விண்டோஸ் 8 முழுமையாக வர வில்லையே. மக்கள் இன்னும் பரவலாகப் பயன்படுத்தவில்லையே! அதற்குள் அதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளா! என வாசகர்கள்< வியப்பது தெரிகிறது. இந்த முறை மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கன்ஸ்யூமர் பிரிவியூவினை மிக எளிதாகத் தந்துள்ளதால், விண்டோஸ் 7 பயன்படுத்து பவர்கள் பலர் விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வரும் கடிதங்கள் வாசகர் களின் இந்த இனிய முயற்சிக்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளன. எனவே நாமும் வாசகர்கள் அனைவரையும் இந்த ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்திற்குத் தயார் செய்திடும் வகையில் சிஸ்டத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளை இங்கு தொகுத்து தந்துள்ளோம்.
விண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.
Windows Key + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
Windows Key + Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
Windows Key + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
Windows Key + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.
Windows Key + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
Windows Key + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.
Windows Key + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.
Windows Key + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.
Windows Key + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.
Windows Key + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற
Windows Key+ X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க
Windows Key +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட
Windows Key + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல
Windows Key +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல
Windows Key +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர
Windows Key +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர
Windows Key + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.
Windows Key + Enter : Narrator இயக்கப்படும்.
Windows Key + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.
Windows Key + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Windows Key + U :Ease of Access Center திறக்கப்படும்.
Windows Key + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
Windows Key + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.
Windows Key +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை,
Windows Key + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
Windows Key + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
Windows Key + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.
Windows Key + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
Windows Key + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.
Windows Key + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Windows Key + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
Windows Key + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
Windows Key + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Windows Key + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
Windows Key + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
Windows Key + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
Windows Key + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
Windows Key + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
Windows Key + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
Windows Key + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.
Windows Key + F1: Windows Help and Support இயக்கப்படும்.
Windows Key இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்
Page Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.
Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.