Sunday, August 28, 2011

2030ல் தமிழக முஸ்லிம்கள்…! “ஆண்களுக்கு – தொழில்துறை”


உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை இன்னும் வீரியம் பெற இருக்கிறது. இத்தகைய உலகளாவிய நிகழ்வுகளுக்கேற்ப இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பலவிதமான குளறுபடிகள் இருந்தாலும், நாட்டில் தொழில் மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகள் பலதுறைகளிலும் பெருகி வருகின்றன என்பது உண்மை.
பெருகி வரும் தொழில், வணிக வாய்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய பொருளாதார நிலை, வரலாற்றில் அவர்களின் வியாபார வடிவங்கள், இனி உலகளாவிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆழமாக, நுணுக்கமாக வரலாற்றின் அடிப்படையில் அலச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இது நமது எதிர்கால தலைமுறையின் வாழ்வை வளப்படுத்திட உதவி செய்யும்.
அதே போல மற்றொரு வலிமையான மூலாதாரத் துறையான கல்வித்துறையை ஆளுமை செய்திடும் திறன் பெற்ற கல்வியாளர்களாக நமது பெண்களை உருவாக்கிட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
இன்று நம் நாட்டின் கல்வித்துறை உலகளாவிய அளவில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிகப்படியான அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் நம்நாட்டில் கால்பதித்து வருகின்றன.
இந்தச் சூழலில் நமது பெண் சமூகத்தை கல்வித்துறையில் கோலோச்சும் அளவிற்கு கைதேர்ந்த கல்வியாளர்களாக மாற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி முதல் உயர் தொழில் நுட்ப நிறுவனம் வரை கல்வியாளர்களாவும் கல்வி நிறுவனங்களை வழி நடத்தக்கூடியவர்களாகவும் அவர்களை உருவாக்க வேண்டும். நமது பெண்களை அவ்வகையில் உருவாக்குவது குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். இந்த இதழில் ஆண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான விவரங்களை வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அலசுவோம்!
தொழில்துறை :
உலகில் ஏற்படும் எந்த முன்னேற்றத்திலும் முஸ்லிம் சமுதாயம் ஒருநாளும் பின்தங்கிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இஸ்லாம் வலியுறுத்தும் தலையாய கருத்து இதனடிப்படையில் உலக மாற்றங்களை உள்வாங்கி எல்லா துறைகளிலும் மிகைத்து நிற்கும் வண்ணம் துறை வாரியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் அறிவு ஜீவிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது.
வரலாற்றில் முஸ்லிம்களின் வணிகம்
தமிழக முஸ்லிம்கள் பலரின் குடும்பப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் வைத்தே வரலாற்றில் அவர்களது குடும்பம் எந்த தொழிலைச் சார்ந்து இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி விடலாம்.
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நில உடமை விவசாயிகளாகவும் ஒருசிலர் நெசவு சார்ந்த உற்பத்தி மற்றும் தொழிலாளர்களாகவும் இன்னும் சிலர் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் விற்பனை மற்றும் போக்குவரத்து (ஜிக்ஷீணீஸீsஜீஷீக்ஷீt) தொழில் செய்பவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
இதில் மிகப் பெரும்பான்மையாக தமிழக கடலோரம் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சர்வதேச தொழில் செய்பவர்களாக வாழ்ந்துள்ளனர்.
நாட்டின் உட்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்து உலகின் பல பகுதிகளுக்கும் பாய்மரப் படகுகள் மூலம் பரம்பரை பரம்பரையாக ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளனர். இவை அல்லாமல் விவசாயம், தோல் பதனிடும் தொழில் என்று உழைத்து உண்ணும் உன்னதமான சமூகமாக வரலாறு முழுவதும் வாழ்ந்துள்ளனர்.
பழவேற்காடு, மைலாப்பூர், புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார், காரைக்கால், நாகை, அதிராம் பட்டிணம், மல்லிப் பட்டிணம், தொண்டி, வேதாளை, கீழக்கரை, உத்திர கோச மங்கை, பெரியபட்டிணம், காயல்பட்டிணம், குளச்சல், இவை அனைத்தும் சிறிய, பெரிய துறைமுகங்களாக உலகின் பல மார்க்கத்திற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகப் பட்டிணங்களாக உலகின் பலநாட்டு வணிகர்களும் வந்துபோகும் சர்வதேச நகரங்களாகவும் இருந்துள்ளன.
உலகைச் சுற்றிய கடற்பயணி இப்னு பதூதா அவர்கள் இதுகுறித்து தனது பயணக் குறிப்பில் விவரித்துள்ளார்.
18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகள் முழுவதிற்கும் தங்களது வணிகப் படகுகளை அனுப்பும் சர்வதேச வணிகர்களாக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது. அதனால்தான் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் கடலோரப் பகுதிகளிலேயே வாழ்ந்துள்ளனர். மீதமுள்ள மக்கள் கடலோரப் பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்புவதற்கு தமிழகத்தின் உட்புறத்தில் வாழ்ந்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதையும் கொள்ளையடிக்கக் கிளம்பிய ஐரோப்பியர்களால்தான் முஸ்லிம்களின் கடல் வாணிபம் சிதைவுற்றது. ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சியை வீழ்த்திய இரத்தக் கையோடு இந்தியாவை நோக்கி வெறிபிடித்து வந்த போர்ச்சுகீசியர்களின் அட்டூழியமும் அவர்களுக்குப் பின்னால் வந்த டச்சு, பிரான்சு மற்றும் பிரிட்டிஷாரின் வஞ்சம் நிறைந்த வக்கிர புத்தியும் சேர்ந்து முஸ்லிம்களின் வணிகத்தைப் பாழாக்கி வாழ்வதாரங்களைப் படுகுழியில் தள்ளியது.
சிலுவை யுத்தக்காரர்களின் வாரிசுகளான இந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை அழிப்பதையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள். இன்றுவரை அது தொடர்கிறது என்பதே அதற்கு சான்று.
இந்த வரலாற்றுப் பின்னணியை தமிழக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட  இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுக்கும் தமிழக கடலோரப் பட்டிணங்களுக்கும் இடையே செழித்து வளர்ந்திருந்த தொழில், வியாபார, கலாச்சார, திருமண உறவுகளினால் மேம்பட்டிருந்த தமிழக முஸ்லிம்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் 19 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த இந்த  ஐரோப்பிய படுபாவிகள் அழித்து நாசம் செய்தனர்.
இந்த நயவஞ்சக நாசகார கூட்டத்தின் சதித் திட்டங்களில் சிக்கி முஸ்லிம்களின் வியாபாரங்கள் நசிந்து போயின. இதனால் வணிகத்தை இழந்து பொருளாதாரத்தை இழந்து நின்ற முஸ்லிம் சமுதாயம் வேறுவழியின்றி 1900க்குப் பிறகு தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் கூலி வேலை செய்திடவும் அயல் நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடினர்.
1950க்குப் பிறகு அரபு மண்ணில் பீறிட்டுக் கிளம்பிய எண்ணெய் செல்வமும் அதனால் உருவான வேலை வாய்ப்புகளும் தமிழக முஸ்லிம்களை “வா, வா” என்று அழைத்தது.
1965லிருந்து அரபு நாடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் அடிமைகளாக ஓடத் துவங்கிய ஓட்டம் தற்போது உச்சநிலையை அடைந்து, வேறு வழியே கிடையாது, அரபு நாடுகள் சென்றால் தான் வாழ்வு என்ற சிந்தனையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது பெரும்பான்மையான முஸ்லிம் சமுதாயம்.
19 ஆம் நூற்றாண்டு வரை வரலாறு முழுவதும் வணிகர்களாக வாழ்வாங்கு வாழ்ந்தனர். அந்த வணிகத்தில் நேர்மையும் நீதியும் செலுத்தினர். இதனால் அவரவர் திறனுக்கேற்ப இறைவனுடைய அருளால் பலர் தொழில் அதிபர்களாக, மிகப் பெரும் செல்வந்தர்களாக மாறினர். மார்க்கப் பிடிப்பும் ஈகை குணமும் அவர்களை வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக மாற்றியது. மார்க்கத்திற்காக, மக்களுக்காக, அறப்பணிகள் தடையின்றி தொடர்ந்திட அள்ளி அள்ளிக் கொடுத்தனர். பரம்பரை சொத்துக்களை எல்லாம் வஃக்பு செய்து இறைவனின் அருளைப் பெற்றனர்.
வணிகர்கள் என்ற அடையாளம் மாறி மாத ஊதியத்திற்கு அரபு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியவுடன் வருமானம் சுருங்கியது. இப்போது அடிப்படைத் தேவைக்கே அதிக நேரம் உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. இந்த மாத ஊதிய மனப்பான்மை முஸ்லிம்களின் வருமானத்தையும் ஈகை குணத்தையும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விட்டது.
இன்றைக்கு இந்தியாவில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில சமுதாயத்தினரிடம் காணப்படும் செல்வச் செழிப்பு வியாபாரத்தை விட்டு மாத ஊதியத்திற்கு மாறிய முஸ்லிம்களிடம் இல்லை.
இதனால் சமுதாயத்தில் தடையின்றி நடைபெற வேண்டிய சமூக நலப் பணிகள், வழிபாட்டுத் தளங்களின் விரிவாக்கங்கள் மற்றும் கல்விப் பணிகள் அனைத்தும் தேக்க நிலையிலேயே உள்ளன. இதனை இன்றைய இளைஞர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு தொலைநோக்கு செயல் திட்டத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமுதாயத்தை திருப்ப வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தொழில், வணிக ரீதியாக நாம் இழந்த இடத்தை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டும். நாம் நமது பாரம்பரியமான பொருளீட்டும் வழிமுறையை எந்தக் காரணத்திற்காகவும் விடக் கூடாது. மாத ஊதியத்திற்கு வேலைசெய்வது நமது பாரம்பரியத்தில் நடைபெறாத ஒன்று. நமக்கு உகந்த பாதையும் அல்ல. இதில் மாற்றம் ஏற்படுவதற்கு மீண்டும் தொழில் துறையை கைப்பற்றுவதற்கு அடிப்படையாக முதலில் நமது குழந்தைகளின் உயர்கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வியில் மாற்றம் தேவை :
கடந்த 20 ஆண்டுகளாக நமது இளைய தலைமுறையின் உயர்கல்வியில் நமது பாரம்பர்யமான பொருளீட்டும் முறையான தொழில், வியாபாரம் குறித்த படிப்புகளுக்கு முதன்மை தந்து அவற்றில் இன்றைய நவீன வியாபார யுக்திகளை கற்றுத் தேறியவர்களாக உருவாக்காமல் பொறியியல் படித்து விட்டு ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் தொடர்ச்சியாக இன்றும் பாரம்பரியமாக தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் கூட இப்படித் தான் அடிமைகளாக உருவாக்கப்படுகின்றனர். நமது முந்தைய தலைமுறையினர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். ஏராளமான சமூகப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போதைய தலைமுறையினர் அந்த பாரம்பரிய பாதையை விட்டு அகன்று குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதற்கு பெற்றோரின் அலட்சியமும் நமது பாரம்பரிய வரலாறு குறித்த புரிதல் இன்மையுமே காரணம். தாங்கள் முதலாளிகள் என்ற அந்தஸ்தோடு வீற்றிருப்பது போல தங்களது குழந்தைகளையும் முதலாளிகளாக உருவாக்கிட இன்றைய முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.
சில்லரை வணிகமாக இருந்தாலும் மொத்த வணிகமாக இருந்தாலும் அவைகளை திறனோடு நிர்வகித்து தேர்ச்சி பெறும் ஆற்றல் முஸ்லிம் சமுதாயத்தின் இயல்பிலேயே ஊறிய குணங்கள். நாம் நம்முடைய வேர்களை விட்டு விடக் கூடாது. வியாபாரம் என்பது இறைவனுடைய அருள் நிறைந்த துறை. நேர்மையான வியாபாரம் என்பது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடு. அதில் இறைவன் தன்னுடைய பரக்கத்தை எல்லையின்றி வாரி வழங்குகின்றான்.
இன்று உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. பொருள் வாங்கிப் பொருள் விற்பதற்கான சந்தைக்களம் உலகளவில் பறந்து விரிந்த சந்தைக் களமாக மாறி விட்டது. எந்நாட்டவரும் உலகில் எந்த நாட்டிற்கும் பொருட்களை விற்கலாம் வாங்கலாம் தடையேதும் கிடையாது. அரசின் சட்ட திட்டங்களும் துறைசார்ந்த வழிகாட்டும் நெறிமுறைகளும் சர்வதேச வர்த்தகம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து வருகின்றன.
வியாபாரத்தில் முஸ்லிம்களின் இன்றைய நிலை :
இன்றைய முஸ்லிம்கள் அதிகம் ஈடுபட்டுள்ள தொழில்களான மளிகை, ஜவுளி, ரெடிமேட், தோல், ஃபேன்ஸி ஸ்டோர், காலனி கடைகள் போன்ற சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை நிதிப் பற்றாக்குறைதான். இதனால் சரக்கு கொள்முதல் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் இலாபம் குறைவதோடு பலவிதமான சங்கடங்களும் ஏற்படுகிறன்றன. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாத நிலை உருவாகிறது. இந்த முதலீடு பற்றாக்குறை நெருக்கடியால் பெட்டிக்கடை மனப்பான்மை நம் மனதில் குத்தகை எடுத்து குடியிருக்கிறது.
வியாபாரத்தில் நிதிப் பற்றாக்குறையைப் போக்க வேறு வழியில்லாமல் சிலர் வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். வங்கிகளில் தங்களது பரம்பரை வீடு, சொத்துக்கள், நகைகள் முதலானவற்றை அடகு வைத்துவிட்டு தற்காலிக கடன் என்ற ளிஞி வாங்குகின்றனர்.
ஒரு வளரும் அல்லது வளர்ந்த தொழிலை அழிப்பதற்கு வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை. வங்கிகளில் (வட்டிக் கடைகளில்) OD வாங்கினாலே போதும். வெகு விரைவில் தொழில் அழிந்துவிடும். ளிஞி என்ற தற்காலிக கடனுக்கு 18 விழுக்காடு வட்டி போட்டு தீட்டுகின்றனர். இரவு பகல் பாராமல் இரத்தம் சிந்தி உழைத்து உண்டாக்கிய இலாபம் எல்லாவற்றையும் வங்கிகள் வாயில் போட்டுக் கொண்டால் தொழில் எப்படி செழிக்கும்? வங்கியில் ஓ.டி. வாங்கிய பிறகு அதை அடைத்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
வட்டி புழக்கத்தில் உள்ள இடத்தில் வறுமையும், வெறுமையும் நிறைந்திருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதை நினைவு கூற வேண்டும்.
இதற்கு இஸ்லாமிய அடிப்படையில் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
வரலாற்றில் ஐரோப்பியர்களிடம் முஸ்லிம்களின் வியாபார யுக்திகள் தோற்றுப் போனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அந்த நேரத்தில் வந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களின் இந்த குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் வியாபார முறைகளையும் ஒற்றுமை இல்லாத் தன்மையையும் பார்த்துவிட்டு குறிப்பாக பிரிட்டிஷார் லண்டனில் வைத்து ஒரு மிகப்பெரிய முதலீட்டு வணிக நிறுவனத்தை உருவாக்கினர். அதுதான் ணிகிஷிஜி மிழிஞிமிகி சிளிவிறிகிழிசீ உலகின் முதல் கார்ப்பரேட் நிறுவனம்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிபம் தொடர்பாக அவர்களின் வழிமுறைகள் மற்றும் அன்றைய முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருந்தது என்றால் ஒருவரிடம் 1 இலட்ச ரூபாய் முதலீடு இருந்தது என்றால் அந்த 1 இலட்ச ரூபாயை வைத்து வியாபாரம் செய்து சம்பாதித்து வந்தார். தன்னிடம் உள்ள முதலீடு, தான் செய்யும் வியாபாரம், அதன்மூலம் பெறுகின்ற இலாபம் வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த குறுகிய சுயநல மனநிலைதான் பெருவாரியான முஸ்லிம் வணிகர்களிடம் இருந்தது. வியாபார ரீதியான வாய்ப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே இல்லாமல் போனது.

(இன்றும் இதுதான் மிகப்பெரிய குறையாக உள்ளது).சிறுமுதலீட்டாளர்கள் ஒன்று கூடி சிறிய சிறிய தொகைகளை ஒரே தொகையாக மாற்றி பெரும் தொகையுடன் கூடிய முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கினர். அந்த பெரும் தொகையை இந்தியாவிற்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு யாரெல்லாம் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கினார்களோ அவர்களிடம் அந்த பெரும் தொகையை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்தனர். இதனால் முஸ்லிம்களுக்கு சரக்கு கிடைக்காமல் போய்விட்டது. பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான பணத்திற்கு முன்னால் முஸ்லிம்களின் தனிநபர் சிறிய தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகிப் போனது.

அந்த நேரத்தில் கூட பிரிட்டிஷாரைப் போல தாங்களும் ஒத்த கருத்துடைய வணிகர்கள் ஒன்று கூடி தனித்தனி முதலீடுகளை ஒரே முதலீடாக மாற்றி பெரிய அளவிற்கு கொள்முதல் செய்ய வேண்டும். மாறி வருகின்ற வணிகமுறைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வரவில்லை. உலக வியாபார முறைகளின் மாற்றம் குறித்து விளங்கிக் கொள்ளாத தமிழக, இலங்கை முஸ்லிம்கள் குறுகிய காலத்திலேயே வியாபாரம் செய்வதற்கு சரக்கு கிடைக்காமல் சிக்கிக் கொண்டனர்.

17 ஆம் நூற்றாண்டில் EAST INDIA COMPANY இன் உருவாக்கத்தில் துவங்கிய கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் இன்று உலகத்தை ஆட்டிப் படைக்கிறது.

இன்றைய முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு அதிகப்படியான நிதியைத் திரட்ட வேண்டும். தற்போதுள்ள வியாபார நிறுவனங்களில் நிதிப் பற்றாக்குறையைக் களைய வேண்டும் என்றால் வட்டிக் கடைகளான வங்கிகளை நாடுவதை நிறுத்தி விட்டு கூட்டு முதலீடு என்கிற இஸ்லாம் வலியுறுத்தும் ஹலாலான வழிமுறைக்கு மாற வேண்டும்.

ஒரே அளவுள்ள ஓராயிரம் முதலீடுகளை ஒருங்கிணைத்து தொழில் தொடங்க வேண்டும். அதாவது இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் போல உருவாக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்குகள் விற்பதிலும் வங்கிகளிடம் கடன் பெற்றும் முதலீடுகளை திரட்டுகின்றன. இதற்காக இந்திய அரசின் கார்ப்பரேட் சட்டமும் கம்பெனி சட்டமும் அவர்களை நெறிப்படுத்துகிறது. இதில் பல மறைமுகமான திட்டங்கள் உள்ளன. முஸ்லிம்கள் இதே வழிமுறையை கையாளுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. பிறகு என்ன செய்வது?

வர்த்தகக் கூட்டமைப்பு :

இன்றைய உலகிலும் இனிவரும் காலத்திலும் வியாபாரம், தொழில் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டு முதலீடு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தால் தான் முடியும். அடிப்படையில் தனித்தனி சிறுமுதலீடு என்ற மனப்பான்மையை விட்டு முஸ்லிம் சமூகம் வெளியே வரவேண்டும். சேர்ந்து முதலீடு செய்வது சேர்ந்து சம்பாதிப்பது இலாபத்தையும் நஷ்டத்தையும் சேர்ந்து பகிர்ந்து கொள்வது என்ற கொள்கை தான் இனி வெற்றி பெறும்.

இதற்கு மாநில அளவில் ஒரு தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி நிறுவனம் CHAMBER OF COMMERCE உண்டாக்கப்பட வேண்டும். அந்நிறுவனத்தின் மூலம் திறனான வல்லுனர்களை பணியமர்த்தி தொழில் மற்றும் முதலீட்டிற்கு வாய்ப்புள்ள துறைகள் எதுவென்று ஆராய வேண்டும். முதலீடு செய்வதற்கான திட்ட அறிக்கை, முதலீட்டாளர்கள், வரி விதிப்புகள், சந்தை வாய்ப்புகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு இந்த கூட்டமைப்பு நிறுவனம் வழிகாட்ட வேண்டும்.

மேலும் அப்படிப்பட்ட நிறுவனம் செயல்படுவதற்கு ISLAMIC COMPANY LAW இஸ்லாமிய நிறுவனச் சட்டம் குறித்து தெளிவுடைய அறிஞர்களின் வழிகாட்டுதல் தேவை.

சமுதாயப் பற்றுடைய பெரும் செல்வந்தர்கள் இப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்கிட முன்வந்தால் மாநில அளவில் அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது! இல்லையென்றால் ஒவ்வொரு பகுதிகளிலும் கூட இந்த தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி மையத்தை உருவாக்கலாம்.

வாய்ப்புகளைக் கண்டறிதல்:

தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனுதினமும் உலக வர்த்தகம், அதன் போக்கு, இந்திய வர்த்தக வளர்ச்சி, விவசாயம், உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி, பிற நாடுகளின் தேவைகள், அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், பட்ஜெட் விவரங்கள், வரி விதிப்புகள் போன்ற அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கண்காணிக்க வேண்டும்.

அடுத்த 20 ஆண்டுகளில் வியாபார ரீதியாக வாய்ப்புகள் எந்தெந்த துறைகளில் பெருக உள்ளதோ அவற்றில் நாமும் பங்கு பெறுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அத்திட்டத்தில் முதன்மையானது அந்த துறைகளில் அறிவும் நுணுக்கமும் பெறுவதற்கான உயர்கல்வியை நமது குழந்தைகளுக்கு தொடர்ந்து புகட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இடைவெளி இல்லாத, தொடர்ச்சியாக நுண்ணறிவு பெற்ற வல்லுனர்களை, துறை வாரியாக ஒவ்வொரு காலத்திற்கும் உருவாக்கிடும் கல்வி அமைப்பு எந்தச் சமூகத்திடமோ நாட்டிடமோ இருக்கிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகிற்கு வழிகாட்டிடும் முதன்மை இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்றைக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளிடம் உள்ளது போன்ற அறிவு ஜீவிகள் பட்டாளம் துறை வாரியாக தொய்வில்லாமல் நமது தமிழக முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

இதில் தொய்வு ஏற்பட்டால், அலட்சியம் காட்டினால் உலக முன்னேற்றத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கிப் போய்விடுவோம். இன்று அதுதான் நடந்துள்ளது. இனி அவ்வாறு நடைபெறுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

2030ல் தமிழக முஸ்லிம்கள்…! “கல்வித்துறை – பெண்களுக்கு”


நமது பெண் சமுதாயத்தை இந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் ஆண் சமுதாயத்திற்கு, குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு இருக்கிறது.
மனித இனத்தைப் படைத்த இறைவன் ஆண்/பெண் இருபாலரையும் சமநீதியுடன் சரிசமமாகத் தான் படைத்துள்ளான். ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்திப் படைப்பவன் அல்ல இறைவன். “அல்லாஹ் நீதி செலுத்துபவன்” என்பதை அல்குர் ஆனில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறான். ஆனால் இந்த பூமியில் மனித இனம் படைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஆண் / பெண் இருபாலருக்கும் வேறுபட்ட செயல்திட்டங்களை நிறைவேற்றச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். முதலில் ஆணைப் படைத்து பிறகு ஆணிலிருந்து பெண்ணைப் படைத்து இந்த இருவருக்குமான செயல்திட்டத்தைக் கொடுத்து அந்தச் செயல் திட்டத்திற்கு ஏற்ப அவர்களின் உடற் கூறுகளையும் உள்ளங்களையும் படைத்துள்ளான்.
இருபாலருக்குமான செயல்திட்டங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றாக  இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு காலத்திற்கும் வேறுவேறு வடிவங்களாக இருந்து வருகிறது. அறிவும் தொழில் நுட்பமும் மிகைத்திருக்கும் இன்றைய காலத்தில் பெண்களின் உடற்கூறு தன்மைக்கு ஏற்ப அறிவுத் துறையான கல்வித் துறையில் அல்லாஹ்வுடைய செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது.
எந்த ஒரு சமுதாயத்தில் பெண்கள் அறிவும் பண்பாடும் நிறைந்தவர்களாக விளங்குகிறார்களோ அந்தச் சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் என்பது உறுதி. காரணம் எல்லா தன்மைகளையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெண்களிடமே இடம் பெற்றுள்ளது. அதனால் தான் மனித குலத்தைப் படைத்த இறைவன் பெண் இனத்தை “விளை நிலங்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றான்.
ஆண் பெறுகின்ற கல்வி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தன்மைகளுக்கு பல்கிப் பெருக்குகின்ற ஆற்றல் கிடையாது. அது அவனோடு மட்டுமே நிறுத்தப்படுகிறது. ஆனால் பெண் பெறுகின்ற கல்வியின் மூலம் எல்லாவிதமான கலாச்சாரத் தன்மைகளையும் பலவாறாகப் பெருக்குகின்ற ஆற்றலை இறைவன் பெண்களுக்கு வழங்கி இருக்கின்றான்.
குழந்தைகளிடம் தகப்பனுடைய சிந்தனையின் தாக்கத்தைக் காட்டிலும் தாயுடைய சிந்தனையின் தாக்கமே அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு சாட்சி. ஆக ஒரு சமூகத்தைச் சிறந்த சமூகமாகக் கட்டி எழுப்புகின்ற ஆற்றல் அனைத்தும் பெண்களிடமே இருக்கிறது.
இத்தகைய ஆற்றல் பொருத்தப்பட்டுள்ள பெண் சமுதாயத்தை அல்லாஹ்வும் அவனது து£தர் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த இஸ்லாமிய வழிமுறையில் இன்றைய நவீன காலத்திற்கேற்ப வளர்த்தெடுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி வளர்த்தெடுப்பதற்கும் அனைத்து விதமான மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது கல்வி தான். அந்தக் கல்வித் துறையைத் தங்களுக்கான வாழ்வியல் துறையாகத் தேர்வு செய்யும் ஆர்வத்தை வளருகின்ற போதே பெண் குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும். இன்று தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்விமுறை இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து பாதை மாறிச் செல்லும் மக்களை உருவாக்கும் கல்வியாகவும் கல்வி முறையாகவும் இருக்கிறது.
இதனால் அதனைக் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டுப் பாதை மாறிச் செல்கின்றனர். மனிதன் இந்த பூமியில் படைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தைக் கூட விளங்காமல் வளர்க்கப்படுகின்றனர்.
முஸ்லிம்களை இஸ்லாத்தில் பிடிப்புள்ள மக்களாக மாற்ற வேண்டும். அதற்கு முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முழுவதும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்.
12 ஆம் வகுப்பு முடிக்கும் போதே ஆண் பெண் இருபாலரும் அல்குர்ஆனையும் ஹதீஸையும்  இஸ்லாமியப் பண்பாடுகளையும் பேணுபவர்களாக உருவாக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இன்னும் 20 ஆண்டுகளில் இப்படி கல்வி பயிலும் நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதற்கு இஸ்லாத்தை விளங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியைகள் தேவை. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி ஸ்கூல் மற்றும் இருபாலருக்கும் தனித்தனியே ஆன உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் தேவை.
இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இன்று படித்து வரும் பெண்களை கல்வியாளர்களாக உயர்கல்வியில் ஆசிரியைப் பணியை இலக்காக வைத்து உருவாக்கினால் தான் சாத்தியமாகும். ஆண்கள் தொழில் துறையில் ஈட்டுகின்ற பொருளாதாரமும் அவரது மனைவி, மகள், மருமகள் ஆகியோரின் கல்விப் பணியும் ஒரு சேர கூடினால் முஸ்லிம் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
மனமாற்றம் தேவை :
மேலும் இதற்கெல்லாம் அடிப்படையாக இன்றைய ஆண்களிடம் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் தன்மையுடையது என்பதை நாம் அறிந்துள்ளோம். ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்தார் போல இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வியல் வழிமுறைகள் மூலம் பொருத்த வேண்டிய பொறுப்பை முஸ்லிம்களிடம் இறைவன் அமானிதமாகக் கொடுத்துள்ளான்.
விஞ்ஞானமும் நவீன தொழில் நுட்பமும் மிகைத்து நிற்கும் இன்றைய உலகில், அறிவால் உலகை வெல்லும் வாய்ப்புகள் நிறைந்த இன்றைய உலகில் முஸ்லிம் சமுதாயத்தின் ஆணும் பெண்ணும் அந்த அறிவாற்றலில் மிகைத்தவர்களாக – அதையே எதிர்கால தலைமுறைக்கு போதித்து உருவாக்குபவர்களாக – அதன் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகின் தலைசிறந்த மார்க்கமாக, சமூகமாக நிலை நிறுத்துபவர்களாக தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பவியலிலும் மாற்றம் தேவை :
பெண்களின் வாழ்வாதாரம், உரிமைகள் தொடர்பாக இஸ்லாம் காட்டாத கட்டுப்பாடுகள், இல்லாத சமூக வாழ்க்கை முறை, குடும்பவியல் பழக்க வழக்கங்கள் பல தலைமுறைகளாக அறியாமையின் காரணமாக முஸ்லிம்களிடம் குத்தகை எடுத்துக் குடி கொண்டிருந்தது. அதனாலேயே இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பன போன்ற குற்றச் சாட்டுகள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது ஈட்டிகளாய் குத்துகின்றன.
முஸ்லிம்களின் அறியாமை மற்றும் மார்க்கத்தை விளங்காத நடவடிக்கைகளால் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தற்போது முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது குறிப்பாக பெண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும் கூட ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தியே ஆனந்தம் அடைந்த ஆண்கள் மற்றும் அவர்களின் இன்றைய வாரிசுகள் இன்றும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை. இஸ்லாத்தின் சட்ட திட்டங்களையும் நபிகள் நாயகத்தின் (ஸல்) வழிகாட்டு தலையும் பெண்களின் உரிமைகள் என்று வருகிற போது மட்டும் வசதியாக ஒதுக்கி வைக்கின்றனர்.
தனது மனைவி படித்தவள். அவளுக்கு சுயஅறிவு, சுயசிந்தனை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஒருசில ஆண்களுக்குத் தான் இருக்கிறது. ஒருசில கருத்துக்கள் சொன்னால் அல்லது கணவனின் தவறுகளை சுட்டிக் காட்டினால் “இவள் படித்த திமிரில் பேசுகிறாள்” என்ற வார்த்தை தான் கணவனிடமிருந்து வருகிறது. ஆணுக்கு பெண் அடிமை என்கிற சிந்தனை பிற மதக்கோட்பாட்டுச் சிந்தனையாகும். அது இஸ்லாமிய சிந்தனை அல்ல. ஆனால் முஸ்லிம்களிடம் குடி கொண்டுள்ளது. கல்வியும் அறிவும் உலகை ஆளும் துறைகளாக மாறியுள்ள இன்றைய நிலைக்கு தகுந்தாற் போல ஆண் இனமும் தங்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கான இஸ்லாமியப் பொறுப்புகளை உணர வேண்டும்.
அதேபோல இஸ்லாம் இல்லாத இன்றைய வறண்டு போன கல்விமுறை பெண்களையும் தங்களுக்கான எல்லை எது என்று தெரியாமல் ஆக்கியுள்ளது. ஆண் செய்கின்ற எதுவும் பெண்ணுக்கும் பொருந்தும் என்ற இயற்கைக்கு ஒவ்வாத இஸ்லாம் காட்டாத எண்ணம் ஏற்பட்டு வருகிறது.
பெண்கள் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்களை  பெண்கள் முழுமையாக தெரிந்து கொள்கின்ற போது தான், அவற்றைப் பின்பற்றுகின்ற போதுதான் முரண்பாடுகளும் எல்லை மீறல்களும் நடைபெறாமல் பாதுகாக்க இயலும். குடும்ப வாழ்வும் வெற்றி பெறும்.
இன்றைய பி.ஏ. அல்லது பி.ஈ. பட்டதாரிப் பெண்ணிடம் தனக்கான கணவர் தன்னை விட கூடுதலாகப் படித்திருக்க வேண்டும் என்கிற சிந்தனை பெருகி இருக்கிறது. டாக்டருக்குப் படித்த பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற மனநிலையில் மாப்பிள்ளை தேடும் படலம் நடக்கிறது.
இது இன்றைய நவீன பெண்ணடிமைத் தனம் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இன்றைய கல்வி முறையின் மிக மோசமான விளைவுகள் தான் இவை. ஒரு மார்க்கம் படித்த பெண் ஆலிமா தனக்கான கணவனை தேடும்போது அவன் முதலில் ஆண் மகனாக, நல்லவனாக, வணக்க வழிபாடுகள் செய்பவனாக, உழைப்பவனாக, கல்வி அறிவு பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறாள்.
வெறுமனே பட்டங்கள் பெறுவதால் மட்டும் வாழ்வில் உண்மையான விழுமங்கள் விளங்கி விடும் என்பதும் அர்த்தமல்ல. இஸ்லாமிய அடிப்படையில் சீர்து£க்கிப் பார்த்து அவற்றின் குறைகளை இன்றைய எதார்த்த வாழ்வின் இந்தத் தடைகளைக் களைந்து இனி எதிர்காலத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வண்ணம் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையை முழுமையாக ஆளுமை செய்திட தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று படித்துக் கொண்டிருக்கும் பெண்களை உயர்கல்வியில் கம்ப்யூட்டர் படிப்பைத் தவிர்த்துவிட்டு வேறு எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதை ஆய்வு நிலை வரை றிலீபீ படிக்க வைக்க வேண்டும். கூடவே இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்து சட்டதிட்டங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை.
இஸ்லாம் இல்லாத பெண்ணால் வாழ்விலும் கல்வியிலும் வெற்றி பெறவே இயலாது. அத்தகைய பெண்களால் இம்மையிலும் சரி மறுமையிலும் சரி வெற்றி பெறவே இயலாது. உயர்கல்வியில் இஸ்லாமியப் படிப்புகளை தேர்வு செய்தால் அது  இன்னும் நமது இலக்கை வேகமாக அடைய பேருதவி புரியும்.
கல்வியாளர்களாக உருவாக வேண்டும் என்ற வேட்கையோடு ஆசிரியர் பணியை தேர்வு செய்யும் பெண்களையும் பள்ளிக் கூடங்களை உருவாக்கி அவற்றை நிர்வாகம் செய்திடும் துறையை நோக்கி முன்னேறும் பெண்களையும் கண்டறிந்து  சமுதாயத்தில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் தங்களது பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படையிலான பள்ளிகளைத் துவங்கிட முன்வர வேண்டும்.
அதற்கு அந்தப் பெண்களுக்கு பொறுப்பு ஏற்றுள்ள ஆண்கள் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். பெண் வீட்டிற்குள்ளே பூட்டப்பட வேண்டியவள் என்றசிந்தனை சிறிது இருந்தாலும் அது சமுதாய முன்னேற்றதிற்கு தடையாகவே அமையும்.

Wednesday, August 24, 2011

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு


இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.
பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,
  1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம்
  2. நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்
  3. நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்
  4. நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்
  5. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்
  6. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
  7. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?
அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.
1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்”(அல்குர்ஆன் 64:4)
இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)
ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)
2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-
இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?
ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.
3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-
நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!
4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.
அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல் குர்ஆன் 16:20-21)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தினருக்குமிடையில் ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல் குர்ஆன் 39:42)
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)
இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது – (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (அல் குர்ஆன் 27:80)
“குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா). அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.” (அல்குர்ஆன் 35:19-22)
இந்த வசனத்தில், ‘உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று கூறிய இறைவன், உயிருள்ளவாகளில் தாம் நாடியவாகளைச் செவியுறச்செய்து நேர்வழிப்படுத்துவதாகக் கூறுகின்றான். மேலும் ‘கப்ருகளில் உள்ள இறந்தவர்ளளைச் செவியுற செய்பராக நீ இல்லை’ என்று இறைவன் கூறுவதன் மூலம் இறந்தவர்களால் செவியேற்க முடியாது என்று திட்டவட்டமாக அல்லாஹ் கூறிவிட்டான். மேலும் அவன் கூறுகையில்,
“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35:14)
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)
“நல்லடியார்களைப் பாதுகாவலாகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்-
“நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 18:102)
நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-
“அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.)” (அல்குர்ஆன் 39:43)
நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள், அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவாக்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள்.. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்)
என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும் போது, நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் போல் ஆகமாட்டாரா?
நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-
“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)
இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.
இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,
  • இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21)
  • இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
  • இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
  • இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
  • இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
  • இறந்த நல்லடியார்கள் புது மணமகணைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் (ஹதீஸ்)
  • அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
  • அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
  • இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
  • அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
  • அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
  • அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
  • அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18) 
எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.
ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!!!
இன்னும் சிலர் இந்த வசனங்கள் எல்லாம் சாதாரண மனிதாகளைக் குறிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த ஷுஹதாக்கள் உயிரோடு இருப்பதாக குர்ஆன் கூறுகிறதே! ஆப்படியானால் குர்ஆன் கூறும் அந்த வசனத்தின் பொருள் என்ன என்று கேட்கின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்.
“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)
‘அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.” (அல்குர்ஆன் 3:169)
இந்த வசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றாகள்.
மஸ்ருக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம்: அதற்கு அவர்கள் கூறினாகள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம்: அப்போது அண்ணலார் பின் வருமாறு விளக்கினார்கள்:
‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும். அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூடுகளுக்குள் இருக்கும். சுவர்க்த்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூட்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் மூன்று முறை அவர்களிடம் கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றை இறைவனிடம் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்துக் கொள்ளும் அவர்கள், இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும்: மீண்டும் ஒரு முறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதை காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான்’ முஸ்லிம் ஹதீஸ் எண் 4651
இதுதான அந்த ஆயத்தின் விளக்கம். ஆனால் நம்மில் சிலர், ஷஹீதுகள் கப்ரின் உள்ளே உயிரோடு இருக்கிறார்கள்: அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் அவர்கள் அதை செவியுற்று, அத்தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று தவறாக எண்ணி, கூட்டம் கூட்டமாக கப்ருகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மேற்கண்ட ஹதீஸை படித்து சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.
5) அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்:-
மார்க்கத்தில் ஓரளவுக்கு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதுதான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்த குறிப்பிட்ட ஒருவருடைய பொருட்டால் தம் தேவைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டும் ஒருவர் பின்வரும் குற்றங்களைச் செய்தவா போலாகிறார்.
1) மரணித்த ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என கூறுவது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான மரணித்தவர் இறைவனின் திருப்தியை பெற்று மரணித்தாரா அல்லது இறைவனின் அதிருப்தியைப் பெற்று மரணித்தாரா என்ற இரகசியத்தை அறிந்தவர் போலாகிறார்.
ஒருவர் மரணமடையும் போது அவர் முஸ்லீமாக மரணித்தாரா அல்லது முஸ்லிமல்லாதவராக மரணித்தாரா என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்களின் உம்மத்துகளில் சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்களால் கூறுப்பட்டவர்கள் அஸ்ரத்துல் முபஸ்ஸரா என்று சொல்லப்படக் கூடிய பத்து நபித்தோழர்கள் ஆவர். இவாகளைத் தவிர மற்றெவரையும் அவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூறக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிருக்க ஒருவரைப்பார்த்து இவர் இறைவனுக்கு நெருக்கமானவர், அவர் பொருட்டால் இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவனால் மறுக்கமுடியாது என்று கூறுவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராவைகளாகும். இங்கே ஓரு சிறிய உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். உஹது போரின் போது காயம்பட்ட நபி (ஸல்) அவர்கள், தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்? என்று கூறினார்கள். அப்போது இறைவன் பின்வரும் திருமறையின் வசனத்தை இறக்கினான்.
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. (அல்குர்ஆன் 3:128)
சகோதர, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள். உலகத்தார்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட உத்தம திருநபி (ஸல்) அவர்களுக்கே அதுவும் அவர்களைக் காயப்படுத்தியவர்களைப் பார்த்து கூறியதற்கே அவ்வாறு கூறுவதற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என இறைவன் கூறியிருக்கும் போது நமக்கு ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என்றும் மேலும் அவர் இறைவனுக்கு நெருக்கமானவர் என்றும் எப்படி கூற முடியும்?
முஸ்லிம்களாக வாழ்ந்து வழிதவறிய எத்தனையோ கூட்டத்தார்களைப் பற்றி திருமறையின் வாயிலாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் படித்திருக்கிறோம். முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதிலிருந்து வழிதவறிவிடாமல் இருக்கவும், மேலும் முஸ்லிம்களாகவே மரணிப்பதற்கும் இறைவனிடம் பிராத்திக்க திருமறையின் வசனங்கள் நமக்கு வலியுறுத்துகிறது.
‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன் 3:8)
2) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது இறைவனுக்கு அவரிடம் ஏதோ தேவையிருப்பது போல கருவதாகும்.
மேலும் நல்லடியார்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் கேட்டால் அந்த நல்லடியாரிடம் இறைவனுக்குத் ஏதோ தேவையிருப்பது போலவும், அதனால் அவன் வேறுவழியில்லாமல் தரவேண்டியதிருக்கிறது என்றும் பொருளாகாதா? இது அல்லாஹ் யாரிடத்திலும் எந்த தேவையுமற்றவன் என்ற திருமறையின் வசனங்களுக்கு (அல் குர்ஆன் 35:15 மற்றும் 112:2) முரனாக உள்ளதே!
3) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது கியாமத் நாளின்அதிபதியாகிய தீப்புக் கூறும் இறைவனின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகும்
மேலும் யாருடைய பொருட்டால் கேட்கின்றோமோ அவர்கள் மரணிக்கும் தருவாயில் இறைவனின் உவப்பை, திருப்தியைப் பெற்றவர்களாக மரணித்தவர்களா அல்லது இறைவனின் வெறுப்பை பெற்றவர்களாக மரணித்தார்களா? என்பது நமக்கு திட்டவட்டமாக எப்படி தெரியும்? யார் நேர்வழி பெற்றவர்கள், யார் வழிதவறியவர்கள் என்று கியாமத் நாளில் அல்லவா நமக்குத் தெரியும்? அதை இங்கேயே நாம் தீமானிப்பது கியாம நாளின் நீதிபதியாகிய அல்லாஹ்வின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகாதா? நவூபில்லாஹி மின்ஹா. யாருடைய பொருட்டால் நாம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் திருப்தியைப் பெற்றிருக்காமல் மாறாக கோபத்தைப் பெற்றவராகயிருந்தால் அவ்வாறு துஆ கேட்ட நம்கதி என்னவாகும்? ஏனென்றால் இறந்த அந்த அடியார் இறைவனின் திருப்தியைப் பெற்று அவனுக்கு மிக நெருக்கமாகி விட்டார் என்பதை திட்டவட்டமாக யாராலும் கூற முடியாது. அவ்வாறு கூறமுடியும் என்று யாராவது கூறினால், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான, எவர்கள் நல்லடியார்கள், எவர்கள் பாவிகள் என்ற இரகசியத்தை அவர்களும் அறிந்திருப்பதாகக் கூறி இறைவனின் வல்லமையில் பங்குகேட்டு அவனுடைய இடத்தில் அமர்வதற்குச் சமமாகும். இவ்வாறு எண்ணம் கொள்வது இணை வைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றமாகாதா? அல்லாஹ் நம்மனைவரையும் இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்து காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
“நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்” (அல்குர்ஆன் 2:22)
மேலும், நமக்கு உறுதியாக திட்டவட்டமாகத் தெரியாத எந்த விஷயங்களையும் பின்பற்ற வேண்டாம் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.
“எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.” (அல் குர்ஆன் 17:36)
சரி, அப்படியானால் நீங்கள் அவ்லியாக்களே, இறை நேசர்களே இல்லையென்று கூறுகிறீர்களா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இறைவனின் நேசர்களின் இலக்கணங்களைப் பற்றி அல்லாஹ்வே தன் திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். நாம் மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் மூலம் கூறுவது என்ன வென்றால்: -
  •  இறந்தவர்களால் கேட்கவும், பரிந்து பேசவும்முடியாது.
  • அவர்களிடம் கேட்பது அல்லது அவர்களின் பொருட்டால் கேட்பது கூடாது.
  • நமது எல்லாத்தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுதல் வேண்டும்.
இறைவன் கூறுகிறான்:
‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’  (அல்குர்ஆன் 40:60)
எனவே யாருடைய பொருட்டால் நாம் இறைவனிடம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் உவப்பைப் பெற்றவரா அல்லது இல்லையா என்பது நமக்குத் திட்டவட்டமாகத் தொயாததாலும், மேலும் இவ்விசயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாவதாலும் நாம் அவ்வாறு கேட்பதிலிருந்து தவிர்ந்துக் கொண்டு, திருமறையில் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவனிடமே எல்லாத் தேவைகளையும் கேட்டு, அவனையே சாந்திருப்போமாக.
6) முன்னோகள் செய்தது மார்க்கமாகி விடாது:-
ஒரு சிலருக்குத் தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான் தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய் தந்தையரும் நல்லடியார்களிடம் பிராத்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தான் செல்வார்களா? இவாகள் என்ன புதுக்குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள்? என்று ஷைத்தான் சிலரின் இதயத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்திவிட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்துவிடுகின்றான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீது கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:
“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?” (அல் குர்ஆன் 2:170)
இந்த வசனமும் இன்னும் எராளமான வசனங்கள், பார்க்கவும் 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:53, 37:69, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104, 7:28 போன்ற யாவும் நாம் நமது முதாதையர்களையோ, தாய் தந்தையரையோ பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தாகள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம் என்று எவரேனும் கூறினால் அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்று போன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்படமாட்டீகள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும். (அல் குர்ஆன் 2:134)
7) ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகிவிடுமா?
இன்னும் சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் ஒன்றும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீகள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனா. இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர்-ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்கு பயந்த மார்க்க அறிஞர்கள் வண்மையாகக் கண்டித்து வருகின்றார்கள். இன்றளவும் கண்டித்தும் வருகின்றார்கள். இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்ரு வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞாகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால் கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போன் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், அந்த கப்ரு வணக்க முறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.
ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, அதிகாரமும், பொருளாதாரமும் மிகுந்த கப்ரு வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெறும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்ருகளில் நடைபெறும் மாக்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேத்தம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.
“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42)
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (அல் குர்ஆன் 2:159)
மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : ஆபூஹுரைரா ரலி, ஆதார நூல்: புகாரி
எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவைப் புகட்டி சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாப்பெருமக்கள் அல்லாஹ்வும், ரஸுலும் நமக்குக் காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத்தந்து மார்க்கச் சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளை பெற வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.
8. முடிவுரை: -
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறும் முழுமையான ஈமானைத் தந்து, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தி நிற்காமல் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்.

Thanks and regards

''நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!''


''நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!''

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
4. உறுதியாக இருத்தல்
பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.
அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.
மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!
7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
8. மன்னித்து விடுங்கள்
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.
10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.
அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
12. கீழ்ப்படிதல்
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!
தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!
முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.
இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.
மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

Tuesday, August 23, 2011

இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்


இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்!

sleeping positions2 Adorable sleeping positions
 முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!.......

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல்உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றிசோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போதுஇந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்)இன்னும்மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன்4:142)
எனவேசோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.
சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -
ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டுஅன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமாஅதற்குநபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால்நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறதுஉறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராகசோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)ஆதாரம் : புகாரி}
பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்
தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கிபஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!
இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்துஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள்அரை வயிறு சாப்பிட்டுகால் வயிறு தண்ணீர் குடித்துகால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!
நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கிதஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கிஅதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில்சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.
யா அல்லாஹ்! கவலைதுயரம்இயலாமைசோம்பல்கஞ்சத்தனம்கோழைத்தனம்மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)
ஆகையால்ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.
சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் தீர்வு’.
சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.