Wednesday, September 26, 2012

நடைபயிற்சி


உங்களுக்குத் தொழ வைக்கமுன் 
நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.
நடைபயிற்சி

அக்குபஞ்ச்சர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், இது சைக்கிள் டயரை பஞ்ச்சர் செய்வதுபோல,நம்முடைய பாதத்தை பஞ்ச்சர் செய்து சில வியாதிகளை பக்குவப்படுத்துவதுதான் அது அல்லாஹ் நம் பாதத்தை நடப்பதற்காகத்தான் படைத்து இருக்கின்றான்..நடக்காமல் நந்திபோல் இருப்பதால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை நாம் பார்த்து / அனுபவித்து கொண்டு இருக்கின்றோம்.அல்லாஹ் காப்பானாக அமீன்

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு சென்சர் (sensor)  புள்ளி நம் பாதத்தில் உண்டு,அங்குதான் அதன் நரம்புகள் முடிவடைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன, கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும், இதயம் வலப்புற பாதத்தில் உள்ளதை அறியலாம்,அந்த சென்சார் புள்ளிகளை மசாஜ் செய்வது மூலம்,அதன் வலிகளை குணப்படுத்த முடியும் என்று பஞ்ச்சர் செய்பவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் நாம் நடக்க பாதத்தை வைத்து அதன் மூலம் நம் உறுப்புகளை சுறுசுறுப்படைய செய்கின்றான் அதனால் தொடர்ந்து உறுப்புகளை மசாஜ் செய்வோமா அட அதாங்க “வாக்கிங்” போவமா நண்பர்களே

இரத்தவகையும், குணங்களும்

முயற்சிதான் மெய் வருத்தக்கூலிதரும் என்ற சொல்லுக்கு ஏற்ப, நாம் எந்த் அளவிற்கு தூய்மையான எண்ணத்துடன் முயற்ச்சி செய்கிறோமோ அந்த அளவிற்குத்தான் வெற்றி கிட்டும், அடுப்பே எரிக்காமே அல்லாஹ் சோறு தருவான் என்றிருப்பது மடமையின் உச்சகட்டம்

ஒரு சில ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த தகவல்கள் படி வெவ்வேறு இரத்த குருப்பை சேர்த்தவர்களின் குணாதிசியங்கள் எப்படி இருக்கு என்று பார்ப்போம். இது உங்கள் குணங்களுடன் ஒத்து போகவில்லையென்றால் எனக்கெதிரா எதுவும் கேஸ் போட்டுராதீங்க.. !

‘O” டைப்

எதற்க்கும் தலைமை தாங்க வேண்டும் என்ற விருப்பம், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தாகம் அதனை அடையும் வரை களைப்படையாத முயற்ச்சி,உங்களை நம்பலாம் அவ்வளவு நல்லவரு நீங்க,ஆனா சாதனைகள் செய்தாலும் பெருமை அடித்துக்கொள்வீர்கள் கொஞ்சம் பொறாமையும் உங்களிடம் உண்டு

‘A” டைப்

உங்களுக்கு ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பு ரொம்ப அதிகம்,மற்ற ஆள்கள் கூட பழகkகூடிய,பொறுமையாக உள்ள அன்பானவங்க நீங்க கொஞ்சம் பிடிவாத குணமும்,பரபரப்பாகவும் திரிவீங்க நீங்க

’B” டைப்

நீங்க கொஞ்சம் அப்படியும் இப்படியும் உள்ள நபர்தான், முகத்திற்கு நேரா பேசக்கூடிய ஆள்தான் உங்க வழியிலயே எல்லாத்தையும் செய்ய விரும்புவீங்க.கிரியேட்டிவிட்டியும் உங்களிடம் உண்டு ,ஆனால் நீங்க தனியாக சும்மா கம்பு போல நின்று செயல்களை செய்ய வேண்டும் என்ற குணம் உங்களை சில சமயம் துன்பத்திலும் மாட்டிவிடும்

“AB” டைப்

கூலான / கட்டுப்பாடனா ஆள்தான் நீங்க.எல்லாருக்கும் உங்களை பிடிக்கும், இயற்கையாகவே மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்ற குணம் உங்களிடம் மேலோங்கி இருக்கும்,ஆனா உங்களக்கு நட்ப்போட பழகத்தெரியாது, ஒரு விசயத்தில் 'டக்'கென்று முடிவெடுக்கவும் தெரியாது

என்னங்க! தகவல்கள் நல்லா இருந்துச்சா இல்லை புளிச்சமாவை அரைத்த கதைதானா!?
ன் செயல்கள் னைத்தும் 
ன் ண்ணங்களின் டிதான் டக்கும். 
( நபி மொழி !!!)
M.Zahir husseன்

Thursday, September 13, 2012

கோடையில் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க . . .


கோடையில் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க . . .

Posted on April 6, 2012 by muthukumar
கோடைகாலத்தில் வியர்வை ஆறாக பெருகுவதால் உடலில் துர்நாற்றம் வீசும். அதேபோல் பாதங்களில் எழும் விரும்பத்தகாத வாசனையினால் பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. கோடையில் வியர்வை நாற்றத் தைப் போக்க நாம் ம‌ட்டு‌ம் தூ‌ய்மை யாக இரு‌ந்தா‌ல் போதாது, ‌நாம் உபயோகிக்கும் ஷூ, செரு‌ப்பு போ‌ ன்றவ‌ற்றையு‌ம் தூ‌ய்மையாக வை‌த்‌திரு‌க்க வேண்டும். அப்பொழு து தான் நம் பாதங்களை ஆரோக் கியமாகவும், அழகாகவும் பராமரி க்கமுடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பாதங்களை கழுவுங்கள்
அடிக்கடி குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவுங்கள். இதனால் துர் நாற்றம் வீசுவது தடுக்கப்படும். பழைய ஷூ, சாக்ஸ் போன்றவைகளை மாற்றுங்கள். சில செரு‌ப்புக‌ள் ‌நீ‌ரி‌ல் ப‌ட்டது‌ம், ‌நீரை உ‌ள்‌ளிழு‌த் து‌க்கொ‌‌ள்ளு‌ம் த‌ன்மை இரு‌க்கு‌ம். அ‌ந்நீ‌ரி‌ல் செரு‌ப்பு ஊ‌றி அதனா‌ல் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்ட செரு‌ப்புகளை ‌நீ‌ர் ப‌ட்டது‌ம் உடனடியாக வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.
உலர்வாக வையுங்கள்
‌விய‌ர்வை ம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ள் அ‌ணியு‌ம் ‌சில பொரு‌ட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் ‌ உ‌ங் க‌ள் ‌மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். வெய் யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாறு அ‌ணிய வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌தினமு‌ம் சா‌க்ஸை துவை‌த்து‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கூடுமானவரை பருத்தி யா‌ல் செ‌ய்ய‌ப் ப‌ட்ட சாக்ஸ் அணி வது நல்லது. மேலும் சாக்ஸ் அணி யும்முன் காலில் பவுடரை தடவவு ம். இது வியர்வையை தடுத்து காலை உலர்ந்த நிலையில் வை க்க உத வும்.
டேனின் டீ
கோடைகாலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் வாசனைப் பொருட் கள் அதிகம் கொண்ட உணவுக ளை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற உணவுகளை உண்ணக்கூடாது . இதனால் வியர்வை மூலம் துர்நாற்றம் பரவுவது தடுக்கப் படும்.
டேனின்கள் கொண்ட தேநீரை தண்ணீரில் கலந்து 10 ஊற வைக் கலாம். பின்னர் பாதங்களை அரை மணிநேரத்திற்கு அந்த தண்ணீரில் ரிலாக்ஸ்சாக ஊறவைக்கவும். இது அதிகம் வியர்வை சுரப்பதை கட்டு ப்படுத்தும். பாதங்களை உலர்வாக வைக்கும்.
பாதங்களின் பாதுகாப்பு
வீட்டில் சிமெண்ட் அல்லது மொ சைக் தரையாய் இருந்தால் கண்டி ப் பாக காலணி அணிந்துக் கொண்டு தான் நடக்க வேண்டும்.
டெட்டாலும் (DETTOL) உப்பும் கலந்த சூடான தண்ணீரில் சோப் பைக் கலந்து பாதத்தை அதில் மூழ்கு ம்படி வைக்க வேண்டும்.
வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரி ல் உப்பை கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வே ண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் ‘ஆலிவ் ஆயில்’ தேய்த்து மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்.
காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளு க்கு இரவில் படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.
காலில் வீக்கம்
 தூதுவளை இலைகளையும், நற்சு ங்கள் இலைகளையும் எடுத்து, சி றிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண் டைக் காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைக ளை டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

நாடுகளும் அதன் தலைநகரங்களும்


நாடுகளும் அதன் தலைநகரங்களும்

1.அங்கோலா — லுவாண்டா. (Luvanda)
2.அசர்பைஜான் — பாகூ.
3.அமெரிக்கா — வாஷிங்டன் டி.சி
4.பியூர்டோரிகோ — சான்ஜிவான்
5.குவாம் — அகானா
6.வடக்கு மரியானாத் தீவுகள் — சாய்பான்.
7.சமோவா — பாகோ
8.வெர்ஜின் தீவுகள் — சார்லோட்டா
9.அயர்லாந்து — டப்ளின். (Dublin)
10.அர்மீனியா — ஏரவன். (Yereven)
11.அர்ஜென்டீனா — போனஸ் அயர்ஸ். (Buenos aires)
12.அல்பேனியா — டிரானா. (Tirana)
13.அல்ஜீரியா — அல்ஜீயர்ஸ். (Algiers)
14.அன்டோரா — அண்டோரா லா வெல்லா. (Andorra La velle)
15.ஆப்கானிஸ்தான் — காபூல். (Kabul)
16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா — செயின்ட் ஜோன்ஸ். (saint Johns)
17.ஆஸ்திரியா — வியன்னா. (Vienne)
18.ஆஸ்திரேலியா — கான்பெர்ரா. (Canberra)
19.இத்தாலி — ரோம். (Rome)
20.இந்தியா — புதுடில்லி. (New Delhi)
21.இந்தோனேசியா — ஜகார்த்தா. (Jakartha)
22.இராக் — பக்தாத். (Baghdad)
23இரான் — டெஹ்ரான். (Teheran)
24.இலங்கை — கொழும்பு. (Colombo)
25.தமிழீழம் — திருகோணமலை. (Tringo)
26.இஸ்ரேல் — ஜெருசலேம். (Jerusalem)
27.ஈக்வாடார் — க்யுடோ. (Quito)
28.ஈக்வடோரியல் கினியா — மலபோ. (Malabo)
29.உக்ரைன் — கீவ். (Kive)
30.உகண்டா — கம்பாலா. (Kampala)
31.உருகுவே — மோண்டேவிடியோ. (Montevodeo)
32.உஸ்பெகிஸ்தான் — தாஷ்கண்ட். (Tashkent)
33.எகிப்து — கெய்ரோ. (Cairo)
34.எத்தியோப்பியா — அடிஸ் அபாபா. (Addis Ababa)
35.எரித்ரியா — அஸ்மாரா. (Asmara)
36.எல்சால்வடார் — சன்சால்வடார். (San Salvador)
37.எஸ்தோனியா — டால்லின். (Tallin)
38.ஐக்கிய அரபுக் குடியரசுகள் — அபுதாபி. (Abudhabi)
39.ஐவரி கோஸ்ட் — யமெளஸ்செளக்ரோ. (Yamoussoukro)
40.ஐஸ்லாந்து — ரெய்க்ஜாவிக். (Reykjqvik)
41.ஓமன் — மஸ்கற். (muscut)
42.கத்தார் — தோஹா. (Doha)
43.கம்போடியா — போனெம்பென்க். (Phnom Penh)
44.கயானா — ஜார்ஜ் ரவுன். (geroge Town)
45.கனடா — ஒட்டாவா. (Ottawa)
46.கஸகஸ்தான் — அல்மாதி. (Almathy)
47.காங்கோ — பிரசஸ்சஸாவில்லே. (Brazzaville)
48.காங்கோ (முன்னாள் ஜயர்) — கின்ஷாஸா. (Kinshasa)
49.காபோன் — லிப்ரவில்லே. (Libreville)
50.காமரூன் –யாவூண்டே. (Yaounde)
51.கமரோஸ் — மொரோனி. (Moroni)
52.காம்பியா — பன்ஜீல் . (Banjul)
53.கானா — அக்ரா. (Accra)
54.கியூபா — ஹவானா. (Havana)
55.கிர்கிஸ்தான் — பிஸ்ஹேக். (Biskek)
56.கிரிபாடி — தராவா. (Tarawa)
57.கிரீஸ் — ஏதென்ஸ். (Athens)
58.கிரெனடா — செயின்ட் ஜார்ஜஸ். (Saint Geroges)
59.கினியா — கோனக்ரி. (Conakry)
60.கினியா_பிஸ்ஸெல் — பிஸ்ஸெல். (Bissau)
61.குரோசியா — சியாக்ரெப். (Zagreb)
62.குவைத் — குவைத். (Kuwait)
63.கென்யா — நைரோபி. (Nairobi)
64.கேப்வெர்ட் — பிரய்யா. (Praia)
65.வடகொரியா — பியோங்யாங். (Pyongyang)
66.தென்கொரியா — சியோல். (Seoul)
67.கொலம்பியா — பொகோடா. ( Bogota)
68.கோஸ்டாரிகா — சான் ஜோஸ். (San Jose)
69.கெளதமாலா — கெளதமாலா நகர். (Gautemala City)
70.மேற்கு சமோவா — அபியா. (Apia)
71.சஹ்ராவி அரபுக் குடியரசு — எல் _ அலயுன். (El_ Alayun)
72.சாத்ட் — இன்ட்ஜாமெனா. (N`Djamena)
73.சாம்பியா — லுசாகா.( lusaka)
74.சாலமன் தீவுகள் — ஹோனியரா. (Honiara)
75.சாடோம் மற்றும் பிரின்சிப் — சாடோம். (Sao Tome)
76.சன்மரினோ — சன்மரினோ. (San Marino)
77.சிங்கப்பூர் — சிங்கப்பூர். (Singapore)
78.ஜிம்பாவ்வே — ஹராரே. (Harera)
79.சிரியா — டமாஸ்கல். (Damascus)
80.சியர்ரா லியோன் — ப்ரீரவுன். (Free Town).
81.சிலி — சாண்டியாகோ. (Santiago)
82.சீனா — பெய்ஜிங். (Beijing)
83.சுவாசிலாந்து — பாபேன். (Mbabne)
84.சுவிட்சர்லாந்து — பெர்ன். (bern)
85.சுவீடன் — ஸ்டாக்ஹோம். (Stockhalm)
86.சுரினாம் — பரமரிபோ. (Paramaribo)
87.சூடான் — கார்டூம். (Khartoum)
88.செக் குடியரசு — பராகுவே. (Prague)
89.செனகல் — .தாகர். (dakar)
90.செயின்ட்கிட்ஸ் — நெவிஸ்_ பெஸ்ஸடர். (Besseterre)
91. செயின்ட் லூசியா — காஸ்ட்ரீஸ். (Castries)
92.செயின்ட்வின்சென்ட் — கிங்ஸ்டவுன். (Kings Town)
93.சேஷெல்ஸ் — விக்டோரியா. (Victoriya)
94.சைப்ரஸ் — நிகோசியா. (Nicosia)
95.சோமாலியா — மொகடிஷூ. (Mogadishu)
96.செளதி அரேபியா — ரியாத். (Riyadh)
97.டிரினிடாப் மற்றும் டொபாகோ — போர்ட் ஆஃப் ஸ்பெயின். (Pot os Spain)
98.டென்மார்க் — கோபன்ஹேகன். (Copenhagen)
99.டொமினிகன் குடியரசு — சான்டோ டொமின்கோ. (Santo Domingo)
100.டொமினிகா — ரோஸியு. (Roseu)
101.டோகோ — லோம் (Lome)
102.டோங்கா — நுகு அலோஃபா (Nuku Alofa)
103.தாய்லாந்து — பாங்காக் (Bangkok)
104.தான்சானியா — டூடுமா (Dodoma)
105.தஜிகிஸ்தான் — துஷான்பே (Dushanbe)
106.துர்க்மேனிஸ்தான் — அஷ்காபாத் (Ashkhabad)
107.துருக்கி — அங்காரா (Ankara)
108.துனிசியா — துனிஸ் (Tunis)
109.துவலு — புனாஃபுதி (Funa Futi)
110.தாய்வான் — தைபே (Taipei)
111.தென் ஆப்பிரிக்கா — கேப்ரவுன் (cape Town)
112.நமீபியா — வின்ட்ஹோக் (Windhoke)
113.நோர்வே — ஒஸ்லோ (Oslo)
114.நிகரகுவா — மனாகுவா (managua)
115.நியூசிலாந்து — வெல்லிங்டன் (Wellington)
116.நெதர்லாந்து — ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)
117.நேபாளம் — காட்மாண்டு (Kathmandu)
118.நைஜர் — நியாமி (Niyamey)
119.நைஜீரியா — அபுஜா (Abuja)
120.நெளரு — யாரென் (Yaren)
121.பங்களாதேஷ் — டாக்கா (Dhaka)
123.பராகுவே — அகன்சியான் (Aguncian)
124.பல்கேரியா — சோஃபியா (Sofia)
125.பலாவ் — கோரோர் (koror)
126.பனாமா — பனாமா நகர் (Panama City)
127.பஹ்ரைன் — மனாமா (Manama)
128.பஹாமாஸ் — நஸ்ஸாவ் (Nassau)
129.பாகிஸ்தான் — இஸ்லாமாபாத் (Islamabad)
130.பாப்புவா நியூகினியா — போர்ட் மோர்ஸ்பி (Port Moreshby)
131.பார்படோஸ் — பிரிட்ஜ் ரவுன் (Bridge Town)
132.பாலஸ்தீனம் — காஸா (Gaza)
133.ஃபிரான்ஸ் — பாரிஸ் (Paris)
134.பிரிட்டன் — லண்டன் (London)
135.வடக்கு அயர்லாந்து — பெல்ஃபாஸ்ட் (Belfast)
136.ஸ்காட்லாந்து — எடின்பர்க் (Edinburg)
137.ஐஸ் ஆஃப் மேன் — டக்ளஸ்
138.அங்குய்லா — திவாலி
139.பெர்முடா — ஹாமில்டன்
140.மான்ட்செரட் — பிளைமவுத்
141.பிரேசில் — பிரேசிலியா (Brasillia)
142.ஃபிலிப்பைன்ஸ் — மணிலா (manila)
143.ஃபின்லாந்து — ஹெல்சிங்கி (helsinki)
144.ஃபிஜி — சுவா (Suwa)
145.புருண்டி — புஜீம்பரா (Bujumbura)
146.புருனை — பந்தர் செரி பெகாவன் (Bandar seri Begavan)
147.பிர்கினாஃபாஸோ –அவ்கதெளகெள (Ouagadougou)
148.பூட்டான் — திம்பு (Thimpu)
149.பெரு — லிமா (Lima)
150.பெல்ஜியம் — பிரல்ஸல்ஸ் (Brussels]
151.பெலராஸ் — மின்ஸ்க் (Minsk)
152.பெலிஸ் — பெல்மோபான் (Belmopan)
153.பெனின் — போர்டோ (Porto _ Nova)
154.பொலிவியா — லாபாஸ் (Lapaz)
155.போட்ஸ்வானா — காபோரோன் (Gaborne)
156.போர்த்துக்கல் — லிஸ்பன் (Lisbon)
157.போலந்து — வார்ஸா (Warsaw)
158.போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா — சரோஜிவோ (Sarajevo)
159.மங்கோலியா — உலன்பதார் (Ulan Bator)
160.மடகாஸ்கர் — அன்டானானாரிவோ (Antananarivo)
161.மத்திய ஆப்பிரிக்க குடியரசு — பான்குய் (Bangui)
161.மலாவி — லிலாங்வே (Lilongwe)
162.மலேசியா — கோலாலம்பூர் (Kula Lumpore)
163.மார்ஷல் தீவுகள் — மஜீரோ (Majuro)
164.மாரிடானியா — நவாக்சோட் (Nouak Chott)
165.மால்டா — வலேட்டா (Valetta)
166.மால்டோவா — சிசிநவ் (Chisinau)
167.மாலத்தீவுகள் — மஜீரோ (male)
167.மாலி — பமாகோ (Bamako)
168.மாசிடோனியா — ஸ்கோப்ஜே (Skopeje)
169.மியான்மர் — யங்கோன் (Yangon)
170.மெக்சிகோ — மெக்சிகோ நகர் (Mecixo City)
171.மைக்ரோனேஷியா — பாலிகிர் (Palikir)
172.மொரிசியஸ் — போர்ட் லூயிஸ் (Port Louis)
173.மொனாக்கோ — மொனாக்கோ (Monaco)
174.மொசாம்பிக் — மொபுடோ (Maputo)
175.யூகோஸ்லாவியா — பெல்கிரேட் (Belgrade)
176.யேமன் — சனா (Sana)
177.ருமேனியா — புகாரெஸ்ட் (Bucharest)
178.ருவாண்டா — கிகாலி (Kigali)
179.ரஷ்யா — மொஸ்கோ (Moscow)
180.லக்ஸம்பார்க் — லக்ஸம்பார்க் (Luxenberg)
181.லாட்வியா — ரிகா (Riga)
182.லாவோஸ் — வியாணன்டைன் (Vientiane)
183.லிச்டென்ஸ்டெயின் — வடூஸ் (Vaduz)
184.லிதுவேனியா — வில்னியஸ் (Vilnius)
185.லிபியா — திரிபோலி (Tripoli)
186.லெசோதா — மஸெரு (Maseru)
187.லெபனான் — பெய்ரூட் (Beirut)
188.லைபீரியா — மன்ரோவியா (Monorovia)
189.வனுவது — விலா (Vila)
190.வத்திக்கன் — வத்திக்கன் நகர் (Vatican City)
191.வியட்னாம் — ஹனோய் (Hanoi)
192.வெனிசுலா — கராகஸ் (Caracas)
193.ஜப்பான் — டோக்கியோ (Tokyo)
194.ஜமைக்கா — கிங்ஸ்டன் (Kington)
195.ஜார்ஜியா — திபிலிசி (Tbillisi)
196.ஜிபூடி — ஜிபூடி (Djibouti)
197.ஜெர்மனி — பேர்ளின் (Berlin)
198.ஜோர்டான் — அம்மான் (Amman)
199.ஸ்பெயின் — மாட்ரிட் (Madrid)
200.ஸ்லோவாகியா — பிராட்டிஸ்லாவா (Bratislava)
201.ஸ்லோவேனியா — ஜூபில்ஜானா (Ljubljana)
202.ஹங்கேரி — புட்டாபெஸ்ட் (BudaBest)
203.ஹாங்காங் — விக்ரோரியா (Voctoriya)
204.ஹோண்டுராஸ் — டெகுசிகல்பா (Tegueigalpa)
205.ஹைதி — போர்ட் _ அவு _ பிரின்ஸ் (Port _ Au _ Prince)
 
K.Anvar Ali
Kuwait
+965-97170648 

Saturday, September 8, 2012

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை


ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை



அப்துந் நாசிர்

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்


ஸகாத்தை நிறைவேற்றுபவர்களின் சிறப்புகளையும், மறுமையில் அடையவிருக்கும் நன்மைகளையும் நாம் விரிவாகப் பார்த்தோம். அதே நேரத்தில் ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
இத்தகைய கொடும் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் அவசியம் ஸகாத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் ஸகாத்தைக் கணக்கிட்டு நிறைவேற்றும் விசயத்தில் பொடும்போக்கானவர்களாகவே இருக்கின்றார்கள்.

மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. செல்வ வசதியைப் பெற்றும் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். ஸகாத்தை நிறைவேற்றி மறுமை வேதனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதோ ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்

இணை கற்பிப்பவர்களின் பண்பு


இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்

அல்குர்ஆன் 41:6, 7

இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற ஒருவன் தான் ஸகாத்தை நிறைவேற்ற மாட்டான். இது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்கலாமா? ஒரு போதும் இருக்கக் கூடாது. உண்மையான முஸ்லிம்கள் ஸகாத்தை முறையாக நிறைவேற்றி விடுவார்கள்
மறுமையில் நஷ்டவாளிகள்

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது அவர்களிடம் நான் போய்ச் சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் "கஅபாவின் அதிபதி மீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன்

என்னால் இருப்புக் கொள்ள முடியாததால் உடனே எழுந்து, "என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர'' என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, "ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததை விடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்'' என்று கூறினார்கள்

நூல்கள்: புகாரி (6638), முஸ்லிம் (1809

சூடாக்கப்பட்ட கல்லினால் நரக வேதனை


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்

அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி (1408
பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும்


அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்

அல்குர்ஆன் 9:34

தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது'' என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை'' என்று விளக்கமளித்தார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி ) 
நூல்: அபூதாவூத் (1417 )
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நூல்: முஸ்லிம் (1803 )
அல்லாஹ் மறுமை நாளில் மக்களை மஹ்ஷர் மைதானத்தில் ஒன்று கூட்டுவான். மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். ஸகாத் வழங்காதவனுக்குக் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவனுடைய செல்வங்கள் பழுக்கக் காய்ச்சி அவனுக்கு சூடு போடப்படும் .

அல்லாஹ் ஸகாத் வழங்காதவனிடம் கேள்வி கணக்குக் கேட்பதற்கு இரண்டு நாட்கள் தாமதமாக்கினால் ஒரு லட்சம் வருடங்களாகி விடும். அது வரை அவனுக்கு இந்த வேதனை தான். ஆனால் எத்தனை நாட்கள் தாமதமாக்கி நம்மிடம் கேள்வி கேட்பான் என்று நாம் உறுதியாகக் கூற முடியுமா? இதனை எண்ணிப் பார்க்கும் போது நம்முடைய உள்ளம் பதறுகிறது. அல்லாஹ் இந்த வேதனையிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய செல்வத்திற்கான ஸகாத்தை நாம் வழங்கி விட வேண்டும் .

ஸகாத் வழங்காதவர் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவருக்கு மஹ்ஷர் மைதானத்தில் வேதனை நடைபெறும். இவ்வாறே கால்நடைகளுக்கான ஸகாத்தை வழங்காவதர்களுக்கும் மஹ்ஷர் மைதானத்தில் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை வேதனை செய்யப்படும். பிறகு அவனிடம் கேள்வி கணக்கு கேட்ட பிறகு அவனுக்கு சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ தீர்ப்பளிக்கப்படும் என நபியவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கூறியுள்ளார்கள் .

இதிலிருந்து ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்றாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம் தான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

கழுத்து நெரிக்கப்படுதல்


அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் .

அல்குர்ஆன் 3:180

இவ்வசனம் ஸகாத் வழங்காதவர்களைத் தான் குறிக்கிறது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் .

பாம்பாக மாறும் செல்வம்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம், கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் தான் உனது செல்வம்; நான் தான் உனது கருவூலம்' என்று சொல்லும் இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, "அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.'' எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி ) 
நூல்: புகாரி (1403 )

பாம்பின் வாயினால் கடிபடுதல்

"(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது "இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து) வந்த உனது செல்வம்'' என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும் .

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி ) 
நூல்: முஸ்லிம் (1807 )

நரகத்தின் காப்புகள்


யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தன்னுடைய மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவளுடைய மகளின் கையில் கெட்டியான இரு தங்க வளையல்கள் இருந்தன. "இதற்குரிய ஸகாத்தை நீ நிறைவேற்றி விட்டாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள், இல்லை என்று கூறினாள். "இந்த இரண்டிற்கும் பகரமாக மறுமை நாளிலே நெருப்பாலான இரண்டு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு சந்தோசமளிக்குமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண் அந்த இரண்டையும் கழற்றினார். பிறகு அந்த இரண்டையும் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கினார். பிறகு, "இவையிரண்டும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்குமுரியது'' என்று கூறினார் .

அறிவிப்பவர்: அம்ரு பின் ஆஸ் (ரலி ) 
நூல்: நஸாயீ (2434 )

ஒட்டகத்திற்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை

"அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும் - மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டு களாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி ) 
நூல்: முஸ்லிம் (1803 )

ஆடுகளுக்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை

"அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்று விடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி ) 
நூல்: முஸ்லிம் (1803 )

நபியவர்களின் உதவி இல்லை


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும் . மேலும் உங்களில் யாரும் மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து (அபயம் தேடிய வண்ணம்) "முஹம்மதே' எனக் கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் . மேலும் யாரும் (மறுமை நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து "முஹம்மதே' எனக் கூற, அதற்கு நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று சொல்லும் படியான நிலைமை ஏற்பட வேண்டாம். (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் .''


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி ) 
நூல்: புகாரி (1402 )



நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக !

நன்றி: தமிழ்குரான்.இன்
Engr.Sulthan

பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...



பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...



மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.



அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.

நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.



குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடையவில்லை என்றால் அந்தப் பெண், குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்குரியவர் ஆகிறார். அவர் தாய்மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப்படவேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல்பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்' மூலம் கண்டறியலாம்.

சினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்துபோகும் கருக்குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பிங்கோ கிராம்' எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடைப்புகளை துல்லியமாக கண்டறிந்து விடலாம்.

`அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய்யும்போது கட்டிகளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்டறிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகையை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.

பெண் கர்ப்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப்பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவுண்ட்` மூலம் கண்டுபிடித்து விடலாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்பகாலத்துக்கு தக்கபடி குழந்தையின் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

கர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னியோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க்கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல்லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவரீதியாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.

36-38 வது வாரங்கள் கர்ப்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோடிக் திரவத்தின் அளவு, குழந்தையின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடியின் நிலை போன்றவைகளை எல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்ப்பிணிக்கு சுக பிரசவமா? சிசேரியனா என்று முடிவு செய்துவிடலாம்.

`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளிவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பை வாய் புற்றுநோயையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.

மார்பக புற்றுநோய் பெண்களை அச்சப்படுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக 40 வயதுவாக்கில் இதன் தாக்குதல் ஏற்படுகிறது. மார்பக சுய பரிசோதனை மூலம் பெண்களே கட்டி ஏதாவது இருக்கிறதா என்று கண்டறியலாம். அதை எவ்வாறு செய்துபார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம். மார்பக காம்புகளில் இருந்து பச்சை கறுப்பு நிறம் கலந்த திரவம் வந்தாலும், சிவப்பு நிற திரவம் வந்தா லும், காம்புகள் உள் இழுத்த நிலைக்கு சென்றாலும் பெண்கள் உஷாராகிவிட வேண்டும். ஒருவேளை அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முழு மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ- முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ- வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போல் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தவித தயாரெடுப்பும் இன்றி இயல்பாக வந்து, பத்து நிமிடத்திலே இந்த பரிசோதனையை செய்து முடித்திடலாம்.

மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய `எப்.என்.ஏ.சி` என்கிற நீடில் முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கின் வழிகாட்டுதல்படி துல்லியாக செய்ய முடிகிறது.

மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதை கடக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்துவிடலாம். 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபேராசிஸ் என்ற எலும்பு பலகீன நோய் உருவாகிறது. எந்த அளவுக்கு எலும்பு பலகீனமாக இருக்கிறது என்பதை `டெக்ஸ்சா ஸ்கேன்' மூலம் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை கொடுக்கலாம்.

நோய்களை கண்டுபிடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த ஸ்கேன் முறைகள் தற்போது நோயை கண்டறிவதோடு மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் முறையாகவும் மேம்பட்டிருக்கிறது. பெண்ணின் கருப்பையில் கட்டி இருப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தால், `ஹை இன்டன்சிட்டி போக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட்' எனப்படும் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை பாய்ச்சி கட்டியை கரைத்துவிட முடியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் வழிகாட்டுதல்படி இதை செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கத் துறை அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை பெற்றுவிடும்.

பெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளியே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத்திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.

விளக்கம்: டாக்டர் பியூலா இம்மானுவேல் M.B.B.S.,D.M.R.D.,D.N.B.

சட்டப் படிப்பில் சேர்வது எப்படி?


சட்டப் படிப்பில் சேர்வது எப்படி?


சமூகத்தில் ஒரு சக்தி வாய்ந்த படிப்பாக திகழும் சட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகளை மாணவர்கள் தெளிவாக அறிந்துகொண்டால் நன்மை பயக்கும்.
படிப்புகள்.

சட்ட இளநிலைப் படிப்பு(LL.B) என்பது இன்னும் பிரபலமாக இருக்கும் ஒரு படிப்பு. ஒருங்கிணைந்த B.A. LL.B, B.Sc. LL.B, BBA. LL.B and B.Com. LL.B படிப்புகளும் பிரபலமானவை. மேலும், சட்ட முதுநிலைப் படிப்பையும்(LL.M) மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.

வணிக சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற, Master of Business Law என்ற படிப்பை மேற்கொள்ளலாம். மேலும், MBL - LLM மற்றும் MBA - LLM போன்ற ஒருங்கிணைந்த படிப்புகளும் உள்ளன.

தகுதிகள்
LL.B படிப்பில் சேர, ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பை 40% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்(SC/ST மாணவர்களுக்கு 35% போதுமானது). மேலும், நுழைவுத் தேர்வையும் வெற்றிகரமாக நிறைவுசெய்ய வேண்டும்.

அதேசமயம், ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர வேண்டுமெனில், பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும். சட்டத் துறையில் முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், நீங்கள் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சேர்க்கை
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரிகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலமே, பெரும்பாலான பல்கலைகளில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான தன்னாட்சி சட்டக் கல்வி நிறுவனங்கள், LL.B மற்றும் LL.M ஆகிய படிப்புகளுக்கு, CLAT(Common Law Admission Test) தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன.

அதேசமயம், டெல்லி தேசிய சட்டப் பல்கலை, ஒரிசா சட்டப் பல்கலை மற்றும் பிற தன்னாட்சி சட்டக் கல்வி நிறுவனங்கள், தாங்களே நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் மூலமாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன

எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரனம்


  எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்? 
ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புகள் எதற்காக உள்ளன அதை ஏன் பாதுகாப்பற்ற வேண்டும் என்ற காரணங்களை சிலர் காதுகொடுத்து கேட்பதற்கு கூட நேரம் இருக்காது.
அவர்களை போன்ற அனைவருக்கும் இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன். உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில் கடவுள் நமக்கு அதனை உருவாக்கியுள்ளார். இந்த அனைத்து எலும்புகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தனது பங்கை செவ்வனே செய்துவருகிறது.
நாம் இந்த மொத்த எலும்புகளையும் பாதுகாப்பற்ற நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மிக முக்கிய ஒன்றாகும். இந்த மொத்த எலும்புகளும் உடம்பில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தங்களை வடிமைத்து கொண்டு மனிதனுக்கு உடல் கட்டமைப்பை கொடுக்கிறது. எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் உள்ள மிக உறுதியான பகுதிகளாகும். மற்ற உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் மிக முக்கிய பணிய செய்து வருகின்றன. அதாவது எடுத்துக்காட்டாக மூளை, இருதயம், சிறுநீரகம், சுவாசப்பை போன்ற பகுதிகள் எலும்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட கூடுகளில் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.
அதனால் தான் மனிதன் எலும்புகள் மட்டும் சேர்ந்தவற்றை மனித எலும்பு கூடு என்கிறோம். அதாவது மூளை மண்டை கூட்டிற்குள்ளும், இருதயம், சுவாசப்பை நெஞ்சு கூட்டிற்குள்ளும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது போன்ற பாதுகாப்புகளை நமக்கு அளிக்கின்ற எலும்புகள் விபத்துக்களின் போது சில நேரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடைவதை மருத்துவர்கள் பிராக்ட்ச்சர்(Fracture) என்கிறார்கள். இதனை பெரும்பாலும் குணப்படுத்த நவீன மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை எளிதில் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.
இதனை போன்று இன்னும் பல்வேறு நோய்கள் மனித எலும்புகளை பாதிக்கின்றன. அதில் சமீப காலமாக அனைவரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்பு தேய்மானம். அதாவது இதனை ஆங்கலத்தில் மருத்துவர்கள் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பது மிக பொருந்தும். அதாவது மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடைய தொடங்கிவிடுகின்றன. அதாவது இதனை நாம் நம் கண்களால் காண முடியாது. மிக மெதுவாக தேய தொடங்கும் எலும்புகள் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தும் நோயின் தீவிரம் ஆளைக் கொல்லும் வலிமை உடையது.
அதாவது முதுமையில் பொதுவாக நாட்ப்பதை (40) வயதை தொடும் பொழுது மனித எலும்புகள் தனது வலுவை இழக்க தொடங்கிவிடுகின்றன. இதனை தான் மருத்துவர்கள் எலும்பு தேய்மானம் என்று பொதுவாக விளக்கம் அளிக்கிறார்கள் . இது பொதுவாக பெரும்பாலும் பெண்களை அதிகமாக அவதிகுள்ளாக்கிவிடுகிறது. பெண்களில் 40 வயதில் முதல் இந்த நோயின் தாக்கம் ஏற்பட தொடங்கி அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திகிறது.
எலும்புகளுக்கு தேவையான முக்கியமான ஒன்று கால்சியம் என்ற தாது உப்பு. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துகொள்ளும் தன்மை கொண்டுள்ளது. இந்த குணம் பொதுவாக நாம் முதுமையை நெருங்கும் பொழுது மெதுவாக மாறியும் மறைந்து போய்விடுவதால் எலும்பு தேய்மானம் வருகிறது. அதாவது முக்கியமாக பெண்களில் உதிரபோக்கு நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்ப்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.
  ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் 
1. எலும்பு முறிவு
2. மூட்டு வலி
3. மூட்டு வாதம்
4. கழுத்து எலும்பு தேய்மானம்
5. முதுகு எலும்பு தேய்மானம்
6. முதுகு வலி
7. உடல் சோர்வு
8. அசதி
9. முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10. நடையில் தளர்வு
இது போன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தனது 40 வயது முதல் மிகுந்த சிரமதிர்க்குள்ளகிறார்கள். எல்லாம் நோய்களையும் நம்மால் குணப்படுத்துவதை விட எளிதாக தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.
  தடுப்பது ஒன்றே சரியான தீர்வு, அதை எப்படி செய்வது? 
1. எலும்புகள் தன்மையை அதன் உறுதியை பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.
2. வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள் இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிக படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடை பயற்சி செய்வது மிக முக்கியம்.
3. நடை பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றை தவிர்க்கலாம்.
4. மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க செய்யுங்கள்.
5. குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.
6. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
7. பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.
8. சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.
9. காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
10. மீன்களை தினம்தோறும் சேர்த்து கொள்வது நல்லது.
11. புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றில்லும் தவிர்ப்பது நல்லது.
12. பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்து கொள்வதால் தூக்கம் தடைபடுவதை தவிர்க்கலாம்.
13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துகொள்வது நல்லது.
முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று, இதனை நாம் சரி செய்து கொள்ள மேலே சொன்ன அறிவுரைகளை பின்பற்றுவது மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.