Wednesday, March 20, 2013

திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்


திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்
 
நபிமார்கள்நல்லடியார்கள் செய்த பல்வேறு துஆக்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான்அந்த துஆக்களை எந்தச் சந்தர்ப்பத்தில் ஓத வேண்டும் என்பதை அதன் பொருளை வைத்தே அறிந்து கொள்ளலாம்அந்த துஆ இடம் பெற்ற வசனத்தின் முன் பின் பகுதிகளைப் பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ(5اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ(6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْغَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّيْنَ(7)

உன்னையே வணங்குகிறோம்உன்னிடமே உதவியும் தேடுகிறோம்எங்களை நேர் வழியில் செலுத்துவாயாகஅது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழிஅவர்கள் (உன்னால்கோபிக்கப் படாதவர்கள்மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
திருக்குர்ஆன் 1:57
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ(128)2

எங்கள் இறைவாஎங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும்எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாகஎங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாகஎங்களை மன்னிப்பாயாகநீ மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:128
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(201)2

எங்கள் இறைவாஇவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாகமறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
திருக் குர்ஆன் 2:201
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ(250)2

எங்கள் இறைவாஎங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாகஎங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னைமறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:250
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)2

எங்கள் இறைவாநாங்கள் மறந்து விட்டாலோதவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதேஎங்கள் இறைவாஎங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதேஎங்கள் இறைவாஎங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதேஎங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாகஅருள் புரிவாயாகநீயே எங்கள் அதிபதி. (உன்னை)மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
திருக் குர்ஆன் 2:286
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8)3

எங்கள் இறைவாஎங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதேஎங்களுக்கு உன் அருளை வழங்குவாயாகநீ மாபெரும் வள்ளல்.
திருக் குர்ஆன் 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ(16)3

எங்கள் இறைவாநம்பிக்கை கொண்டோம்எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாகநரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!
திருக் குர்ஆன் 3:16
اَللّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)3

அல்லாஹ்வேஆட்சியின் அதிபதியேநீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய்நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய்நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய்நாடியோரை இழிவு படுத்துகிறாய்நன்மைகள் உன் கைவசமே உள்ளனநீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக் குர்ஆன் 3:26
رَبّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ(38)3

இறைவாஉன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாகநீ வேண்டுதலைச் செவியுறுபவன்.
திருக் குர்ஆன் 3:38
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(53)3

எங்கள் இறைவாநீ அருளியதை நம்பினோம்இத்தூதரைப் பின்பற்றினோம்எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!
திருக் குர்ஆன் 3:53
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ(147)3

எங்கள் இறைவாஎங்கள் பாவங்களையும்எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாகஎங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னைமறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 3:147
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ(191)رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ (192)رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِيْ لِلاِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأَبْرَارِ(193)رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُالْمِيْعَادَ(194)3

எங்கள் இறைவாஇதை நீ வீணாகப் படைக்கவில்லைநீ தூயவன்எனவே நரக வேதனையிருந்து எங்களைக் காப்பா யாகஎங்கள் இறைவாநீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய்அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லைஉங்கள் இறைவனை நம்புங்கள்என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம்எங்கள் இறைவாஉடனே நம்பிக்கை கொண்டோம்எங்கள் இறைவாஎங்கள் பாவங்களை மன்னிப்பாயாகஎங்கள் தீமைகளை எங் களை விட்டு அழிப்பாயாகநல்லோருடன் எங்களைக் கைப்பற்று வாயாகஎங்கள் இறைவாஉன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக!கியாமத் நாளில்1 எங்களை இழிவு படுத்தாதேநீ வாக்கு மீற மாட்டாய்.
திருக் குர்ஆன் 3:191, 192 193 194
رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَل لَنَا مِنْلَدُنْكَ نَصِيْرًا(75)4

எங்கள் இறைவாஅநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிருந்து எங்களை வெளியேற்றுவாயாகஉன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாகஉன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!
திருக் குர்ஆன் 4:75
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(83)5

'
எங்கள் இறைவாநம்பிக்கை கொண்டோம்எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'
திருக் குர்ஆன் 5:83
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ(23)7

எங்கள் இறைவாஎங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம்நீ எங்களை மன்னித்துஅருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்.
திருக் குர்ஆன் 7:23
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ(89)7

எங்கள் இறைவாஎங்களுக்கும்எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாகநீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 7:89
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِيْنَ (126)7

எங்கள் இறைவாஎங்களுக்கு பொறுமையைத் தருவாயாகஎங்களை முஸ்ம்களாக மரணிக்கச் செய்வாயாக!
திருக் குர்ஆன் 7: 126
لَئِنْ لَمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(149)7

எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்துஎங்களை மன்னிக்கா விட்டால் நஷ்டமடைந்தோராவோம்.
திருக் குர்ஆன் 7:149
وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ (156)7

எங்களுக்கு இவ்வுலகிலும்மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாகநாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்.
திருக் குர்ஆன் 7:156
حَسْبِي اللهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(129)9

எனக்கு அல்லாஹ் போதுமானவன்அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லைஅவனையே சார்ந்துள்ளேன்அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.
திருக் குர்ஆன் 9:129
عَلَى اللهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنْ الْقَوْمِ الْكَافِرِينَ(85,86)10
அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம்எங்கள் இறைவாஅநீதி இழைத்த கூட்டத் தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதேஉனது அருளால் (உன்னைமறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!.
திருக் குர்ஆன் 10:85, 86
بِاِسْمِ اللهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ(41)11

அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்நிற்பதும் உள்ளதுஎன் இறைவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.
திருக் குர்ஆன் 11:41
فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنْتَ وَلِيّيْ فِي الدُّنْيَا وَالآخِرَةِ تَوَفَّنِيْ مُسْلِمًا وَأَلْحِقْنِيْبِالصَّالِحِينَ (101)12

வானங்களையும்பூமியையும் படைத்தவனேநீயே இவ் வுலகிலும்மறுமையிலும் எனது பாதுகாவலன்என்னை முஸ்மாகக் கைப்பற்றுவாயாகநல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!
திருக் குர்ஆன் 12:101
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ(40)14
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ(41)14
 
என் இறைவாஎன்னையும்என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாகஎங்கள் இறைவாஎனது பிரார்த்தனையை ஏற்பாயாகஎங்கள் இறைவாஎன்னையும்எனது பெற்றோரையும்நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
திருக் குர்ஆன் 14:40,41
رَبّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا (24)17

சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவாஇவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!
திருக் குர்ஆன் 17:24
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا(10)18

எங்கள் இறைவாஉன் அருளை எங்களுக்கு வழங்குவாயாகஎங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!
திருக் குர்ஆன் 18:10
رَبّ إِنِّيْ وَهَنَ الْعَظْمُ مِنِّيْ وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبّ شَقِيًّا(4وَإِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِيْ وَكَانَتْ امْرَأَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَدُنْكَ وَلِيًّا(5)19

என் இறைவாஎன் எலும்பு பலவீனமடைந்து விட்டதுதலையும் நரையால் மின்னுகிறதுஎன் இறைவாஉன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாயாக இருந்ததில்லைஎனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன்என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார்எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!
திருக் குர்ஆன்19:4,5
رَبّ اشْرَحْ لِيْ صَدْرِيْ(25) وَيَسّرْ لِيْ أَمْرِيْ (26) وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِيْ (27)يَفْقَهُوْا قَوْلِيْ(28)20

என் இறைவாஎனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்துஎனது பணியை எனக்கு எளிதாக்குஎனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
திருக் குர்ஆன் 20:25,26,27,28
رَبّ زِدْنِيْ عِلْمًا(114)20

என் இறைவாஎனக்குக் கல்வியை அதிகப்படுத்து!
திருக் குர்ஆன் 20:114
أَنّيْ مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ (83)21

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டதுநீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்.
திருக் குர்ஆன் 21:83
لاَ إِلهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنتُ مِنْ الظَّالِمِيْنَ (87)21

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லைநீ தூயவன்நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்.
திருக் குர்ஆன் 21:87
رَبّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ (89)21

என் இறைவாஎன்னைத் தனியாளாக விட்டு விடாதேநீ மிகச் சிறந்த உரிமையாளன்.
திருக் குர்ஆன் 21:89
رَبّ انصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ(26)23

என் இறைவாஅவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 23:26
اَلْحَمْدُ للهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ (28)23

அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
திருக் குர்ஆன் 23:28
رَبّ أَنزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ (29)23

என் இறைவாபாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாகதங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 23:29
رَبّ انصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ(39)23

என் இறைவாஅவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 23:39
رَبّ فَلاَ تَجْعَلْنِيْ فِي الْقَوْمِ الظَّالِمِيْنَ (94)23

என் இறைவாஎன்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!
திருக் குர்ஆன்23:94
رَبّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَات الشَّيَاطِيْنِ (97) وَأَعُوْذُ بِكَ رَبّ أَنْ يَحْضُرُوْنِ (98)23

என் இறைவாஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என் இறைவாஎன்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
திருக் குர்ஆன் 23:97,98
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ(109)23

எங்கள் இறைவாநம்பிக்கை கொண்டோம்எங்களை மன்னித்து அருள் புரிவாயாகநீ கருணையாளர்களில் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 23:109
رَبّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ (118)23

என் இறைவாமன்னித்து அருள்புரிவாயாகநீ அருள்புரிவோரில் சிறந்தவன்.
திருக் குர்ஆன் 23:118
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا(65)25

எங்கள் இறைவாஎங்களை விட்டும் நரகத்தின் வேதனை யைத் தடுப்பாயாகஅதன் வேதனை நிலையானதாக இருக்கிறதுஅது மோசமான ஓய்விடமாகவும்தங்குமிடமாகவும் இருக்கிறது.
திருக் குர்ஆன் 25:65
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا(74)25

எங்கள் இறைவாஎங்கள் வாழ்க்கைத் துணைகளிருந்தும்மக்களிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை)அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கு வாயாக!
திருக் குர்ஆன் 25:74
إِنَّا نَطْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَنْ كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ(51)26

நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
திருக் குர்ஆன் 26:51
اَلَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ(78)وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ(79)وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ (80) وَالَّذِيْ يُمِيتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ (81)وَالَّذِيْ أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِيْ خَطِيئَتِيْ يَوْمَ الدّيْنِ(82)رَبّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ(83) وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِيالآخِرِيْنَ(84)وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ(85)وَاغْفِرْ لأَبِيْ إِنَّهُ كَانَ مِنَ الضَّالّيْنَ(86)وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ(87)26

அவனே என்னைப் படைத்தான்அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான்அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்பருகச் செய்கிறான்.நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்என் இறைவாஎனக்கு அதிகாரத்தை அளிப்பாயாகஎன்னை நல்லோருடன் சேர்ப்பாயாகபின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாகஇன்பமான சொர்க்கத்தின் வாரிசு களில் என்னையும் ஆக்குவாயாகஎன் தந்தையை மன்னிப்பாயாகஅவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவு படுத்தி விடாதே!
திருக் குர்ஆன் 26:78, 26:87
فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِيْ وَمَنْ مَعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ(118)26

எனக்கும் அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாகஎன்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!
திருக் குர்ஆன் 26:118
رَبّ نَجّنِيْ وَأَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ (169)26

என் இறைவாஎன்னையும்என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!
திருக் குர்ஆன் 26:169
اَلْحَمْدُ للهِ الَّذِيْ فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ(15)27

நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
திருக் குர்ஆன் 27:15
رَبّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًاتَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِيْنَ(19)27

என் இறைவாஎன் மீதும்எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும்நீ திருப்தி யடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாகஉனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!
திருக் குர்ஆன் 27:19
رَبّ إِنّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ (16)28

என் இறைவாஎனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன்எனவே என்னை மன்னிப்பாயாக!
திருக் குர்ஆன் 28:16
رَبّ نَجّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ(21)28

என் இறைவாஅநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!
திருக் குர்ஆன் 28:21
رَبّ إِنّيْ لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ (24)28

என் இறைவாஎனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன்.
திருக் குர்ஆன் 28:24
رَبّ انصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ (30)29

என் இறைவாசீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 29:30
رَبّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِينَ(100)37

என் இறைவாஎனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்தருவாயாக!
திருக் குர்ஆன் 37:100
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِ خْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالاِيمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاً لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ(10)59

எங்கள் இறைவாஎங்களையும்நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாகஎங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதேநீ இரக்கமுடையோன்நிகரற்ற அன்புடையோன்.
திருக் குர்ஆன் 59:10