Thursday, June 21, 2012

பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்

பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்

வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?
 
சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.] 

"ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்" என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் காட்டிச் சோறு ஊட்டி பிள்ளைகளை மகிழ்வித்த பெற்றவர்களின் பிற்காலம் ஊட்டி, ஊட்டி வளர்த்த அந்தப் பிள்ளைகளினால் கண்களில் ஒளியையே இழந்து கண்ணீரில் முகம் கழுவ வைக்கப்படுகின்றனர். கலங்கித் தவிக்கின்றனர்.

நவீன யுகத்தில் சில போலியான வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப அல்லது கட்டியவளின் கண்டிப்பான கட்டளைக்கு இணங்க பாசத்தில் கலப்படம் கலந்து தாய், தந்தையரின் உள்ளத்தில் மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இவ்வாறான பெற்றோர்கள் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களாக பிள்ளைகளின் கண்களுக்கு உறுத்தப்படுகின்றனர்.

காலூன்றி, கையுயரும் வரை பராமரிப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எல்லா வசதிகளுக்கும் பெற்றோர் தேவைப்படுகின்றனர். ஆனால், சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் இவர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?

தாய், தந்தையரின் கருத்துகள் கூட பெரும்பாலான பிள்ளைகளிடத்தில் அரங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத அரளிப் பூவாக இருக்கின்றன. இவர்களின் பேச்சுகள், புத்திமதிகள், கருத்துகள் குடும்ப சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சாதாரண நண்பர்களுக்கு அல்லது மூன்றாம் நபருக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூடத் தாய், தந்தையருக்குக் கொடுக்கப்டுவதில்லை. மாறாக அவர்களின் இதயங்களில் இரத்தத்தைக் கசியச் செய்கிறார்கள்.

இதனால்தானோ முதியோர் இல்லங்கள் முந்திக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன? மேலும் சில பிள்ளைகள் பெற்றோரை தம்முடனேயே கண்ணும் கருத்துமாகத் வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேறு உறவினர்கள் அல்லது சகோதரர்கள் வீட்டில் இருந்தாலும் கரிசனையுடன் தம்முடனேயே வைத்துச் சோறு போடும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள்தான் தனிக் குடித்தனம் செய்பவர்கள். சுய நலத்துக்காகச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெற்றோர்களை வாங்கிக் கொள்கின்றனர்.

உதாரணங்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேலைக்குச் செல்லும் தம்பதி என்றாலும் அல்லது கணவன் மாத்திரம் வேலைக்குச் சென்றாலும் மனைவிக்கு ஒத்தாசை பேரன், பேத்திகளை பராமரித்துப் பாதுகாப்பது, வீட்டுப் பாதுகாப்பு என்ற சுயநல எண்ணம்.

2. பெற்றவர்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற சமுதாயத்தின் குற்றச் சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வது.

3. வேலையாளுக்குக் கொடுக்கும் பணம் மீதமாவதுடன் வேலைகளையும் பொறுப்புகளையும் வயதானவர்களின் தலையில் சுமத்தி விட்டு இவர்களுக்கு ஓய்வு எடுக்க ஒரு நல்ல வசதியான சந்தர்ப்பம்.

4. மூன்றாம் நபரை வைத்துக் கொண்டு வீணாகச் சந்தேகப்படுவதனை விட பெற்றோருக்கு முதலிடம் என்ற போலிப் போர்வையில் பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது. எனத் தொடர்ந்து கொண்டே போகலாம்.

இதுவும் ஒரு மறைமுகமான முதியோர் இல்லம்தான் என்பதனைப் பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். நம் பிள்ளைகள், பேரன், பேத்தி என வெகுளித்தன அறியாமையினால் தொடர்ந்து கடை வழிகளிலும் சமையல் அறைகளிலும் பாடசாலை என்றும் வயது போன காலத்தில் தாய், தந்தையர் சீரழிகின்றனர். கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் பிள்ளைகளின் விரல் நுணி அசைவை எதிர்பார்த்து நின்ற பெற்றோர் பாவப்பட்ட ஜென்மங்கள்தான். பெற்றேர்களைத் தன்னுடன் வைத்துக் கொள்கின்றேன் என்ற போர்வையில் சிறை வாசத்தைக் கொடுக்கும் இவர்கள், சகல வேலைகளையும் அட்டை இரத்தம் உறுஞ்சுவது போல் தமது பெற்றோரிடமிருந்து உறுஞ்சி விடுகின்றனர். வயது போன காலத்தில் ஓய்வாக, சந்தோஷமாக, அமைதியாக இருக்க நினைத்தாலும் வீட்டுச் சூழல் அவர்களைத் தட்டி எழுப்பி விடுகிறது. தள்ளாத வயதிலும் அன்பினாலும் கருணையினாலும் பாசத்தினாலும் மென்மேலும் தம் குழந்தைகளுக்காகப் பாடுபடுகின்றனர்.

தொடர்ந்து பிள்ளைகளுக்கும் பரம்பரைகளுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தியாகத்தில் தாய், தந்தை முழுமையான திருப்தி கண்டாலும் பிள்ளைகள் சுயநல திருப்தியே பெறுகின்றனர். (விதி விலக்கான உண்மையான பாசமான சில குழந்தைகளும் உள்ளனர்)

நாம் பிள்ளைகளைப் பராமரித்தது போன்று எதிர்காலத்திலும் பிள்ளைகள் நம்மை பராமரிப்பார்கள் என்று நம்புவது சேற்றில் காலை விடுவதற்குச் சமன். அனாதைகளைப் போல் அவலத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் பெற்றோர்களே அதிகம். இயலாத காலத்தில் என்னவெல்லாமோ எண்ணி, ஏங்கிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், சில பிள்ளைகள் தம்முடைய சில சுயநலத் தேவைகளுக்காக தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டு விலகுவதும் அல்லது அதற்கேற்றாற் போல் போலித்தனமான நொண்டிக் குற்றச்சாட்டுகளைக் கூறி தமது பிழைகளை மறைக்க பெற்றோர்கள் மீது பழி சுமத்தி மெல்ல, மெல்ல விலகி ஒதுங்குவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

இதற்குத்தான் கூடிய வயதுடன் வாழ்வதனை ஒரு சாபமாகப் பெற்றோர் நினைக்கும் அதே வேளை, அதிகளவு வயது வாழ்வு பிள்ளைகளையும் எரிச்சலடைய வைக்கிறது. முகம் சுழிக்க வைக்கிறது. அதிகளவு முதுமை இவர்களை ஒதுக்குப் புறமாக ஒதுக்கி வைக்கிறது. இவர்களின் ஓரிரு வார்த்தைகளைக் கூடச் செவி கொடுத்துக் கேட்கவும் நேரமிருக்காது. தமக்கும் என்றாவது ஒருநாள் இந்த நிலை நேரும் என்பதனை பிள்ளைகள் எண்ணிப் பார்ப்பது இல்லை.

மேலும் பிள்ளைகளின் சில நடவடிக்கைகள், அழுத்தங்கள் போன்றன இவர்களுக்கு மன உளைச்சலைத் தோற்றுவித்து உளவியல் ரீதியில் நோய்களை ஏற்படுத்துகிறது. தளர்ந்த நரம்புகளில் இறுக்கமான வார்த்தைகளினால் நிலை குலைவையும் உண்டாக்குகிறது. பாதுகாப்பற்ற நிலையினால் பதறித் தவிக்கின்றனர். சில பெற்றோர்களுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன என்ற போர்வை இருந்தாலும் பேச்சுத் துணை இல்லாத தனிமையில் மனம் பாதிக்கப்பட்டு புலம்பலாக மாறுவதும் உண்டு. அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிக் கலங்குவது கண்ணீரை வரவழைக்கும்.

சகல சௌகரியங்களுடனும் மதிப்புடனும் வாழ்கின்றனவர்கள் கர்வப்படலாம்ஸஸ பெற்றவர்கள் அருகில் பூப்போல் இருந்தால் மாத்திரமே! அப்படி அமையாதவிடத்துப் பிள்ளைகள் எல்லாம் "விமோசனம் இல்லாத சாபத்துக்குரிய நோயை"ப் போன்றவர்கள்.

நாம் பெற்றோர்களிடத்தில் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட கல்விமான்களுடனும் புத்தி ஜீவிகளுடனும் செல்வந்தர்களுடனும் நட்புப் பாராட்டி, சீராட்டினாலும் பெற்றவர்களின் பிரார்த்தனைதான் இம்மையிலும் மறுமையிலும் அங்கீகிரிக்கப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
பெற்றோரைத் திட்டுவது, வீட்டை விட்டுத் துரத்துவது, அவர்களை ஒதுக்கி வைப்பது, வேலைக்காரர்கள் போல் நடத்துவது இப்படிப்பட்ட பெரும்பாவங்களை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து முகங்சுழிக்கும் உரிமை கூட எமக்கு இல்லை. அவர்களை இதயத்தில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை. நோய்வினை செய்யாமல் இருந்தால் போதும்.

நன்றி: வீரகேசரி வாரமஞ்சரி

Wednesday, June 20, 2012

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?


கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?
 
 
தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...

முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும். இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...
கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.

தொலைபேசி எண்: 044-28594780

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது. அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.

இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31-7-2012

விவரங்களுக்கு: www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm

இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30-09-2012

விவரங்களுக்கு: http://www.momascholarship.gov.in/

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மை அமைச்சகம் தனியே சிறப்புக் கல்வி உதவித் தொகையை (Merit cum means based scholarship) வழங்குகிறது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொழில் அல்லது தொழில் நுட்பப் படிப்புகளில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியும். போட்டித் தேர்வுகள் மூலம் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் பெற்றவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். படிப்புக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30-09-2012

உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தின் அச்சு நகலை நிறுவனத்தில் சமர்பிப்பதற்குக் கடைசி தேதி: 5-10-2012

மேலும் விவரங்களுக்கு: http://www.minorityaffairs.gov.in/


மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை
மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி. இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: http://www.nhfdc.nci.in/


அறிவியல் படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பிளஸ் டூ வகுப்பில் படித்த திறமையான மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research - INSPIRE)  என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எர்த் சயின்சஸ் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., பி.எஸ்சி., ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிக்கல்ச்சுரல் சயின்சஸ், எலெக்ட்ரானிக் சயின்சஸ், மெடிக்கல் அண்ட் பயோ மெடிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவு மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.

இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படும் அறிவியல் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் கோடை காலத்தில் ஆய்வு மையங்களில் திட்டங்களை மேற்கொண்டால் அந்தக் காலத்திற்குத் தனியே ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். அதேசமயம், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.

மத்திய அல்லது மாநில 12ம் வகுப்புக்கான போர்டு தேர்வுகளில் முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஏஐஇஇஇ., அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள் வந்து தற்போது அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். நேஷனல் டேலன்ட் எக்ஸாம், கேவிபிஒய்., ஜகதீஷ் போஸ் நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஸ், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களும் ஐஐஎஸ்இஆர்., என்ஐஎஸ்இஆர்., அணுசக்தித் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்புக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப மாதிரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலமும் அனுப்பலாம். அறிவியல் படிப்புகளைப் படிக்கும் தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.

விவரங்களுக்கு: http://www.inspire-dst.gov.in/


புத்தக வங்கிகள்


கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்:

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க்
4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி எண்கள்: 044-2561036925610978

ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி எண்: 044-24621110

ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி
6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040
தொலைபேசி எண்: 044-26206261

கந்தூரி என்பது என்ன?


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..


சிந்திக்க எனும் தொடர் 1  ஐ தொடர்ந்து இன்று  தொடர் 2  - அல்லாஹ் தந்த சிந்தனை திறனைக் கொண்டு கொஞ்சம் சிந்தித்துதான் பார்க்கலாமே.... உண்மையான இறை அச்சத்துடன் , உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் சிந்திக்க சிந்திக்க ... அல்லாஹ் தெளிவுகளையும் நேர்வழிகளையும் நிச்சயம் தந்து கொண்டே இருப்பான்  



கந்தூரி என்பது என்ன? மரணித்தவர்களை கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று, பள்ளிவாயில்களை உட்சவம், திருவிழாக்கள் கொண்டாடி, பொதுமக்களை வருடத்தில் ஒரு முறை இஸ்லாத்தின் பெயரால் இவைக்கத் தூண்டும் செயலே கந்தூரி. இதனை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் என்றும் ஆதரிக்கவில்லை. ஷீஆக்களில் வழித் தோன்றல்களே செத்துப்போகும் இந்த மூடப்பழக்கத்தை உயிர்ப்பிக்க களம் இறங்கி காப்பாற்றத் துடிக்கின்றனர்.
கந்தூரி பலவிதம்
இந்தக் கந்தூரி பலவிதம். புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை அரபியில் குறிப்பிட்ட மாதங்கள் வாசித்து அதை விளங்காது, மக்களுக்கு விளக்காது தமாம் செய்து ஆடு, மாடுகளை அறுத்து மக்களை அழைத்து கந்தூரி கொடுத்தல், புர்தா, மௌலிது, ராதிபுகள் போன்ற அரபுப் பாடல்கள்பாடி, அதை தமாம் செய்து, அதற்காக கந்தூரி நடத்துதல், அல்லது குறிப்பிட்ட சில மகான்களின் புகழ் மலையைப்பாடி கொடிகள் ஏற்றி, அவர்கள் பேரில் கால்நடைகளை அறுத்துப்பலியிட்டு நார்ஸா விநியோகித்தல், இப்படி பல வடிவங்களில் அரங்கேற்றப்படும் இந்தக்கந்தூரிகள் மொத்தத்தில் அவை அனைத்தும் அல்லாஹ் அல்லாதவர்களைப் புகழ்ந்தும், பாடியும், அவனது தன்மைகைளை மரணித்து மண்ணோடு மண்ணாவிட்ட மகான்களுக்கு வழங்கியும்தான் அவை நடத்தேறுகின்றன.

இது நமது பரம்பரையான பழக்கம், வழக்கம், இதை நாம் தொன்று தொட்டு செய்து வருகின்றோம், புதிதாக நீங்கள்தான் சொல்கின்றீர்கள் என்று மக்கா காபிர்களின் வழிநின்று உளரும் இந்தக் கூட்டம் 1400 வருடங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இது போன்ற ஷிர்க்கான காரியங்கைள தவ்ஹீத்வாதிகள்தான் உலகில் முதலாவது தடை செய்வது போல போர்கொடி தொடுப்பார்கள்.


நாகூர் ஹனீபா என்பவர் பாடி உள்ள தமிழில் பாடிய இஸ்லாமிய கீதங்களில் மார்க்கத்தில் ஹரமாக்கப்பட்ட இசையும், ஷிர்க்கும் இணைந்துள்ளது போன்று புர்தாவில் இணைவைப்பும், பொய்யும் கலந்திருக்கின்றது. மக்கள் இவற்றை பரகத் வேண்டி ஓதித் தமாம் செய்யும் வழக்கம் சவக்குழிக்குச் செல்லும் நிலையை எட்டியுள்ள நிலையில், அதை வலிந்து உயிர்ப்பிக்கும் ஊர்களும், வெட்கம் கெட்ட மௌலவிகளும், மக்களும் இல்லாமல் இல்லை.
ஷிர்க்குடன் தொடர்புடைய ஓரிரு வரிகளை அதிலிருந்து இங்கு மாதிரிக்காக எடுத்தெழுகின்றோம். எனவே பரவசம் கொள்ளாது படியுங்கள். சிந்தியுங்கள், திருந்துங்கள். சீர்பெறுங்கள். அதை ஓதுவதால் பரகத் அதிகரிக்கும் என குருட்டுத்தத்துவம் பேசி மக்களை வழிகெடுக்காதீர்கள்.
1- يا أكرم الخلق ما لي من ألوذ به
سواك عند حلول الحادث العَمِمِ
பொருள்: படைப்புக்களில் சங்கையானவரே! பெரும் துன்பமான நிகழ்வுகள் ஏற்படும் போது, பாதுகாப்புத் தேட உங்களைத் தவிர வேறு யாரிடமும் செல்ல எனக்கென்ன நேர்ந்ததது!
மறுப்பு: இருபத்தி மூன்று ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் போதித்த போதனையை அப்படியே தகர்த்தெறியும் வரிகளா இல்லையா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.
நிர்க்கதியான நிலையில் இருப்பவன் தன்னை அழைக்கின்ற போது அவனுக்கு பதில் அளித்து, கஷ்டத்தை அகற்றி, உங்களை பூமியின் வழித்தோன்றல்களாக ஆக்குபவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளர் உண்டா? நீங்கள் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள். (அத்:அந்நம்ல். வசனம்:62) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கும், இன்னும் பல அல்குர்ஆனிய வசனங்களுக்கும் இது நேர்முரணானதாக இல்லையா?
2- فإن من جودك الدنيا وضرتها + ومن علومك علم اللوح والقلم
(நபியே!) இந்த உலகும், மறுமையும் உமது கொடையில் உள்ளதாகும். லவ்ஹுல் மஹ்பூழினதும், எழுதுகோலான போனாவினதும் அறிவு உமது ஞானங்களில் இருந்தும் உள்ளதாகும்.
மறுப்பு: ‘லவ்ஹுல் மஹ்பூழ்’ என்றால் பாதுகாக்கப்பட்ட பலகை என்பது பொருள். இதில் உலகில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் அல்லாஹ் பதிவு செய்து வைத்துள்ளான். இது அவனது அபரிமிதமான அறிவின் வெளிப்பாட்டால் அவன் ஏற்படுத்தியாகும்.
இதற்கும் நபி (ஸல்) அவர்களின் அறிவு ஞானத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை சிறுபிள்ளைக்கும் கூட தெரியும். இந்தப் பாடல்களை ஏதோ நபி (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அங்கீரத்திதாக நினைத்துக் கொண்டு அவைகளைத் தமாமும் செய்து கந்தூரியும் நடத்தும் மார்க்க அறிவற்ற மௌலவிகள் இது பற்றி கொஞ்சம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பொக்கிஷங்கள்



பொக்கிஷங்கள்

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
நன்றி:பொக்கிஷங்கள்.காம்

தொழுகையில் இமாமை முந்துதல்!


தொழுகையில் இமாமை முந்துதல்!
முஹம்மது நபி صلى... الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.

கொலை செய்தல்!
“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)

‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

விபச்சாரம் செய்தல்!
 “நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!
 “மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.

வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

மது அருந்துதல்!
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

சூதாட்டத்தில் ஈடுபடுதல்!

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

பொய் பேசுதல்!

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

திருடுதல்!

“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!

“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)

‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.

பொய்சாட்சி கூறுதல்!

அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.

அவதூறு கூறுதல்!
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!

“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

கர்வம் கொள்ளுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)
 அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

அளவு நிறுவையில் மோசடி செய்தல்!

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

“மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)

பிறர் சொத்தை அபகரித்தல்!

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.

மோசடி செய்தல்!

“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)

“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)

அநீதி இழைத்தல்!

“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

புறம் பேசுதல்!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்




சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்


சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.




சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.


சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?


உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். 

டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.


அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.


தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.


கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்

கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி

இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை

அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்

மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்

சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன

குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.

விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்

விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி

விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி

விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்

விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு

விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்

விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை

விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்

விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை

விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி


சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.


தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?


திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.


சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.


உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.

அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.

அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.


தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. 

உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.

சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.

சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.


சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.


இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:

கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:

கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .


கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).


ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?


கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
Inbox
x





 

 கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

 கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும்.

இதேபோல் கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

 மது, போதை பாதிப்பு

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பயணங்களை தவிர்க்கவும்.

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

 ஊட்டச்சத்துணவு அவசியம்

நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!


ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!


அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.

காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.

‘காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.

பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.

காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம்.

‘பசித்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்கள். பசி வந்தால் நமக்கே எதுவும் புரியாது. அவ்வாறெனில் குழந்தைகளை கேட்கவேண்டுமா? மூளையின் செயல்பாடுகளுக்கு பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக பிஸ்கெட்டும், பிரெட்டும் சாப்பிட்டுவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளோ வகுப்பில் தூங்கி வழிகின்றனர். குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளார்கள் என்றால் அதற்கு காலை உணவை சாப்பிடவில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.

குழந்தைகளுக்கு காலை உணவு சரியில்லை என்றால்…

வகுப்பில் தூங்கி வழிவார்கள்

படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள்

உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்

படிப்பது எதுவும் உள்ளத்தில் பதியாது

படிப்பு ஒரு சுமையாக மாறும்

படித்தவற்றை நினைவூட்டுவது கடினமாகும்.

ஆனால், குழந்தைகளுக்கு காலை உணவை அளிக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த குழப்பமான மனோநிலையில் உள்ளனர். ஏன் குழந்தைகள் காலை உணவை சாப்பிடமால் பள்ளிக்கூடம் செல்கின்றார்கள்? பல காரணங்கள் உள்ளன.

பசியில்லை, பள்ளிக்கூடம் செல்லும் அவசரத்தில் காலை உணவில் அக்கறை இல்லை, ஸ்கூல் வேன் வந்துவிடுமே என்ற பதட்டம், எப்பொழுதும் ஒரே காலை உணவு என்பதால் அதில் ஏற்படும் வெறுப்பு, ருசியின்மை, இரவில் தாமதமாகும் உணவு பழக்கம், பெற்றோரிடம் நேர மேலாண்மை இல்லாமை, சரியான திட்டமிடல் இன்மை, போதிய உறக்கம் இல்லாமை, அளவுக்கதிகமான பாட சுமை, பெற்றோரின் அவசரமான வாழ்க்கை முறை, அசிரத்தை என கூறலாம்.

மேலேக் கூறப்பட்ட ஏதேனும் ஒரு காரணமே உங்கள் குழந்தைகளின் காலை உணவு இழப்பதன் பின்னணியில் அடங்கியிருக்கும். காலையில் பசி அவ்வளவாக இருக்காது. இந்நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு காலை முதல் பெல் அடித்தவுடன் பசி வயிற்றை கிள்ளத் துவங்கும். ஆனால் என்ன செய்ய? மதியம் வரை அடக்கிக் கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை. இத்தகையதொரு சூழலில் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா?
ஆகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை அளிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணரவேண்டும்.

யூனிஃபார்ம் உடுத்தி, ஷூவும், ஷாக்சும் அணிந்து, டை கட்டினால் எந்த குழந்தையும் டிப்-டாப்பாக மாறிவிடும். ஆனால், வெளி அலங்காரத்தில் காரியமில்லை. நல்ல ஆடை அணிவதில் இருக்கும் கவனத்தையும், ஆர்வத்தையும் சத்தான உணவை குழந்தைக்கு அளிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். அப்பொழுதே அக்குழந்தை சமர்த்தாக படிப்பில் கவனம் செலுத்தும்.

இவ்விஷயத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள்:

1.குழந்தைக்கு 7 மணிக்கே இரவு உணவை தயார் செய்து கொடுங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்கவேண்டும்.

2.இரவு 9 மணிக்கு குழந்தையை தூங்க அனுமதியுங்கள்.

3.காலை ஃபஜ்ர் வேளையில்(5 to 6) குழந்தையை எழச் செய்யுங்கள்.

4.காலையில் சற்று நேரம் ஏதேனும் விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள்.

5.குழந்தை குளித்து முடித்து காலை உணவை முடிக்கும் வரை ஜோக்குகள், கதைகள், பாடல்கள் சொல்லலாம். இதனால் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

6.காலை உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா? என்பதை கவனியுங்கள்.

7.காலை உணவு குறித்து முந்தைய இரவே திட்டமிடுங்கள்.

8.வாரத்தில் 7 தினங்களும் 7 வகையான காலை உணவை தயாரியுங்கள்.

9.நேர மேலாண்மையை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

10.காலை எழுந்தவுடன் காலைக் கடன்கள், மார்க்க கடமைகள்(தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல்), ஆடை அணிவது, சாப்பிடுவது ஆகியவற்றிற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் பிற்காலத்தில் சிறந்த பிள்ளைகளாக மாறுவார்கள். அதேவேளையில் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். சொல்வதை விட நாம் செய்து காட்டும் பொழுதுதான் குழந்தைகள் அதில் இருந்து பாடம் படிப்பார்கள்.

காலை உணவு என்ன ஜோக்கா?

காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும். ‘சாம்பார் ஈஸ் எ வெஜிடபிள் சூப்’ என்று கூறுவதுண்டு.

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சைக் காய்கறிகளின் சத்துக்கள் இணைந்த இட்லி-சாம்பார் காம்பினேசன் காலை உணவு தான் குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்பது நிரூபணமாகியுள்ளது.

எல்லாம் அடங்கிய பால் ‘மில்க் ஈஸ் எ கம்ப்ளீட் ஃபுட்’ என பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தை பால் குடிப்பதற்கு தயங்கும். ஆகையால் முற்றிலும் பால் குடிக்காவிட்டால் வைட்டமின்களின் குறைபாடுகள் ஏற்படும். நோய்களை உருவாக்கும். இதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

ஐஸ்க்ரீம் பிடிக்காத குழந்தைகள் இல்லை எனலாம். ஆகவே பாலில் ஐஸ்க்ரீம் தயாரிக்க தேவையான பவுடரை சேர்த்து புட்டிங் தயாரித்து கொடுக்கலாம். சில நாட்கள் பால் பாயசம் தயாரித்து கொடுங்கள். பாலுடன் ஆப்பிள் அல்லது இதர பழவகைகளை சேர்த்து ஜூஸ் தயாரித்துக் கொடுங்கள்.

பழ வகைகள்

பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம்.

காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும்

மதிய உணவு

காலை உணவைப் போலவே மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு தயாரிப்பதற்கு எளிதான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரியுங்கள். மதிய உணவில் குழந்தையின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மதிய உணவில் அடங்கியிருக்கிறதா? என்பதை கவனிக்கவேண்டும். மதிய உணவுடன் பழ வகை ஏதேனும் கொடுத்து அனுப்புங்கள்.

எளிதான வேலை என கருதி பலரும் குழந்தைகளுக்கு நூடில்ஸ் தயாரித்து பள்ளிக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் அக்குழந்தை நூடில்ஸ் குழந்தையாக மாறிவிடும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும். சோறு அதிகமாக கொடுப்பதை விட மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேருங்கள்.

ஆகவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களது காலை உணவில் அதிக கவனம் செலுத்துவோம். சோம்பலை கைவிட்டு, திட்டமிட்டு. ரசித்து சமைத்து அதனை அன்புடன் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். அவர்கள் சிறந்த பிள்ளைகளாக வளர கைக்கொடுங்கள்