Thursday, July 21, 2011

உங்கள் கணணியை வைரஸ் தொல்லையிலிருந்து பாதுகாக்க


உங்கள் கணணியை வைரஸ் தொல்லையிலிருந்து பாதுகாக்க

&
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட் கட் கீகள்



உங்கள் கணணியை வைரஸ் தொல்லையிலிருந்து பாதுகாக்க

வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணணியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம்.
ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம்.
அவ்வப்போது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர்.
அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும்.
மென்பொருளை நிறுவும் போது லைசன்ஸ் கீக்கான கோப்பை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக் கொள்ளவும்.
இந்த அவாஸ்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளானது நம்முடைய கணணியை வைரஸ்களிடம் இருந்து முழுமையாக காப்பாற்ற கூடியது ஆகும்.




இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக்கூடிய சில முக்கிய ஷார்ட் கட் கீகள் தரப்பட்டுள்ள.
Ctrl + +(plus sign): இணையப் பக்கத்தை பெரிதாக்கிட.
Ctrl + – (minus sign): பெரிதாக்கிய இணையப் பக்கத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர.
Ctrl + O: இணையப் பக்கத்தினைத் திறக்க.
Ctrl + S: இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேமித்திட.
Ctrl + Shift + Tab: பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல.
Ctrl + Tab: பிரவுசர் டேப்களில் பின் முன் நோக்கிச் செல்ல.
Ctrl + T: புதிய பிரவுசர் டேப் திறக்க.
Ctrl + w: அப்போதைய பிரவுசர் டேப்பினை மூடிட.
Ctrl + K: அப்போதைய பிரவுசர் டேப்பினை கொப்பி செய்து திறந்திட.
Ctrl + N: புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்க.
Ctrl + J: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரவிறக்க மேனேஜரைத் திறந்திட.
Ctrl + L: புதிய இணைய முகவரியினை டைப் செய்திட அட்ரஸ் பாரைத் தேர்ந்தெடுக்க.
Ctrl + B: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பேவரிட்ஸ் குறிப்புகளை ஒழுங்குபடுத்த.
Ctrl + D: இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்திட.



2 attachments — Download all attachments  
image003.pngimage003.png
5K   View   Download  
oledata.msooledata.mso
6K   Download