உங்களுக்குத் தொழ வைக்கமுன்
நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.
நடைபயிற்சி
அக்குபஞ்ச்சர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், இது சைக்கிள் டயரை பஞ்ச்சர் செய்வதுபோல,நம்முடைய பாதத்தை பஞ்ச்சர் செய்து சில வியாதிகளை பக்குவப்படுத்துவதுதான் அது அல்லாஹ் நம் பாதத்தை நடப்பதற்காகத்தான் படைத்து இருக்கின்றான்..நடக்காமல் நந்திபோல் இருப்பதால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை நாம் பார்த்து / அனுபவித்து கொண்டு இருக்கின்றோம்.அல்லாஹ் காப்பானாக அமீன்
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு சென்சர் (sensor) புள்ளி நம் பாதத்தில் உண்டு,அங்குதான் அதன் நரம்புகள் முடிவடைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன, கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும், இதயம் வலப்புற பாதத்தில் உள்ளதை அறியலாம்,அந்த சென்சார் புள்ளிகளை மசாஜ் செய்வது மூலம்,அதன் வலிகளை குணப்படுத்த முடியும் என்று பஞ்ச்சர் செய்பவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ் நாம் நடக்க பாதத்தை வைத்து அதன் மூலம் நம் உறுப்புகளை சுறுசுறுப்படைய செய்கின்றான் அதனால் தொடர்ந்து உறுப்புகளை மசாஜ் செய்வோமா அட அதாங்க “வாக்கிங்” போவமா நண்பர்களே
இரத்தவகையும், குணங்களும்
முயற்சிதான் மெய் வருத்தக்கூலிதரும் என்ற சொல்லுக்கு ஏற்ப, நாம் எந்த் அளவிற்கு தூய்மையான எண்ணத்துடன் முயற்ச்சி செய்கிறோமோ அந்த அளவிற்குத்தான் வெற்றி கிட்டும், அடுப்பே எரிக்காமே அல்லாஹ் சோறு தருவான் என்றிருப்பது மடமையின் உச்சகட்டம்
ஒரு சில ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த தகவல்கள் படி வெவ்வேறு இரத்த குருப்பை சேர்த்தவர்களின் குணாதிசியங்கள் எப்படி இருக்கு என்று பார்ப்போம். இது உங்கள் குணங்களுடன் ஒத்து போகவில்லையென்றால் எனக்கெதிரா எதுவும் கேஸ் போட்டுராதீங்க.. !
‘O” டைப்
எதற்க்கும் தலைமை தாங்க வேண்டும் என்ற விருப்பம், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தாகம் அதனை அடையும் வரை களைப்படையாத முயற்ச்சி,உங்களை நம்பலாம் அவ்வளவு நல்லவரு நீங்க,ஆனா சாதனைகள் செய்தாலும் பெருமை அடித்துக்கொள்வீர்கள் கொஞ்சம் பொறாமையும் உங்களிடம் உண்டு
‘A” டைப்
உங்களுக்கு ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பு ரொம்ப அதிகம்,மற்ற ஆள்கள் கூட பழகkகூடிய,பொறுமையாக உள்ள அன்பானவங்க நீங்க கொஞ்சம் பிடிவாத குணமும்,பரபரப்பாகவும் திரிவீங்க நீங்க
’B” டைப்
நீங்க கொஞ்சம் அப்படியும் இப்படியும் உள்ள நபர்தான், முகத்திற்கு நேரா பேசக்கூடிய ஆள்தான் உங்க வழியிலயே எல்லாத்தையும் செய்ய விரும்புவீங்க.கிரியேட்டிவிட்டி யும் உங்களிடம் உண்டு ,ஆனால் நீங்க தனியாக சும்மா கம்பு போல நின்று செயல்களை செய்ய வேண்டும் என்ற குணம் உங்களை சில சமயம் துன்பத்திலும் மாட்டிவிடும்
“AB” டைப்
கூலான / கட்டுப்பாடனா ஆள்தான் நீங்க.எல்லாருக்கும் உங்களை பிடிக்கும், இயற்கையாகவே மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்ற குணம் உங்களிடம் மேலோங்கி இருக்கும்,ஆனா உங்களக்கு நட்ப்போட பழகத்தெரியாது, ஒரு விசயத்தில் 'டக்'கென்று முடிவெடுக்கவும் தெரியாது
என்னங்க! தகவல்கள் நல்லா இருந்துச்சா இல்லை புளிச்சமாவை அரைத்த கதைதானா!?
உன் செயல்கள் அனைத்தும்
உன் எண்ணங்களின் படிதான் நடக்கும்.
( நபி மொழி !!!)
M.Zahir husseன்