Monday, February 4, 2013

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.


ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

ஜலதோசம், தும்மல்ஜலதோசம், தும்மல்
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
ஜலதோசம், மூக்கடைப்பு மருந்து,

மூக்கடைப்பு மருந்து

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது. ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம். மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார். உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி: இயற்கை உணவு உலகம்
Engr.Sulthan

மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து!




 மலிவு விலையில் மாரடைப்புக்கு மருந்து!

உலக அளவில், மனித உயிர் குடிக்கும் அபாயகரமான நோய்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது 'மாரடைப்பு!’ -இது பழைய செய்தி என்றாலும், 'இந்தியாவில், மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகளை ஏழைகள்கூட வாங்குவது இல்லை!’ என்ற பேரதிர்ச்சி செய்தியை வாசிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

இந்தியாவில், யாரும் மாரடைப்புக்கு மருந்து சாப்பிடுவது இல்லையா? அல்லது மலிவு விலை மருந்து கிடைப்பதே மருத்துவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்தாலும் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கவில்லையா? என பல கேள்விகளைக் கிளப்பியிருக்கிறது இந்த ஆய்வு.

நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு விகிதம் அதிகம். எனவே, 'ஒருவருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானால், அவருக்கு மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்கான சிகிச்சையையும் சேர்த்தே அளிக்க வேண்டும்’ என்கிறது ஒரு மருத்துவக் குறிப்பு!

இதுகுறித்து 'நீரிழிவு மருத்துவ நிபுணர்’ டாக்டர் கருணாநிதியிடம் பேசினோம். ''இந்த ஆய்வின் முடிவு நூற்றுக்கு நூறு சரி! ஆனால், நம்மூரைப் பொறுத்தவரை எந்த நோய் வந்தாலும் முதலில், கை மருந்து, அடுத்ததாக மெடிக்கல் ஷாப் என 'தனக்கு தானே மருத்துவம்’ செய்துகொள்கிறார்கள். முடியாத பட்சத்தில்தான் சிறப்பு மருத்துவர்களை அணுகுகிறார்கள்.

இதுபோல், நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சைகள் பலனளிக்காது. அறுவை சிகிச்சை மாதிரியான உச்சகட்ட சிகிச்சை முறைகளைத்தான் செய்தாக வேண்டும். மருத்துவ விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால், ஆரம்பக்கட்டத்திலேயே விலை குறைந்த மருந்து களால், மாரடைப்பை சரி செய்துவிட முடியும்!'' என்று நம்பிக்கை ஊட்டியவர் தொடர்ந்து, ''பெரும்பாலும் மரபு ரீதியாகவே இந்தியர்களின் ஜீன்களில் கடத்தப்படும் இந்நோய்க்கு அதிகம் பலியாவது ஆண்கள்தான்.

பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனானது மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், நீரிழிவு பாதிப்பு உள்ள பெண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய (ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு விடுவதால்) பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கு நிகராகவே இருக்கிறது.

ஒரு குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு வந்தால், பின்னாளில் வாரிசுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாற்பது வயதில், குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் குடும்பத் தலைவரை இந்நோய் தாக்கும்போது மனதாலும், மருத்துவச் செலவுகளாலும் ஒட்டுமொத்தக் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது.

மாரடைப்பை சரிசெய்யக்கூடிய அறுவை சிகிச்சை செலவுகள் சாதாரண மருத்துவமனைகளிலேயே லட்சங்களில்தான் ஆரம்பிக்கிறது. எனவே, இந்நோய் பாதிப்பு உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது முப்பது வயதில் இருந்தே வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக 'கொலஸ்ட்ரால் டெஸ்ட்’ (fasting lipid profile) எடுத்துக் கொள்ளவேண்டும். இதில், 'எல்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவுக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது 'ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவு குறைவாக இருந்தாலோ உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

ரத்தக் கொதிப்பு, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், உடற்பயிற்சியே செய்யாதவர்கள், அதிக உடல் எடையுடன் கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்குத் தொடர்ச்சியான உடற்பயிற்சியும், டயட் இருப்பதுமே சிறந்த வழி.

பெரும் பான்மையானவர்களால் இதனை சரிவரப் பின்பற்ற முடியவில்லை. அதனால்தான் 'STATIN’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்கள். கொழுப்பைக் குறைக்கக்கூடிய இந்த மருந்து பல ரகங்களில், மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனாலும், டாக்டரின் ஆலோசனையின்படி, நல்ல தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்துவது பக்க விளைவுகளைக் குறைப்பதோடு, நல்ல பலனையும் கொடுக்கும்.

இந்த 'STATIN’ வகை மருந்துகளைத் தவறாமல் சாப்பிட ஆரம்பித்தால் மாரடைப்பு வராமலே தடுக்கமுடியும். மாரடைப்பு வந்தபிறகும்கூட இதே மருந்தின் அளவை அதிகமாகப் பயன்படுத்தும்பொழுது, கொழுப்பின் அளவு நாற்பதில் இருந்து ஐம்பது சதவிகிதம் வரை குறைந்துவிடுவதால், மாரடைப்பு அபாயமும் முற்றிலும் நீங்கிவிடுகிறது.

'க்ரீன் அண்ட் க்ரெய்ன்’ எனப்படும் பச்சைக் காய்கறிகள், பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை மற்றும் பயிறு வகைகள், மோர்.... போன்ற உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. தினமும் அரை மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி செய்யலாம்; அல்லது உடலுக்கும், மனதுக்கும் தெம்பூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி செய்யலாம்.
மாடிப்படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, எந்திர உதவி இல்லாமல் நாமே வீட்டு வேலைகளை செய்துவருவதும் கொழுப்பைக் குறைக்க உதவும் நல்ல உடற்பயிற்சிகள்'' என்றார் விளக்கமாக.
டாக்டர் சொன்னதையெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணுங்க. ஹார்ட் அட்டாக்குக்கு குட்பை சொல்லுங்க!
.
நன்றி: pettagum.blogspot.in

Engr.Sulthan