லூசாக தைத்து அணியச் செய்யுங்கள்

தனியாக அனுப்பாதீர்கள் 

தெரிந்தவர்தானே என்று தனியாக எந்த ஒரு ஆணுடனும் உங்கள் பெண்ணை வெளியே அனுப்பாதீர்கள். ஒருவேளை செல்ல நேர்ந்தால் எச்சரிக்கை செய்து அனுப்புங்கள். பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே இறங்கினால் கண்களை உறுத்தாத உடைகளை அணிந்து வெளியே செல்ல அனுமதியுங்கள்.

உறுத்தாத உடைகள் அவசியம் 

பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் இன்றைக்கு பூரிப்பாக இருப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் நாகரீகம் எனும் பெயரில் கண்ட உடைகளை அணிய வேண்டாம். அதுவே பிறரின் கண்களை உறுத்தும்.

அறிமுகம் இல்லாதவர்கள் 

அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டாம். பிறந்த நாள் போன்ற விழாக்களுக்கு தோழிகளின் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் துணையாகச் செல்லலாம்.

ஆண் நண்பர்கள் அவசியமா? 

இருபாலர் படிக்கும் பள்ளி என்றால் ஆண்களுடன் பேசாமல் இருக்கமுடியாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். எந்த ஒரு முகம் அறியா ஆண் மகனின் போன் நம்பர் மற்றும் விவரங்களை அறிந்து கொள்ள அவசியமில்லை என்பதை தெரிவியுங்கள்.

கல்லூரி பெண்கள் கவனத்திற்கு 

பேருந்து நிறுத்தங்களில் தனியாக இருக்க நேர்ந்தால் யார் கூப்பிட்டாலும் போக வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். தவிர்க்க முடியாமல் கடற்கரை மற்றும் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு தனியாக செல்ல வேண்டி நேர்ந்தால் இருட்டும் முன் வீடு வந்து சேரவேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.


ஆயுதங்கள் அவசியம் 

பெண்மைக்கு ஆபத்து வரும்போது பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாக பயன்படுத்தலாம் என்று மகாத்மாக காந்தியடிகளே கூறியுள்ளார். எனவே உங்கள் பெண் குழந்தையின் கைப்பையில் எப்போதும் ஒரு மடக்கு பேனா கத்தியும், ஒரு பொட்டலத்தில் சிறிது மிளகாய்த்தூள் டப்பாவும் இருக்கட்டும். கழுத்துச் செயினில் ஊக்கு, அதாவது சேப்டிபின் மாட்டியிருந்தால் அதை கூட ஆயுதமாய் பயன்படுத்தச் சொல்லுங்கள்

கடிப்பது தப்பில்லை 

என்னதான் தற்காப்பு நடவடிக்கைகளை கொண்டிருந்தாலும் கயவனிடம் தனியாக மாட்டிக்கொண்டால் தைரியமாக எதிர்த்து போராடவேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். கூடுமான வரை மிகப் பெரிய குரலில் கூச்சலிடலாம். வாயைப் பொத்தினால் பலம் கொண்ட மட்டும் நல்லா கடிச்சு வையுங்க.

கொலை கூட செய்யலாம் 

ஆணின் உயிர்குறியை மையமாக வைத்து தைரியமாக தாக்கலாம். அங்கு அடிபட்டால் அவனால் செயல்பட முடியாது என்று உணர்த்துங்கள். எந்த ஒரு ஆயுதமாக இருந்தாலும் அதை வைத்து தாக்கலாம். போராட்டத்தில் அவன் மரணமடைந்தால் சட்டப்படி அது தவறில்லை என்று உங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

என்று மேற்கண்டவாறு ஒரு சில யோசனைகளை முன் வைக்கின்றனர்.

இதற்கு தீர்வாகத்தானே 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் அழகான முறையில் பெண்கள் உரிமை பாதிக்காத வகையில் பல வகைகளிலும் தீர்வு சொல்லிவிட்டது.




Sunday, December 23, 2012

பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...


பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...



பொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன ? வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.
பிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது ?

அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்....

கம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER )என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.
இன்றைய கம்ப்யூட்டர் மார்கெட்டில் எந்த பிராண்டையும் குறை சொல்வதற்க்கு இல்லை. ஒவ்வொரு பிராண்டும் மற்ற பிராண்டை மிஞ்சும் அளவிற்க்கு சிறப்பான தகுதிகளை உள் அடக்கிய கம்ப்யூட்டர்களைதான் தயார் செய்துகொண்டு இருக்கிறது.

ACER / ASUS / COMPAQ / DELL / GATWAY / HP / LENOVO / LG / PACKARD BELL / SONY / TOSHIBA 

இதுபோல் இன்னும் எத்தனையோ சிறந்த பிராண்ட் கம்ப்யூட்டர்கள் இன்றைய மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.

பிராண்டர் கம்ப்யூட்டரை வாங்குவதனால் நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

1) ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடுகிறது.

2) OS என்று சொல்லக்கூடிய ஆபரேடிங்க் சிஸ்டம் (Windows Xp, Windows Vista, Windows 7 போன்றவை) பிராண்டர் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதனுடைய செலவையும் சேர்த்துதான் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என நீங்கள் தனியாக ஒரு OS CD ஐ வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3) பிராண்டட் கம்ப்யூட்டரிகளிலும் Intel Original Mother Boardதான் பொருத்தப்பட்டிருக்கு என்றாலும் அந்த மதர்போர்ட் சிறப்பாக செயல்படுவதற்கென சில ஸ்பெசல் செட்டப்புக்கள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்கப்பட்டு BIOS அப்டேசன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேசன் என பல வகை அப்டேசன்கள் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

4) பிராண்டர் கம்ப்யூட்டர் CPU Case -ல் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் SMPS (Switched-mode power supply) என்பது அதில் இனைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மதர்போர்ட், பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொன்றிர்க்கும் மிக சரியான முறையில் அதன் கெபாசிட்டிக்கு ஏற்றவாரு மின்சாரத்தில் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருப்பதால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் கெட்டுப்போகமல் பாதுகாக்கப்படுகிறது.

5) இந்த பிராண்டட் கம்ப்யூட்டரை உருவாக்கும் சிறந்த நிறுவணங்கள் அதில் சேர்க்கக்கூடிய ஹார்டுவேர்களில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறமை மிக்கவராக இருப்பதால் அவர்கள் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும். எனவே நீங்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்குவதில் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சிறந்த பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சிறந்த ஹார்டுவேர் பாகங்களை வாங்கிவிடுகிறீர்கள்.


6) மேலும் இந்த பிராண்டர் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவணங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இனைய தளங்களை வைத்திருப்பதால் இவர்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு அதில் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும் அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இனைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் இனைத்து வைத்திருப்பார்கள். அதனால் உங்கள் ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உதாரணத்திற்க்கு நீங்கள் DELL என்ற பிராண்ட் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய கம்ப்யூட்டர் மாடலுக்கு தேவையான அனைத்துவிதமான டிரைவர் மென்பொருள்களும் இவர்களுடைய இணைய தளமான http://www.dell.com/ என்ற இடத்தில் கிடைக்கும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதில் இத்தனை நல்ல விசயம் இருந்தாலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அசெம்பிள் கம்ப்யூட்டர் வாங்கினாலே போதும் என்று நினைப்பவரா நீங்கள்.

உங்களுக்காக மேலும் சில விளக்கங்கள். 

ஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.


































இந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்








இத்தனை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் உங்களிடம் இருந்தால் ஒரு அசெம்பிள் கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.




தகவல்கள்: தமிழ் கணினி தளம்
Engr.Sulthan


Monday, December 17, 2012

உங்கள் உடலுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்


கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.


இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70... மேலும் பார்க்க ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.


இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.


இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.


நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.


நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.


ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.


இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.


மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

மனிதனின் மூளை 100... மேலும் பார்க்க மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.


உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.


நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.


உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.


இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.

பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.

நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.


பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.


நன்றி:அறிவுக் களஞ்சியம்





Saturday, December 15, 2012

வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்



அஸ்ஸலாமு அலைக்கும் 


வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்




ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ணயித்தனர்.





ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.

இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் ஹிஜ்ரா நாட்காட்டியை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பி கிருத்துவ நாட்காட்டியைப் திணிப்பதற்கு முயற்சி செய்தனர். அவர்களின் தொடர் முயற்சியால் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இதில் வெற்றி கண்டனர். மேற்குலகின் மீதுள்ள கண்மூடித்தனமான மோகத்தால் சவூதி அரேபியா தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறையை இழந்தன. கிருத்துவக் காலண்டரையே தங்கள் அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தன.

சவூதி அரேபியா மட்டும் ஹிஜ்ரீ நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் சட்டமியற்றியுள்ளது.

ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது. ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக் கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்தான்.

ஹிஜ்ரா காலண்டரின் துவக்கம்

அரபிகள் இஸ்லாத்திற்கு முன்னர் சந்திரனின் அடிப்படையிலான தேதியையே பயன்படுத்தி வந்தனர். அவர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை வைத்து ஆண்டுகளை அடையாளம் கண்டனர். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்தது.

வணக்கங்களிலும் ஏனைய விஷயங்களிலும் பிறையை வைத்து தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டான்.

வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அல்குர்ஆன் 9 : 36)

ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.

(அல்குர்ஆன் 10 : 5)

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். அதில் தனக்கு அனுப்பும் கடிதங்களில் தேதிகள் இடப்படுவதில்லை என முறையிட்டிருந்தார். அதைப் பார்த்த கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நபித் தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு முஸ்லிம் களின் நாட்காட்டியின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து அமையவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றில் அது மிக முக்கியமான நிகழ்வாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாக அமைந்ததையும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் ஹிஜ்ரத்திற்கு பின்னரே துவங்கியது என்பதையும் அதற்கான காரணம் எனலாம்.

இறையச்சத்தின் அடிப்படையில் முதல் நாளன்று அடிததளடிடப்பட்ட பளிளவாசல்தான் நீர் (அல்லாஹ்வ வணங்க) நிற்பதற்கு தகுதியானதாகும்.

ஆயத் பொருள் : 108

ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய நாட்காட்டி முறை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இந்த வசனத்தில் சுட்டிக் காட்டப்படுவதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். ‘முதலாவது நாளில் இருந்து’ என்ற சொற்றொடர் முஸ்லிம்களின் நாட்காட்டியின் முதலாவது நாளாக அது இருக்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.

ஹிஜ்ரா காலண்டரை விட கிருத்துவக் காலண்டர் நுணுக்கமானதா?

கிருத்துவக் காலண்டர் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் ஹிஜ்ரா காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது. ஆகவே குளிர் காலம், கோடைகாலம், வசந்தகாலம், இலை உதிர்காலம் போன்ற பருவங்கள் கிருத்துவக் காலண்டரைப் பொறுத்தவரை நிலையான தாகவும் சந்திர காலண்டரைப் பொறுத்தவரை மாறக் கூடியதாகவும் இருக்கின்றன.

இஸ்லாமிய வணக்கங்கள் சந்திர காலண்டரோடு தொடர்பு படுத்தப்பட்டிருப் பதினால் சில பகுதிகளில் வாழ்பவர்களுக்கு காலமெல்லாம் நீண்ட பகலிலும் சிலருக்கு சுறுக்கமான பகலிலும் நோன்பு நோற்கும் நிலை ஏற்படுகிறது.

(நபியே!) பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும் (குறிப்பாக) ஹஜ்ஜிற்கும் காலம் காட்டி என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 189) என அல்லாஹ் கூறுகிறான்.

இதன் அடிப்படையில் சந்திர நாட்காட்டி என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள மார்க்கம் சார்ந்த நாட்காட்டி அல்ல, மாறாக அது உலக மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கிய நாட்காட்டியாகும். எனவே நாம் அதைக் கொண்டே தங்களது தேதிகளை நிர்ணயிப்பது அவசியமாகும்.

ஆனால் கிருத்துவக் காலண்டர் என்பது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அது கிருத்துவ மதக் காலண்டராகவும் கிருத்துவ மன்னர்களின் கையாடளுக்கு ஆளாகி, மாசுபடுத்தப்பட்ட நாட்காட்டியாகவும் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

பரிதாபத்திற்குரிய பிப்ரவரி!

மாதங்கள் பனிரெண்டாக இருந்தாலும் அவற்றில் ஒற்றைப்படையாக உள்ள மாதம் 31 நாட்களைக் கொண்டும் இரட்டைப் படையாக உள்ள மாதம் 30 நாட்களைக் கொண்டும் அமைந்துள்ளது.

இதற்கிடையே பிப்ரவரி மாதத்தின் குழப்பம் தனி. பிப்ரவரி என்பது ரோமாபுரியின் ஒரு கடவுளின் பெயராக இருந்தது. பண்டைய கால கட்டங்களில் சூரிய மாதங்கள் ஆண்டிற்கு 10 மாதங்களை கொண்டதாகவே இருந்ததாகவும் சந்திர காலண்டருக்கு நிகராக சூரியக் காலண்டரை உருவாக்க வேண்டும் என்பதற்காக கி.மு 700 காலகட்டங்களில் நோமா போமிலியோஸ் என்ற அரசன் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களையும் புதிதாக இணைத்தார் என்பதும் வரலாறு. அந்த கால கட்டத்தில் பிப்ரவரி 29 நாட்களை கொண்டதாக இருந்தது.

ரோமாபுரி மன்னர் சீசர் ஜூலியோஸின் வெற்றிகளுக்குப் பின் அவர் பனிரெண்டு மாதங் களில் ஒன்றுக்கு தனது பெயர் சூட்டப்படுவதை விரும்பினார். ஏழாவது மாதத்திற்கு ஜூலை என்று தனது பெயரைச் சூட்டினார்.

அவருக்கு பிறகு ரோமாபுரியின் மன்னராக பதவி ஏற்ற ஜூலியோவின் சகலை சீசர் ஆகஸ்ட் என்பவர் தன்னுடைய பெயரும் ஒரு மாதமாக இடம் பெற வேண்டும் என ஆசைப்பட்டார். எட்டாவது மாதத்திற்கு ஆகஸ்ட் என்ற தனது பெயரைச் சூட்டினார்.

தனது சகலை ஜூலையின் மாதம் 31 நாட்களைக் கொண்டதாகவும் தனது பெயரில் உள்ள ஆகஸ்ட் மாதம் 30 நாட்களை கொண்ட நாட்களாகவும் இருப்பது தனக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்று எண்ணிய ஆகஸ்ட் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை எடுத்து தனது மாதத்தில் இணைத்துக் கொண்டார்.

பிப்ரவரி 28 நாட்களாக மாறியதற்கும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய தொடர்ந்து வரும் இரு மாதங்கள் 31 நாட்களை பெற்றிருப்பதற்கும் கிருத்துவ அரச குடும்பத்தின் இந்த குடுமிச் சண்டைதான் காரணம். உலகை ஆண்டு கொண்டிருக்கும் கிருத்துவ நாட்காட்டியின் இலட்சணத்தையும் வேடிக்கைகளையும் கண்டீர்களா?! சூரிய ஓட்டத்தின் கணக்கீட்டின்படி அமைக்கப் பட்டுள்ளதாக நம்பப்படும் கிருத்துவக் காலண்டர் அந்த கணக்கீட்டிலாவது துள்ளியமாக கணிக்கப்பட் டுள்ளதா என்றால் அங்கேயும் பிரச்சனைதான்!

வருட நாட்கள் 365 நாட்களாக காலண்டர் உள்ளது. ஆனால் ஒரு வருட சூரிய ஓட்டத்திற்கு 365.25 நாட்கள் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு சுமார் கால் பகுதி நாள் (அதாவது 6 மணி நேரம்) வித்தியாசத்தில் இந்த காலண்டர் தாமதமாக உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆகும் போது முழுமையாக ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. இந்த வித்தியாசத்தை நீக்குவதற் காகவே நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீஃப் வருடம் என்று ஒன்றை ஏற்படுத்தி, அந்த வருடத்தை 366 நாட்களைக் கொண்டதாக ஆக்கி விடுகின்றனர். அதிகமான ஒரு நாளை இணைப்பதற்காக அவர்கள் தேர்வு செய்த மாதமும் பிப்ரவரிதான்! 28 நாட்களைக் கொண்ட பிப்ரவரி லீஃப் வருடத்தில் மட்டும் 29ஆக மாறிவிடும். பாவம்! பிப்ரவரி! என்ன பாவம் செய்ததோ? எல்லோரும் அதிலேயே கைவைக்கின்றார்கள்.

இத்துடனாவது இவர்களின் பிரச்சனை முடிந்ததா என்றால் இல்லை. லீஃப் வருடத்தில் ஒரு நாளை அதிகரித்த பிறகும் கூட சில மில்லி செகண்ட்கள் மீதமிருக்கவே அவை சிறிது சிறிதாக இதுதான்! 28 நாட்களைக் கொண்ட பிப்ரவரி மாதம் 2000ம் ஆண்டு லீஃப் வருடமாகி 29 நாட்களாக மாறியிருந்தது. அதனை 30 நாட்களாக மாற்றி மில்லி செகண்ட் பிரச்சனையை தீர்க்க நினைத்தார்கள்.

செயற்கைகோல் கணிணி போன்றவைகளில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட புரோம்கிராம்களில் பாதிப்பு வந்துவிடும் என்று உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு வந்ததினால் 2000ம் ஆண்டு பிப்ரவரி 30ஆக மாறாமல் தப்பித்தது.

இதன் காரணமாக நாம் இருக்கும் இன்றைய தினமும் இழுபறியாகத்தான் ஓடிக்கொண்டிருக் கின்றன என்பதே எதார்த்தம். இவ்வாறு மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்ட, பலவிதமான பிரச்சனைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் கிருத்துவக் காலண்டர், கிருத்துவர்களின் ஆளுமை ஆதிக்கத்தால் உலக காலண்டராக திணிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் வழங்கியது சந்திரக் காலண்டர்தான்!

எண்ணிடலங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவக் காலண்டரை மனித இனம் முழுமையும் ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும் போது, மிகவும் துள்ளியமாக, நாட்களை காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

மாத நாட்கள் 29ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354 – 355 நாட்களைக் கொண்டதாக மிகத் துள்ளியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.

முதற்பிறை என்பது மாதத்தின் துவக்கத்தையும் கடந்த மாத முடிவையும் அறியக் கூடிய தெளிவான அடையாளமாகும். சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஹிஜிரா காலண்டர்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு, ஜகாத், ஹஜ், ஆஷுரா மற்றும் இத்தா போன்ற சட்டங்களும் வணக்கங்களும் ஹிஜ்ரா நாட்காட்டியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. எனவே சந்திரக் காலண்டரின்படி செயல்படுவது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

அல்குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது… அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன் 2 : 185)

ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அதில் ஹஜ்ஜை தம் மீது விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, பாவம் செய்வதோ, வீண் தர்கம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2 : 197)

ஒருவர் பொருளை பெற்று, ஒரு வருடம் பூர்த்தியானால் அதன் மீது ஜகாத் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூதாவுத், திர்மிதி)

ரமளான் நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாத (ஆஷுரா) நோன்பாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1982)

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும்தான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்க நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம் 1956)

ரமளானில் நோன்பு நோற்று பிறகு அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். (அறிவிப்பவர் : அபூ அய்யூப் -ரலி, நூல் : முஸ்லிம் 1984)

பிழையான தமிழக பிறை காலண்டர்!

பெருநாட்களிலும் வணக்க வழிபாட்டு துவக்கத்திலும் முஸ்லிம்கள் பிளவுற்றிருப்பதற்கு ஹிஜ்ரா காலண்டர் மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

பௌர்ணமி அன்று பிறை 13ஆகவும் அமாவாஸை அன்று பிறை 27ஆகவும் இருக்கும் நூதனங்களை யெல்லாம் நம்முடைய சிவகாசி காலண்டாரில்தான் காண முடியும். மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள் சார்பாக அச்சிடப்படக் கூடிய காலண்டர்களின் நிலையும் இதுதான்.

2010 ஆகஸ்ட் ‘சமுதாய ஒற்றுமை’ இதழில் தமிழக தலைமை காஜி டாக்டர் சலாஹுத்தீன் அவர்கள் உட்பட பல அறிஞர்களையும் முஃப்திகளையும் தலைவர்களையும் சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டியைப் பார்த்த போது, தமிழக பிறைக் காலண்டர் தவறாக இருப்பதை அவர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அதனை திருத்துவது யார்? என்ற கேள்விக்கும் மட்டும் நம்மால் அவர்களிடம் விடைகாண முடியவில்லை.

சமுதாய ஒற்றுமையை கருத்தில் கொண்டு பெருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுவதால் காலண்டரை முறைப்படுத்த வேண்டிய கடமை முடிந்து விடாது. ரமளானில் நோன்பு நோற்பதற்காகவும் பெருநாள் கொண்டாடுவதற்காகவும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதா? உலகில் எங்கு தென்பட்டாலும் அதன் அடிப்படையில் செயல்படுவதா? அல்லது முறையான ஹிஜ்ரா காலண்டாரின் அடிப்படையில் செயல்படுவதா? என்ற கருத்துவேறுபாடுகள் மார்க்க ஆதாரங்களை புரிந்து கொள்ளும் விதத்தில் ஏற்பட்டவைகளாகும்.

இந்தக் கருத்து வேறுபாடுகளில் கவனம் செலுத்தும் அறிஞர்களில் அதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றான காலண்டாரில் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.

முஸ்லிம் சமுதாய வீழ்ச்சியில் காலண்டாரின் பங்கு!

பெருநாள் தொடர்பாக 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவன் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை ஒழித்தான். கிலாபத் இஸ்லாமிய ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர நினைப்பவரை கொலை செய்யுமாறு கட்டளையிட்டான். மார்க்க கல்வி கற்பதற்கு தடைவிதித்தான். ஷாரீஆ நீதி மன்றங்களை இழுத்து மூடினான். அரபி மொழியை மாற்றி துர்க்கி மொழியை மட்டுமே நாட்டின் மொழியாக பிரகடனப்படுத்தினான். இஸ்லாமிய திருமண முறையை மாற்றினான்.

ஆட்சியாளர்கள் மட்டுமே திருமணம் செய்துவைக்க முடியும் என்று சட்டமியற்றினான். ஸலாம் கூற தடைவிதித்தான். ஹிஜாபிற்கும் தடைவிதித்தான். பலதார மணத்தை தடுத்தான். ஆண், பெண் இருபாலரும் கலந்து பயிலும்படி கல்விக் கூடங்களை மாற்றினான். முஸ்லிம் சமுதாயத்தை மார்க்க வரையறையிலிருந்தும் அதன் கலாச்சாரத்திலிருந்தும் வெளியேற்ற செய்த கொடுமைகள் ஏராளம்.

ஹிஜ்ரா காலண்டாரின் நடைமுறையை நிறுத்தி, கிருத்துவ காலண்டாரின்படி செயல்பட கட்டளையிட்டதும் வார விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமை என்று அந்த கொடியவன் அறிவித்ததும் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

முஸ்லிம்களின் கட்டமைப்பை காப்பாற்றுவதில் ஹிஜ்ரா காலண்டருக்கு பெரும்பங்கிருப்பதை இந்த சோக வரலாற்றின் பின்னனியிலாவது முஸ்லிம் தலைவர்களும் பொறுப்பாளர்களும் அறிஞர்களும் புரிந்து கொள்ளவேண்டாமா?

திருமணச் சட்டத்திற்கும், தலாக் போன்றவைகளுக்கும் ஒன்று சேரும் முஸ்லிம் தலைமை ஹிஜ்ரா காலண்டரை முறைப்படுத்த ஏன் ஒன்று சேரக் கூடாது?! தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரண் என்ற கூற்றுக்கு இணங்க, தமிழகத்தில் மார்க்கப் போர்வை போர்த்திக் கொண்டு, அல்குர்ஆனுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் சுன்னாவிற்கும் நபித்தோழர்களும் இமாம்களுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் துரோகம் செய்து திரியும் சிலர் தனிப் பெருநாள் கொண்டாடி, தங்களை ‘காஜி’ என தம்பட்டம் அடிக்கின்றார்களே?! முஸ்லிம் சமுதாயம் தனது காலண்டாரில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த நிகழ்வு கூட முஸ்லிம்களை தூண்ட வேண்டாமா?

உலகளாவிய அறிஞர்களின் முயற்சி

ஹிஜ்ரி 1300 முதல் 1429 வரை 130 வருடங்களுகான காலண்டரை சவுதி அரசாங்கம் முன்னரே பிரிண்ட் செய்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு உம்முல் குரா காலண்டாரின்படி செயல்பட்டு வருகின்றது. எதிர் வரும் பல நூறு வருடங்களுக்கான சந்திர ஓட்டங்களை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமான விஞ்ஞான உலகில் வாழ்கிறோம்.

உலகம் முழுவதும் ஒரே இஸ்லாமிய காலண்டரை கொண்டுவரஉலகின்பலபாகங்களிலும்அறிஞர்களும் சிந்தனையாளர்களும் உழைத்துக் கொண்டிருக் கின்றார்கள். இந்நிலையில் இந்தியாவில் வாழும் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் விண்ணியல் அறிஞர்களும் சமுதாயச் சிந்தனையோடும் கவலையோடும் அமர்ந்து முறையான ஹிஜ்ரா காலண்டரை முஸ்லிம் சமுதாயத்திற்கு தரவேண்டும் என்பதே நம்முடைய எதிர்ப்பார்ப்பு! நன்மையான காரியத்தை துவக்கி முன்னெடுத்துச் செல்வோருக்கும் இணைந்து உழைப்போருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

ஹிஜ்ரா (சந்திர) மாதங்கள்
முஹர்ரம்
ஸஃபர்
ரபீவுல் அவ்வால்
ரபீவுஸ் ஸானீ
ஜுமாதில் ஊலா
ஜுமாதிஸ் ஸானீ
ரஜப்
ஷாஃபான்
ரமளான்
ஷவ்வால்
துல்கஃதா
துல்ஹஜ்

நாட்களை நீக்கிய கிருத்துவ (இத்தாலி) காலண்டர்கள்

கி.பி. 1582ம் ஆண்டு இத்தாலி நாட்டுக் காலண்டாரில் அக்டோபர் மாத 4ம் தேதிக்குப் பிறகு 15ம் தேதி இடம்பெற்றிருப்பதையும் அதனிடையே உள்ள 10 நாட்கள் நீக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


நாட்களை நீக்கிய கிருத்துவ (பிரிட்டன்) காலண்டர்கள்

கி.பி. 1752ம் ஆண்டு பிரிட்டன் நாட்டுக் காலண்டாரில் செப்டம்பர் மாதம் புதன்கிழமை 2ம் தேதிக்குப் பிறகு வியாழக்கிழமை 14ம் தேதியாக மாற்றப்பட்டு, 13 நாட்கள் நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.


இஸ்லாத்திற்கு தூரோகம் செய்த தாத்தாரியர்கள்

துர்க்கியை ஆட்சித் தலைமையாகக் கொண்ட முஸ்லிம் தலைமை தமது ஈமானிய பலவீனத்தால் யூதர்களுக்கு அடிமையாகத் துவங்கிய காலம் அது. 1926ம் ஆண்டு, இஸ்லாமிய மணிமகுடங்களில் ஒன்றாக ஹிஜ்ரி காலண்டரை புறக்கணித்துவிட்டு கிருத்துவக் காலண்டரை தங்களின் ஆட்சி காலண்டராக மாற்றினர். ஹிஜ்ரா காலண்டருக்கும் கிருத்துவக் காலண்டருக்கும் இடையே ஆன வித்தியாசமாகிய சுமார் 12 நாட்களை 1926ம் ஆண்டு நீக்கிவிட்டு டிசம்பர் மாதத்தை 18 நாட்களோடு முடித்துக் கொண் ஜனவரியைத் துவக்கினர்.


சர்வதேச இஸ்லாமியக் காலண்டர் கருத்தரங்குகள்



சர்வதேச இஸ்லாமியக் காலண்டர் (GLOBAL ISLAMIC CALENDER) கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து உலகளாவிய மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் விண்ணியல் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச இஸ்லாமிய காலண்டர் குறித்து மொரோக்காவில் நவம்பர் 2006ம் ஆண்டு நடந்த முதல் சர்வதேச காலண்டர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உலகில் பல்வேறு முஸ்லிம் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக அமீரகத்தில் கடந்த மே 30, 2010 அன்று நடந்த இரண்டாவது அமீரக விண்ணியல் கருத்தரங்கிலும் ஆலோசிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஒரே பிறை, ஒரே நாளில் பெருநாஷீமீ எனும் ஒற்றுமைக்கான கனவு வெகுவிரைவில் நிறைவேற்றுவதற்கான சர்வதேச அறிஞர்களின் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.moonsighting.com/calendar.html









Monday, December 10, 2012

Keyboard Shorcuts (Microsoft Windows)

More than 100 Keyboard Shortcuts must read

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)

.3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
25. NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
26. LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
27. RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)
Shortcut Keys for Character Map
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
1. RIGHT ARROW (Move to the rightor to the beginning of the next line)
2. LEFT ARROW (Move to the left orto the end of the previous line)
3. UP ARROW (Move up one row)
4. DOWN ARROW (Move down one row)
5. PAGE UP (Move up one screen at a time)
6. PAGE DOWN (Move down one screen at a time)
7. HOME (Move to the beginning of the line)
8. END (Move to the end of the line)
9. CTRL+HOME (Move to the first character)
10. CTRL+END (Move to the last character)
11. SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)
Microsoft Management Console (MMC)
Main Window Keyboard Shortcuts
1. CTRL+O (Open a saved console)
2. CTRL+N (Open a new console)
3. CTRL+S (Save the open console)
4. CTRL+M (Add or remove a console item)
5. CTRL+W (Open a new window)
6. F5 key (Update the content of all console windows)
7. ALT+SPACEBAR (Display the MMC window menu)
8. ALT+F4 (Close the console)
9. ALT+A (Display the Action menu)
10. ALT+V (Display the View menu)
11. ALT+F (Display the File menu)
12. ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts
1. CTRL+P (Print the current page or active pane)
2. ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
3. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
4. F1 key (Open the Help topic, if any, for the selected item)
5. F5 key (Update the content of all console windows)
6. CTRL+F10 (Maximize the active console window)
7. CTRL+F5 (Restore the active console window)
8. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web page)

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நலம்

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நலம்




இக்கீரையின் ச‌த்துக்க‌ள்:

1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’,
உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில்
பெற்றிருக்கிறது.

3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.
பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி
சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.

6. வல்லாரையில் இருவகை உண்டு:
சமவெளி வல்லாரை – வெளிர் பச்சை நிற இலைகளுடையது.

7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை:
கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு
வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்:

1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு,
பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக்
கொண்டது.
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி
சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
8. கண் மங்கலை சரி செய்யும்.
9. சீத பேதியை நிறுத்தும்.
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல
நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை
இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம்
தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு,
காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல்
நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை
வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய
பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர்
தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:

a. இரத்த சோகை (Anaemia):

1. 1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1
மாதம் அருந்தவும்.

2. பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு

3. வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4
தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.

b. ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்:

1. வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.

c. தூக்கமின்மை:

1. 1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து
வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.

d. ஞாபகமறதி:

1. 5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து
தினமும் உண்ணவும்.

e. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று
அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த
விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.

f. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து
அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம்
உண்டாகும்.

g. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3,
மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு
அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

h. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால்
100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால்,
முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

i. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து
சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

j. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி,
தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள்
சரியாகும்.

k. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே
உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை
இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய்
குணமாகும்.

வீக்கம், கட்டிகள் மறைய:-

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி
ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.

அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக:-

இலைச்சாற்றைப் பிழிந்து சம அளவு நெய் சேர்ந்து பாதிக்கப்பட்ட இடத்தில்
பூசி வர வேண்டும்.

சமைத்து உண்ணும் முறை:

1. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி
சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

2. வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து
சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு
ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக்
கூட்டாக வைக்கலாம்.
3. இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல்,
மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள்
குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

4. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று
விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

5. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக்
கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர,
மாலைக்கண் நோய் குணமாகும்.

6. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

7. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற
வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

8. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக்
கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.

1. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை பாகற்காய்
ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

2. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

3.சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

Sunday, December 9, 2012

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்


கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்



கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
*************************************

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு

சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby (http://www.digsby.com/

) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும்.http://www.revouninstaller.com/

பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும்disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர்50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

இஞ்சியின் மருத்துவ குணம்

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே க
ாண்போம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்